1842
Jump to navigation
Jump to search
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1842 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1842 MDCCCXLII |
திருவள்ளுவர் ஆண்டு | 1873 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2595 |
அர்மீனிய நாட்காட்டி | 1291 ԹՎ ՌՄՂԱ |
சீன நாட்காட்டி | 4538-4539 |
எபிரேய நாட்காட்டி | 5601-5602 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1897-1898 1764-1765 4943-4944 |
இரானிய நாட்காட்டி | 1220-1221 |
இசுலாமிய நாட்காட்டி | 1257 – 1258 |
சப்பானிய நாட்காட்டி | Tenpō 13 (天保13年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 2092 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 12 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4175 |
1842 (MDCCCXLII) ஒரு சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும், அல்லது பழைய 12 நாட்கள் பின்னோக்கிய ஜூலியன் நாட்காட்டியில் வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.
நிகழ்வுகள்
- சனவரி 6-13 - காபூலில் இருந்து ஜலாலாபாத் வரையான சாலையில் அக்பர் கான் தலைமையிலான படைகள் வில்லியம் எல்பின்ஸ்டன் தலைமையிலான பிரித்தானிய, இந்தியப் படையினரைத் தாக்கியதில் 16,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
- மார்ச் 30 - அறுவை சிகிச்சைகளில் முதன்முதலாக மயக்க மருந்து குரோஃபோர்ட் லோங் என்பவரினால் பயன்படுத்தப்பட்டது.
- மே 8 - பாரிஸ் அருகில் இரண்டு தொடருந்துகள் மோதித் தீப்பிடித்ததில் 59 பேர் கொல்லப்பட்டனர்.
- ஆகத்து 9 - ஐக்கிய அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையில் ரொக்கி மலைகளின் கிழக்குப் பகுதியில் எல்லைகளுக்கான உடன்பாடு எட்டப்பட்டது.
- ஆகத்து 10 – சுரங்கத் தொழிலில் பெண்கள், மற்றும் 10 வயதுக்கும் குறைவான சிறுவர்கள் வேலைக்கமர்த்துவது இங்கிலாந்தில் தடை செய்யப்பட்டது.
- ஆகத்து 21 - டாஸ்மானியாவின் தலைநகர் ஹோபார்ட் நகரம் அமைக்கப்பட்டது.
- ஆகத்து 29 – நாஞ்சிங் உடன்படிக்கையின் படி முதலாவது ஓப்பியம் போர் முடிவுக்கு வந்து ஹொங்கொங் பிரித்தானிய குடியேற்ற நாடாக அறிவிக்கப்பட்டது.
- அக்டோபர் - முதலாவது வாசிக சாலை யாழ்ப்பாணத்தில் திறக்கப்பட்டது. இதுவே பின்னர் யாழ்ப்பாணப் பொது நூலகம் ஆனது[1].
- அக்டோபர் 22 - வண்ணார்பண்ணையில் சைவப் பள்ளி ஆரம்பிக்கப்பட்டது[1].
- அக்டோபர் 29 – ஐபீரியக் குடாவில் சூறாவளி தாக்கியது.
- நவம்பர்-டிசம்பர் - மன்னாரில் வாந்திபேதி நோய் பரவியதில் 500 பேர் வரை இறந்தனர்[1].
நாள் குறிக்கப்படாதவை
- டாப்ளர் விளைவு என்பதை ஆஸ்திரிய இயற்பியலாளர் கிறிஸ்டியன் டாப்ளர் முன்மொழிந்தார்.
- ஆஸ்திரேலியாவின் பிறிஸ்பேன் நகரில் மக்கள் குடியேற்றம் அனுமதிக்கப்பட்டது.
பிறப்புகள்
இறப்புகள்
- சூன் 2 - ப. கந்தப்பிள்ளை (ஆராய்ச்சிக் கந்தர்), புலவர், மருத்துவர் (நாவலரின் தந்தை)
1842 நாட்காட்டி
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.