1775
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1775 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1775 MDCCLXXV |
திருவள்ளுவர் ஆண்டு | 1806 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2528 |
அர்மீனிய நாட்காட்டி | 1224 ԹՎ ՌՄԻԴ |
சீன நாட்காட்டி | 4471-4472 |
எபிரேய நாட்காட்டி | 5534-5535 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1830-1831 1697-1698 4876-4877 |
இரானிய நாட்காட்டி | 1153-1154 |
இசுலாமிய நாட்காட்டி | 1188 – 1189 |
சப்பானிய நாட்காட்டி | An'ei 4 (安永4年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 2025 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 11 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4108 |
1775 (MDCCLXXV) கிரெகொரியின் நாட்காட்டியில் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டு. பழைய யூலியன் நாட்காட்டியில் வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.[1][2][3]
நிகழ்வுகள்
இவ்வாண்டில் ஏப்ரல் 19 இல் அமெரிக்கப் புரட்சி ஆரம்பமானது. சியார்ச் வாசிங்டன் படைத்துறைத் தளபதியாக நியமிக்கப்பட்டார். 13 குடியேற்றங்கள் தமது விடுதலையை அறிவிக்கவில்லை. பிரித்தானிய அரசும், அமெரிக்க அரசும் தனித்தன்யே சட்டங்களை இயற்றின. ஆகத்து 23 இல் இங்கிலாந்தின் மூன்றாம் ஜார்ஜ் மன்னர் அமெரிக்கக் குடியேற்றங்கள் கிளர்ச்சியில் ஈடுபடுவதை நாடாளுமன்றத்தில் நவம்பர் 10 இல் அறிவித்தார்.
ஜேம்ஸ் வாட் நீராவி இயந்திரத்தை வெற்றிகரமாக உருவாக்கி அறிவியல் முன்னேற்றத்திற்கு வழிவகுத்தார். பெரியம்மை நோய் அமெரிக்காவின் நியூ இங்கிலாந்து பிரதேசத்தில் பரவியது. பெரியம்மைக்கு எட்வர்ட் ஜென்னர் தடுப்பு மருந்து கண்டுபிடித்தார்.
- ஜனவரி 17 - கப்டன் ஜேம்ஸ் குக் தெற்கு யோர்சியா மற்றும் தெற்கு சண்ட்விச் தீவுகளை பெரிய பிரித்தானியாவுக்காகக் கைப்பற்றினான்.
- ஆகஸ்டு 29 - செப்டம்பர் 12 - தென் கரொலைனா முதல் நோவா ஸ்கோசியா வரை சூறாவளி தாக்கியதில் 4,170 பெர் கொல்லப்பட்டனர்.
- ஆங்கிலேய-மராட்டியப் போர்கள்: பிரித்தானியருக்கும் மரதர்களுக்கும் இடையில் முதலாவது போர் இடம்பெற்றது.
- பெரிய பிரித்தானியாவில் தொழிற் புரட்சி.
பிறப்புகள்
- ஜனவரி 27 - பிரீடரிக் ஷெல்லிங், செருமனிய மெய்யியலாளர் (இ. 1854)
- டிசம்பர் 16 - ஜேன் ஆஸ்டின், ஆங்கில எழுத்தாளர் (இ. 1817)
இறப்புகள்
1775 நாட்காட்டி
வார்ப்புரு:நாட்காட்டி ஞாயிறு சாதாரண
மேற்கோள்கள்
- ↑ Warren, James Francis (1981). The Sulu Zone, 1768-1898: The Dynamics of External Trade, Slavery, and Ethnicity in the Transformation of a Southeast Asian Maritime State. Singapore: NUS Press. p. 36.
- ↑ de Madriaga, Isabel (January 1974). "Catherine II and the Serfs: A Reconsideration of Some Problems". The Slavonic and East European Review 52 (126): 34–62.
- ↑ "Battles of Lexington and Concord", Britannica Student Encyclopedia, 2006, p. 454,
The American Revolution began on April 19, 1775, with the Battles of Lexington and Concord.