13 - 18 ஆம் நூற்றாண்டு ஈழத்து தமிழ் இலக்கியம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

13 - 18 ஆம் நூற்றாண்டு ஈழத்து தமிழ் இலக்கியம் என்பது யாழ்ப்பாண இராச்சியக் காலம் (1216 - 1621), போர்த்துக்கேயர் காலம் (1621 - 1658), ஒல்லாந்தர் காலம் (1658 - 1796) ஆகிய மூன்று காலப்பகுதிகளைச் சார்ந்த சார்ந்த ஈழத்து தமிழ் இலக்கியம் ஆகும். இதற்கு முந்திய காலத்துடன் ஒப்பிடுகையில், இக் காலப்பிரிவைச் சார்ந்த இலக்கியங்கள் கிடைக்கப்பெற்று, பல பதிப்புப்பெற்று, ஆய்வுசெய்யப்பட்டுள்ளன.[1]

இக் காலப் பகுதியில் வாய்மொழி இலக்கியம், எழுத்து இலக்கியம் ஆகிய இரண்டும் இக் காலப்பகுதியில் தோன்றின.[2] இக் காலப்பகுதியில் தோன்றிய பல நூல்கள் தமிழின் சிற்றிலக்கிய வகைகளைச் சார்ந்தவையாக உள்ளன, குறிப்பாக: பள்ளு, சிந்து, கும்மி, அந்தாதி, அம்மானை, துதி, கோவை.

கால வகைப்பாடு

  • யாழ்ப்பாண/வன்னி இராச்சியக் காலம் (1216 - 1621)
  • போர்த்துக்கேயர் காலம் (1621 - 1658)
  • ஒல்லாந்தர் காலம் (1658 - 1796)

இலக்கிய வகைப்பாடு

  • நாட்டுப்புற இலக்கியம்/வாய்மொழி இலக்கியம்
  • தொழில்சார் பாடல்கள்
  • சமயச் சார்பான பாடல்கள்
  • வரலாற்றுக் கதைப் பாடல்கள்
  • மருத்துவ நூல்கள்
  • சோதிட நூல்கள் / வானவியல் நூல்கள்
  • சைவ சமய நூல்கள்
  • கிறித்தவ சமய நூல்கள்
  • வரலாற்றியல் நூல்கள்
  • உரைநூல்கள்
  • இலக்கண நூல்கள்

நூற் பட்டியல்

1216 - 1658

1659 - 1796

மேற்கோள்கள்

  1. மனோன்மணி சண்முகதாஸ் (2012). இலங்கைத் தமிழியியல் - சில பதிவுகள். குமரன் புத்தக இல்லம்.
  2. கலாநிதி நா. சுப்பிரமணியன் (2014). "வன்னி வரலாறும் பண்பாடும் - வன்னிப் பிரதேசத் தமிழ் இலக்கியம்". திரு. கணபதிப்பிள்ளை சுந்தரலிங்கம்; geotamil.com. பார்க்கப்பட்ட நாள் 19 திசம்பர் 2016.[தொடர்பிழந்த இணைப்பு]