2,4,6-முக்குளோரோ அனிலின்
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
2,4,6-முக்குளோரோ அனிலின் | |||
இனங்காட்டிகள் | |||
634-93-5 | |||
ChEMBL | ChEMBL1894620 | ||
ChemSpider | 11961 | ||
EC number | 211-219-8 | ||
InChI
| |||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
பப்கெம் | 12471 | ||
| |||
UNII | J7IC72N9B0 | ||
UN number | 2811 | ||
பண்புகள் | |||
C6H4Cl3N | |||
வாய்ப்பாட்டு எடை | 196.46 g·mol−1 | ||
தோற்றம் | நீண்ட ஊசிகள் அல்லது மெல்லிய, வெளிர் ஊதா நிற இழைகள்[1] | ||
உருகுநிலை | 78.5 °C (173.3 °F; 351.6 K) | ||
கொதிநிலை | 262 °C (504 °F; 535 K) | ||
40 மி.கி/லிட்டர் | |||
கரைதிறன் | குளோரோஃபார்ம், ஈதர், எத்தனால் [2] | ||
மட. P | 3.69 | ||
ஆவியமுக்கம் | 1.47×10−7 மி.மீ பாதரசம் | ||
காடித்தன்மை எண் (pKa) | 0.07 (இணை அமிலத்திற்கு) | ||
காரத்தன்மை எண் (pKb) | 13.93 | ||
தீங்குகள் | |||
முதன்மையான தீநிகழ்தகவுகள் | தீங்கு விளைவிக்கும், அரிக்கும், நச்சு | ||
GHS pictograms | |||
GHS signal word | அபாயம் | ||
H301, H311, H317, H331, H373, H410, H411 | |||
P260, P261, P264, P270, P271, P272, P273, P280, P301+310, P302+352, P304+340, P311, P312, P314 | |||
தீப்பற்றும் வெப்பநிலை | 110 °C (230 °F; 383 K) | ||
Autoignition
temperature |
சிதைவடையும் | ||
Lethal dose or concentration (LD, LC): | |||
LD50 (Median dose)
|
2400 மி.கி/கி.கி (எலி, வாய்வழி) | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
2,4,6-முக்குளோரோ அனிலின் (2,4,6-Trichloroaniline) என்பது C6H4Cl3N என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். வேதிவினைகளில் 2,4,6-முக்குளோரோ அனிலின் ஓர் இடைநிலையாகப் பயனுள்ளதாக இருக்கும்.[2]
தயாரிப்பு
கார்பன் நாற்குளோரைடின் நீரற்ற கரைசலில் குளோரின் வாயுவுடன் உலர் அனிலின் வினை புரிவதன் மூலம் 2,4,6-முக்குளோரோ அனிலின் தயாரிக்கப்படுகிறது. இவ்வினையில் கரைசலில் இருந்து வெண்மையான திண்மப்பொருளாக 2,4,6-முக்குளோரோ அனிலின் வீழ்படிவாகிறது. கரைசலில் தண்ணீரை அறிமுகப்படுத்தினால், வெள்ளைப் பொருள் பலபடியாக்கல் வினையினால் அனிலின் கருப்பு நிறமாக மாறும்.[3]
பாதுகாப்பு
2,4,6-முக்குளோரோ அனிலின் உற்பத்தி செய்யப்படும் போது அல்லது பயன்படுத்தப்படும் போது தொழில்சார் பணியிடங்களில் அத்தொழிலாளர்களில் இந்த சேர்மம் உள்ளிழுத்தல் மற்றும் தோல் தொடர்பு மூலம் வெளிப்பாடு ஏற்படலாம். சாயங்கள், நிறமிகள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் ஆகியவற்றில் உள்ள 2,4,6-முக்குளோரோ அனிலின் குடிநீர் மற்றும் சருமத் தொடர்பு மூலம் பொது மக்களுக்கும் வெளிப்படுகிறது.[4] உள்ளிழுக்கும் போது அல்லது வாய்வழியாக உட்கொள்ளும்போது 2,4,6-முக்குளோரோ அனிலின் நச்சுத்தன்மையுடையதாக இருக்கும். ஒரு எலிக்கு 2400 மி.கி./கி.கி என்ற 2,4,6-முக்குளோரோ அனிலின் அளவு உயிர்கொல்லும் அளவாகும்.[1]
சூடாக்கும்போது, 2,4,6-முக்குளோரோ அனிலின் எரிப்புக்கு உட்படாது, ஆனால் ஐதரசன் குளோரைடு, நைட்ரசன் ஆக்சைடுகள் அல்லது கார்பன் மோனாக்சைடு ஆகிய வாயுக்கள் வெளியிடப்படுகின்றன.[1]
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 1.2 "2,4,6-Trichloroaniline(634-93-5) MSDS Melting Point Boiling Point Density Storage Transport". www.chemicalbook.com. பார்க்கப்பட்ட நாள் 2019-03-14.
- ↑ 2.0 2.1 Pubchem. "2,4,6-Trichloroaniline". pubchem.ncbi.nlm.nih.gov (in English). பார்க்கப்பட்ட நாள் 2019-03-14.
- ↑ "Synthesis of 2,4,6-trichloroaniline". PrepChem.com (in English). 2016-08-15. பார்க்கப்பட்ட நாள் 2019-03-13.
- ↑ "TOXNET". toxnet.nlm.nih.gov. Archived from the original on 2019-03-31. பார்க்கப்பட்ட நாள் 2019-03-14.