1982 பொதுநலவாய விளையாட்டுக்கள்
1982 பொதுநலவாய விளையாட்டுக்கள் (1982 Commonwealth Games) ஆத்திரேலியாவின் குயின்சுலாந்து மாநிலத்திலுள்ள பிரிசுபேன் நகரத்தில் 1982 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி முதல் அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி வரை நடைபெற்றது. திறப்பு விழா பிரிசுபேன் நகரத்தின் புறநகர்ப் பகுதியான நாதனில் உள்ள ராணி இரண்டாம் எலிசபெத்து விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இந்த அரங்கத்தில் இந்நிகழ்வின் தடகள மற்றும் வில்வித்தை போட்டிகள் நடைபெற்றன.[1] மற்ற நிகழ்வுகள் சாண்ட்லரில் உள்ள சிலீமன் விளையாட்டு வளாகத்தில் நடைபெற்றன.
நீதிபதி எட்வார்டு வில்லியம்சு 1982 பொதுநலவாய விளையாட்டுக்களின் தலைவராக இருந்தார்.[2] 1978 ஆம் ஆன்டு நட்டைபெற்ற தேசியப் போட்டிகளில் வெற்றி பெற்ற பாவ்லோ பெரீரா போட்டிக்கான சின்னத்தை வடிவமைத்தார்.[3]
பங்கேற்பாளர்கள்
காமன்வெல்த் அமைப்பின் 46 உறுப்பு நாடுகளும் அதன் ஆட்சி பகுதியில் இருந்தும் சுமார் 1582 தடகள வீரர்கள் பங்கேற்றனர் .
விளையாட்டுக்கள்
தடகளம், வில்வித்தை, இறகுப்பந்து, குத்துச்சண்டை, மிதிவண்டி, துப்பாக்கி சுடுதல், நீச்சல், பளு தூக்குதல் மற்றும் மல்யுத்தம் போன்ற பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடைபெற்றன.
மேற்கோள்கள்
- ↑ "Queensland Sport and Athletic Centre". Austadiums.com. பார்க்கப்பட்ட நாள் 2016-08-28.
- ↑ "Commemorating the life of Sir Edward Williams". 2004. Supreme Court of Queensland Library. Archived from the original on 20 July 2008. பார்க்கப்பட்ட நாள் 7 December 2015.
- ↑ "Archived copy". Archived from the original on 22 June 2005. பார்க்கப்பட்ட நாள் 2007-02-08.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link)
புற இணைப்புகள்
- Commonwealth Games Official Site
- 1982 Commonwealth Games - Australian Commonwealth Games Association official website