180 (இந்தியத் திரைப்படம்)
180 (180 (2011 Indian film) 2011 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதியன்று வெளிவந்த இந்தியத் திரைப்படம் ஆகும்.[1][2] இதனை ஜெயேந்திரா என்பவர் இயக்கினார். தற்போது எசு.பி.ஐ சினிமா நிறுவனம் என்று அழைக்கப்படும் சத்யம் சினிமாஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்தது. இது தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் ஒரே சமயத்தில் படமாக்கப்பட்டது. தமிழில் நூற்றெண்பது எனும் பெயரில் வெளியானது.[3] இதற்கான கதையை சுபா, ஜெயேந்திரா மற்றும் உமர்ஜி அனுராதா ஆகியோர் எழுதினர். இதில் சித்தார்த், பிரியா ஆனந்து, நித்யா மேனன் ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்தனர். மௌலி (இயக்குநர்), தனிகில்லா பரணி, கீதா ஆகியோர் துணைக் கதாப்பத்திரங்களில் நடித்தனர். சரேத் என்பவர் இசையமைத்துள்ளார்.[4] இரண்டு மொழிகளிலும் சூன் 25, 2011 இல் வெளியானது.
கதைச் சுருக்கம்
மருத்துவர் அஜய் குமார் (சித்தார்த்) சென்னைக்கு வருகிறார். தெலுங்குப் பதிப்பில் ஐதராபாத்து வருகிறார். அங்கு தனது பெயர் மனோ என்று அறிமுகம் செய்கிறார். எஸ். வி எஸ். மூர்த்தி (மௌலி (இயக்குநர்) - ஜெயம் (கீதா) எனும் வயதான தம்பதியர்களின் வீட்டில் வாடகைக்கு குடியேறுகிறார். தனது [[வாழ்க்கை பிறருக்குப் பயனுள்ள வகையில் அமைய வேண்டும் என நினைக்கிறார். அனைவரிடமும் சகோதரத்துவத்துடன் பழகுவதால் அனைவருக்கும் இவரை பிடித்துப் போகிறது. பத்திரிக்கையாளரான வித்யலட்சுமியும் (நித்யா மேனன்) இவரும் நண்பர்களாகின்றனர். பிறருக்கு நன்மை செய்வதன் மூலம் மகிழ்ச்சியடையும் நபராக அஜய் உள்ளார். நித்யாவின் உதவியுடன் தெருவில் உள்ள சிறுவர்களுக்கு கல்வி கிடைக்க வழி செய்கிறார். இந்த நல்ல குணங்களால் வித்யா காதல் வயப்பட்டுத் தனது காதலை அஜயிடம் கூறுகிறார். ஆனால் யாரிடமும் எதுவும் கூறாமல் அஜய், அந்த நகரத்தை விட்டுச் செல்கிறார்.
கதை, அஜயின் நினைவு மீட்பிற்குச் செல்கிறது. அஜய் சான் பிரான்சிஸ்கோவில் மருத்துவராகப் பணிபுரிகிறார். அங்கு ரேனுகா நாராயணனைச் (பிரியா ஆனந்து) சந்திக்கிறார். இவர் உட்புற வடிவமைப்பாளராகப் பணிபுரிகிறார். இவர்கள் இருவருக்கும் திருமணம் நடக்கிறது. பின் அஜய் கணைய புற்று நோயினால் பாதிக்கப்படுகிறார். அவர் ஆறு மாதங்கள் மட்டும் தான் உயிர் வாழ முடியும் என்ற சூழ்நிலை வருகிறது. இதனால் தான் இந்தத் திரைப்படத்திற்கு 180 என தலைப்பிட்டனர். அஜய் சென்னையை விட்டுச் செல்லும் போது வித்யா ஒரு
காயமடைந்ததைப் பார்க்கிறார். எனவே அவரை உடனே சான் பிரான்சிஸ்கோவில் உள்ள மருத்துவமனைக்குக் கூட்டிச் செல்கிறார். அங்கு தனது நண்பரான சாம்பசிவத்தைச் சந்திக்கிறார். அவர் ரேனுவை சந்திக்குமாறு அறிவுறுத்துகிறார். தான் இல்லாமலே ரேனுவின் வாழ்க்கை மகிழ்ச்சியாகச் செல்வதாகக் கருதி அவரைச் சந்திக்க மறுக்கிறார்.
பின் இந்தியா செல்ல வேண்டிய விமானத்தை தவறவிட்டு பதிலாக பிரேசில் செல்கிறார். அங்கு இரியோ டி செனீரோவில் ஜோஷ் எனும் பெயரில் வாழ்கிறார்.
கதை மாந்தர்கள்
- சித்தார்த் (மருத்துவர் அஜய்)
- பிரியா ஆனந்து (ரேனுகா நாராயணன்)
- நித்யா மேனன் (வித்யா லட்சுமி)
- எஸ். வி எஸ். மூர்த்தி (மௌலி (இயக்குநர்)
- ஜெயம் (கீதா)
ஒலி வரி
180 திரைப்படத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்களுக்கு இசையமைத்தது மலையாள இசையமைப்பாளர் சரேத் ஆவார். மேஜிக் மேஜிக் 3டி , சூன் ஆர் எனும் படங்களைத் தொடர்ந்து 180 இவரின் மூன்றாவது திரைப்படம் ஆகும். தெலுங்கில் கலவரமயே மடிலோ எனும் திரைப்படத்தைத் தொடர்ந்து இது இவரின் இரண்டாவது படமாகும். தமிழ்மொழிக்கான ஒலிவரியானது ஏப்பிரல் 14, 2011 இல் தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று எசு.பி.ஐ சினிமா நிறுவனத்தில் வைத்து வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மணிரத்னம், ஒளிப்பதிவாளர் பி. சி. ஸ்ரீராம் மற்றும் நடிகர்கள் ஆர்யா, ஜெயம் ரவி, சிவா (நடிகர்) மற்றும் 180 திரைப்படத்தில் நடித்த நடிகர்கள் கலந்துகொண்டனர்.[5]அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் மதன் கார்க்கி.
தமிழ் ஒலி வரி | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடகர்கள் | நீளம் | |||||||
1. | "ரூல்ஸ் கிடையாது" | திப்பு | 04:54 | |||||||
2. | "ஏ ஜே" | விது பிரதாப், ரம்யா சுந்தரேசன் கபாடியா | 04:45 | |||||||
3. | "சந்திக்காத கண்களில்" | சித்ரா, உன்னி மேனன், சௌமியா | 03:38 | |||||||
4. | "நியாயம் தானா" (விவேகா) | சரேத் | 04:16 | |||||||
5. | "ராதே ராதே" | ரவிசங்கர், ரம்யா சுந்தரேசன் கபாடியா | 01:37 | |||||||
6. | "நீ கோரினால்" | கார்த்திக், சுவேதா மோகன் | 05:06 | |||||||
7. | "சிறு சிறு கனவுகள்" | வித்யாசங்கர் மாஸ்டர் அஸ்வத் | 03:04 | |||||||
8. | "கன்டிநியூவா" (மணிசர்மா) | டி பிரைடஸ் | 04:17 | |||||||
மொத்த நீளம்: |
31:37 |
மேற்கோள்கள்
- ↑ "180 Tamil Movie Posters 180 Tamil Movie Stills | New Movie Posters" (in en-US). 2011-02-14. https://moviegalleri.net/2011/02/180-tamil-movie-first-look-posters-180-movie-stills.html.
- ↑ "Siddharth 180 Telugu Movie Firstlook Posters | New Movie Posters" (in en-US). 2011-02-14. https://moviegalleri.net/2011/02/siddharth-180-telugu-movie-firstlook-posters.html.
- ↑ "'180' becomes 'Nootrenbadhu' - Tamil Movie News". IndiaGlitz. 11 June 2011 இம் மூலத்தில் இருந்து 14 சூன் 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110614080522/http://www.indiaglitz.com/channels/tamil/article/67581.html. பார்த்த நாள்: 15 September 2011.
- ↑ "Music director Sharreth in 180". ஐங்கரன். 22 January 2011. http://www.ayngaran.com/frame.php?iframepath=newsdetails.php?newsid=4934. பார்த்த நாள்: 17 February 2011.
- ↑ "Who made 180 audio launch special for Sid?". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 14 April 2011 இம் மூலத்தில் இருந்து 5 November 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121105194650/http://articles.timesofindia.indiatimes.com/2011-04-14/news-interviews/29416961_1_jayam-ravi-sid-music.