1911 (திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
1911
இத்திரைப்படத்தின் சுவரொட்டி ஆகும்.
இயக்கம்ஜாக்கி சான்
ஜாங் லீ
தயாரிப்புவாங் செபின்
வாங் டின்யுன்
பீ ஷுலின்.
கதைவாங் ஜிங்டோங்
சென் பாவ்குவாங்
இசைடிங் வேய்
நடிப்புஜாக்கிசான்
வின்ஸ்டன் சாவோ
லீ பீங்பிங்
ஒளிப்பதிவுஜாங் லீ
ஹுவாங் வேய்
படத்தொகுப்புயாங் ஹாங்க்யு
கலையகம்ஜெசிஇ (JCE) திரைப்படம் குழுமம்.


சாங் யிங் திரைப்படக் குழு நிறுவனம்.
சாங்காய் திரைப்படக் குழு நிறுவனம்.
சாங்காய் திரைப்படப் படமனை.
பெய்ஜிங் அல்னயர் கலாச்சாரம் மற்றும் ஊடகம்.
ஜியாங்சு ஒலிபரப்பு நிறுவனம்.
ஜாக்கி சான் அனைத்துலக சினிமா கலாச்சார உடமைகள்.
சியெசியாங் திரைப்பட படமனை.
சீனா நகரம் கட்டுமான உடைமைக் குழு.
ஹெபெய் திரைப்படப் படமனை.
டாய்ன்ஜின் வடக்குத் திரைப்படக் குழு.
ஊடக ஆசியத் திரைப்படங்கள்.


குவக்சியா திரைப்பட விநியோகம்
விநியோகம்ஊடக ஆசியா விநியோகம் (ஹாங்காங்) (ஹாங்காங்)
குவக்சியா திரைப்பட விநியோகம்
கிழக்குத் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி விநியோகம் (சீனா)
வெளியீடுசெப்டம்பர் 23, 2011 (2011-09-23)(சீனா[1])
29 செப்டம்பர் 2011 (ஹாங்காங்[2])
ஓட்டம்125 நிமிடங்கள்
நாடுசீனா
ஹாங்காங்
மொழிமாண்டரின்
ஆங்கிலம்
ஆக்கச்செலவு250 கோடி[3]

முன்னுரை

1911 2011 ஆம் ஆண்டு வெளிவந்த சீன மொழித் திரைப்படமாகும். இப்படமானது சீனாவில் நடந்த மன்னராட்சிக்கு எதிரான சுதந்திர சீனப் புரட்சியைக் குறித்த சம்பவங்களை மையமாகக் கொண்டு இயக்கப்பட்ட வரலாற்றுத் திரைப்படமாகும்.[4] இப்படத்தை ஜாக்கி சான் மற்றும் ஜாங் லீ இயக்கத்தில் உருவான இத் திரைப்படத்தில் சாக்கி சான் மற்றும் அவரது மகன் ஜாய்சி சான் இணைந்து நடித்துள்ளனர். மேலும் இத்திரைப்படம் சாக்கிசானின் 100 வதுத் திரைப்படம் ஆகும்.

கதைத்திட்டம்

இத்திரைப்படத்தின் கதை சீனாவில் 1644 ஆம் ஆண்டு முதல் 1912 ஆம் ஆண்டு வரை சீனாவில் மன்னராட்சிக்கு எதிராக நாடைபெற்ற சுதந்திரச் சீனப் புரட்சிப் போராட்டங்களை குறித்த முக்கிய நிகழ்வுகளை மையமாகக் கொண்டு இத்திரைப்படம் இயக்கப்பட்டுள்ளது. இப்புரட்சிப்படைத் தளபதி ஹுவாங் சிங் (ஜாக்கி சான்) என்பவர் புரட்சிப் படையைத் தலைமையேற்று வழி நடத்துகிறார். இப் புரட்சிப் படையின் தலைவர் சுன் இ சியன் (வின்ஸ்டன் சாவோ) சீனப் புரட்சிக்காக வெளிநாட்டில் இருந்துக் கொண்டு பணம் திரட்டி புரட்சிப் படைகளுக்கு உதவியும் ஊக்கமும் கொடுக்கின்றார். மேலும் சீனப் புரட்சியை ஒடுக்கும் முயற்சியாக சீனவின் ராணி இங்கிலாந்திடம் பணம் கடனாகக் கேட்கிறார். மேலும், அதர்க்கு இங்கிலாந்து சீனாவின் தொடருந்துவை (Rail Way) குத்தகைக்கு தர வேண்டும் என்கின்ற சில நிபந்தனைகளுடன் கடன் கொடுக்க சம்மதிக்கிறது. அதன் பின்னர் சுன் இ சியன் தன் நாட்டு தொடருந்து மற்றும் புரட்சிப் படைக்காகவும் இங்கிலாந்து சென்று சீன ராணிக்கு பணம் தரக்கூடது எனவும், தன் புரட்சிப் படையின் போர் நன்மைகளைப் பற்றியும் இங்கிலாந்திடம் எடுத்துக் கூறுகிறார். அதன் பின்னர் இங்கிலாந்து சீன ராணிக்கு கடன் கொடுக்க மறுத்து விடுகிறது. மேலும் சீனப்புரட்சி சிப்பாய் கலகமாக வெடிக்கிறது. புரட்சிப் படை சீன நாட்டின் பாதிப் பகுதியை கைப்பற்றுகிறது, அதன் பின் வெளிநாட்டில் இருந்து சு இசியன் சீனாவிற்கு வருகிறார். பின்னர் பிற மாநிலங்களின் தலைமை பிரதிநிதியுடன் கூடிப் பேசி தற்காலிக முதல் குடியரசுத் தலைவராக சுன் இசியை நியேமிக்கப் படுகிறார். மேலும் போர் வலுவடைந்து மொத்தச் சீனாவையும் புரட்சிப்படை கைப்பற்றுகிறது, அதன் பிறகு சுதந்திரமான தேர்தல் மூலம் குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று சுன் இசியன் அவர்கள் பதவி விலகுகிறார். அதன் பின் மக்களால் மார்ச் 10, 1912 ஆம் ஆண்டு யுவான் ஷிக்காய் (சன் சுன்) என்பவர் பெய்ஜிங்கின் புதிய குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

வெளியீடு

1911 இத் திரைப்படத்தை செப்டம்பர் 23, 2011 அன்று சீனாவிலும்,[1] மற்றும் செப்டம்பர் 29, 2011 அன்று ஹாங்காங்கிலும் வெளியிடப்பட்டது.[2] மேலும் அக்டோபர் 7, 2011 அன்று அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளின் திரையரங்குகள் முழுவதிலும் இதன் அசல் பதிப்பு வெளியானது. மேலும் இப்படத்தை தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு நவம்பர் 18, 2011 ஆம் ஆண்டு தமிழ் நாட்டில் வெளிவந்தது.[5]

ஆதாரம்

வெளியிணைப்பு

"https://tamilar.wiki/index.php?title=1911_(திரைப்படம்)&oldid=29188" இருந்து மீள்விக்கப்பட்டது