2,4,5-மூவைதராக்சி ஆம்பெட்டமைன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
2,4,5-மூவைதராக்சி ஆம்பெட்டமைன்
படிமம்:2,4,5-trihydroxyamphetamine.svg
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
5-(2-அமினோபுரோப்பைல்)-1,2,4-பென்சீன் டிரையால்
இனங்காட்டிகள்
136706-33-7
ChemSpider 112205
யேமல் -3D படிமங்கள் Image
  • CC(N)CC1=C(O)C=C(O)C(O)=C1
பண்புகள்
C9H13NO3
வாய்ப்பாட்டு எடை 183.21 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

2,4,5-மூவைதராக்சி ஆம்பெட்டமைன் ( 2,4,5-Trihydroxyamphetamine) என்பது C9H13NO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிமவேதியியல் சேர்மமாகும். 2,4,5 – டிரையைதராக்சி ஆம்பெட்டமைன் என்ற பெயராலும் அழைக்கப்படும் இச்சேர்மம் ஒரு நரம்பு வழி நச்சாகும். மெத்திலீன் ஈராக்சி மெத் ஆம்பெட்டமைனின் வளர்சிதை மாற்ற பொருள் என்று இச்சேர்மம் கருதப்படுகிறது. 3,4-மெத்திலீன் ஈராக்சி ஆம்பெட்டமைனை வளைய ஐதராக்சிலேற்றம் செய்வதனால் 2,4,5-மூவைதராக்சி ஆம்பெட்டமைன் கிடைக்கிறது.

குறுகிய கால சிகிச்சைக்குப் பின்னர் மூளையின் பின்புற மேட்டில் டிரைப்டோபன் ஐதராக்சிலேசு என்ற நொதியின் செயல்பாட்டை 54% குறைப்பதாக ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. [1] முன்புற மூளையில் டைரோசின் ஐதராக்சிலேசு நொதியின் செயல்பாட்டை இச்சேர்மம் கணிசமாகக் குறைப்பதாக மற்றொரு ஆய்வு தெரிவிக்கிறது. [2]

மேற்கோள்கள்

  1. "Short-term effects of 2,4,5-trihydroxyamphetamine, 2,4,5-trihydroxymethamphetamine and 3,4-dihydroxymethamphetamine on central tryptophan hydroxylase activity.". J Pharmacol Exp Ther 265 (2): 813–8. May 1993. பப்மெட்:8496826. 
  2. "Short-term effects of 2,4,5-trihydroxyamphetamine, 2,4,5-trihydroxymethamphetamine and 3,4-dihydroxymethamphetamine on central tryptophan hydroxyls activity". J Pharmacol Exp Ther 265 (2): 813–818. 1993. பப்மெட்:8496826.