1253
Jump to navigation
Jump to search
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1253 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1253 MCCLIII |
திருவள்ளுவர் ஆண்டு | 1284 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2006 |
அர்மீனிய நாட்காட்டி | 702 ԹՎ ՉԲ |
சீன நாட்காட்டி | 3949-3950 |
எபிரேய நாட்காட்டி | 5012-5013 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1308-1309 1175-1176 4354-4355 |
இரானிய நாட்காட்டி | 631-632 |
இசுலாமிய நாட்காட்டி | 650 – 651 |
சப்பானிய நாட்காட்டி | |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1503 |
யூலியன் நாட்காட்டி | 1253 MCCLIII |
கொரிய நாட்காட்டி | 3586 |
1253 (MCCLIII) பழைய யூலியன் நாட்காட்டியில் புதன்கிழமை ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.[1][2][3]
நிகழ்வுகள் - ஐரோப்பா
- சனவரி 18 – சைப்பிரசு மன்னர் முதலாம் என்றி இறந்தார்.
- சூலை – ஒல்லாந்தின் இரண்டாம் வில்லியம் பிளெமிசு இராணுவத்தை வெசுட்காப்பெல் சமரில் தோற்கடித்தார்.
- சூலை 6 – மின்Dஓகாசு லித்துவேனியாவின் ஒரேயொரு மன்னராக முடிசூடினார்.
- அக்டோபர் – ஒன்பது ஆன்டுகளுக்கு முன்னர் 1244 இல் புனித உரோமைப் பேரரசர் இரண்டாம் பிரடெரிக்கை பதவியில் இருந்து அகற்றும் பொருட்டு அங்கிருந்து வெளியேறிய திருத்தந்தை நான்காம் இனசென்ட் உரோமைக்குத் திரும்பினார்.
- இத்தாலிய நகர அரசுகளான செனோவாவிற்கும் வெனிசுக்கும் இடையே கடற்போர்கள் நிகழ்ந்தன. இது 1371 வரை நீடித்தது.
- மாக்னா கார்ட்டாவின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்த இங்கிலாந்தின் மூன்றாம் என்றி ஆங்கிலேய பெருங்குடி மக்களையும் திருச்சபைத் தலைவர்களையும் சந்தித்தார்.
ஆசியா
- ஏப்ரல் 28 – சப்பானியப் பௌத்தத் துறவி நித்திரன் தாமரை சூத்திரத்தை உண்மையான பௌத்தக் கொள்கையாகப் போதிக்கப்போவதாக அறிவித்தார்.
- மே – தத்தார்களை மதம் மாற்றுவதற்காக பிரான்சின் ஒன்பதாம் லூயி மன்னர் கான்ஸ்டண்டினோபில்லில் இருந்து ருப்ரூக்கைச் சேர்ந்த வில்லியம் என்பவரை மத்திய, கிழக்காசியாவிற்கு அனுப்பினார்.
- பகுதாது, கெய்ரோ மீது மங்கோலியப் பேரரசு தாக்குதலை நடத்தியது.
- மங்கோலியப் பேரரசு தலி இராச்சியத்தைக் (இன்றைய யுன்னானில்) கைப்பற்றி தனது பேரரசுடன் இணைத்துக் கொண்டது.
பிறப்புகள்
- அமீர் குஸ்ராவ், இந்தியப் புலவர், புலமையாளர் (இ. 1325)
இறப்புகள்
- ஆகத்து 11 – அசிசியின் புனித கிளாரா, இத்தாலியப் புனிதர் (பி. 1194)
மேற்கோள்கள்
- ↑ Steven Runciman (1952). A History of The Crusades. Vol III: The Kingdom of Acre, p. 233. ISBN 978-0241-29877-0.
- ↑ O'connor, Kevin (2003). The History of the Baltic States, p. 15. Greenwood Publishing. ISBN 0-313-32355-0.
- ↑ Palmer, Alan; Palmer, Veronica (1992). The Chronology of British History. London: Century Ltd. pp. 84–86. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7126-5616-2.