1978 உலகக்கோப்பை காற்பந்து
வார்ப்புரு:Infobox international football competition 1978 உலகக்கோப்பை காற்பந்து, நான்காண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் உலகக்கோப்பை காற்பந்தின் 11வது நிகழ்வாகும். இது அர்கெந்தீனா சூன் 1 முதல் 25 வரை நடைபெற்றது.
அர்கெந்தீனா கூடுதல் நேரம் வரை சென்ற இறுதியாட்டத்தில் நெதர்லாந்தை 3–1 என்ற இலக்குகளில் வென்று இந்த உலகக்கோப்பையை வென்றது. இது அர்கெந்தீனாவிற்கான முதல் கோப்பையாகும். உருகுவை, இத்தாலி, இங்கிலாந்து மற்றும் மேற்கு செருமனி நாடுகளை அடுத்து போட்டியை நடத்தி கோப்பையையும் வென்ற ஐந்தாவது நாடாக ஆனது. அர்கெந்தீனா, நெதர்லாந்து மற்றும் பிரேசில் முறையே தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை வென்றன.
உலகக்கோப்பை போட்டிகளுக்கு முதன்முறையாக நூற்றுக்கு மேற்பட்ட நாடுகள் இந்த உலகக்கோப்பையில் தான் பங்கேற்றன.[1] முதன்மையான காற்பந்து அணியான உருகுவை தகுதிச் சுற்றுக்களில் தோற்றது குறிப்பிடத்தக்கது.