1882 சேலம் கலவரம்
1882 சேலம் கலவரம் என்பது தமிழ்நாட்டில் சேலம் நகரில் 1882 ஆம் ஆண்டு இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல்களைக் குறிக்கிறது.
நகரின் செவ்வாய்ப்பேட்டைப் பகுதியில் இந்து சமய ஊர்வலம் செல்லும் வழியில் ஒரு மசூதி கட்டப்படுவதற்கு இந்துக்கள் எதிர்ப்புத் தெரிவித்ததே இக்கலவரத்தின் மூல காரணமென நம்பப்படுகிறது. மசூதி கட்டப்பட்டபின்பு அவ்வழியில் ஊர்வலமாகச் செல்ல இந்துக்கள் முயன்றதால் மோதல் ஏற்பட்டது. ஆகஸ்ட் 1882 இல் நிலை கட்டுக்கடங்காமல் போனது. மூன்று நாட்களுக்கு சென்னை மாகாணத்தின் பிரித்தானிய அதிகாரிகள் நகரின் கட்டுப்பாட்டை இழந்தனர். மசூதி இடிக்கப்பட்டதுடன் இரு தரப்பிலும் பலர் கொல்லப்பட்டனர். அமைதி திரும்பியபின்னர் காலனிய அரசு கலவரத்துக்குக் காரணமானவர்கள் என பலரை அடையாளம் கண்டு கைது செய்தது. வழக்கு விசாரணை விரைவாக முடித்து அவர்களை அந்தமான் சிற்றறைச் சிறையில் அடைத்தது. இந்திய தேசியவாதிகளே கலவரத்தைத் தூண்டி விட்டனர் என்று குற்றம் சாட்டியது. மாகாண நிருவாகத்தின் செயல்பாடு பாரபட்சமானதென தேசியவாதிகளும், த இந்து நாளிதழும் குற்றம் சாட்டினர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான சேலம் விஜயராகாவாச்சாரியார் தான் குற்றமற்றவர் என நிறுவி விடுதலை பெற்றார். மாகாண நிருவாகத்திடமிருந்து நட்ட ஈடும் பெற்றார்.[1][2][3][4]