12-கிரௌன்-4
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
ஐயூபிஏசி பெயர்
1,4,7,10-tetraoxacyclododecane
| |||
வேறு பெயர்கள்
12-crown-4, Lithium Ionophore V
| |||
இனங்காட்டிகள் | |||
294-93-9 | |||
ChEBI | CHEBI:32399 | ||
ChemSpider | 8912 | ||
யேமல் -3D படிமங்கள் | Image Image | ||
| |||
பண்புகள் | |||
C8H16O4 | |||
வாய்ப்பாட்டு எடை | 176.21 | ||
அடர்த்தி | 1.089 g/mL at 25 °C | ||
உருகுநிலை | 16 °C | ||
கொதிநிலை | 61-70 °C/0.5 mm Hg | ||
Miscible | |||
தீங்குகள் | |||
தீப்பற்றும் வெப்பநிலை | 113 °C (235 °F; 386 K) | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
12-கிரௌன் 4, 1,4,7,10-டெட்ராக்சா சைக்ளோடோ டெக்கேன் என்றும் லித்தியம் அயனோபோர் என்றும் அழைக்கப்படுகிறது. இது C8H16O4 என்ற மூலக்கூறு வாய்ப்பாட்டைப் பெற்ற கிரௌன் ஈதர் ஆகும். எத்திலின் ஆக்சைடின் வளைய நாற்படி ஆகும். இதன் சீரொருமைப் புள்ளி தொகுதி S4. வெவ்வேறு வெப்பநிலை மற்றும் வெவ்வேறு கரைப்பான்களில் இதன் இருமுனைத் திருப்புதிறன் மாறுபடுகிறது. 25 °C வெப்பநிலையில் சைக்ளோஹெக்சேனில் இதன் இருமுனைத் திருப்புதிறன் 2.33 ± 0.03 D ஆகவும் பென்சினில் இதன் இருமுனைத் திருப்புதிறன் 2.46 ± 0.01 D ஆகவும் அமைகிறது.[1]
தொகுப்பு
12-கிரௌன்-4 வளைய ஈதரை திருத்திய வில்லியம் ஈதர் தொகுப்பு முறைவழி, LiClO4 ஐப் அச்சுரு எதிரயனியாகப் பயன்படுத்தி உருவாக்கலாம்:[2]
- (CH2OCH2CH2Cl)2 + (CH2OH)2 + 2 NaOH → (CH2CH2O)4 + 2 NaCl + 2 H2O
இது போரான் முப்புளூரைடு முன்னிலையில் எதிலின் ஆக்சைடு வளைய ஒலிகோமராக்கத்தில் இருந்தும் உருவாகிறது.[3]
இயல்புகள்
Ball-and-stick model of the bis(12-crown-4)lithium cation
மற்ற கிரௌன் ஈத்தர்களைப் போலவே, 12-கிரௌன்-4 காரப் பொன்ம(உலோக) எதிரயனிகளின் சிக்கலானதாகும். இதன் குழிவு விட்டம் 1.2-1.5 Å ஆகும்; இது கல்லிமெதிரயனியுடன் உயர்தேர்வுடையதாகும். (அயனி விட்டம் 1.36 Å)[3]
இதன் சீரொருமைப் புள்ளிக்குழு S4 ஆகும். 12-கிரௌன்-4 இன் இருமுனைத் திருப்புதிறம் கரைப்பானைப் பொறுத்தும் வெப்பநிலை சார்ந்தும் வேறுபடுகிறது. 25 °C வெப்பநிலையில் 12-கிரௌன்-4 இன் இருமுனைத் திருப்புதிறம் சைக்ளோகெக்சேனில் 2.33 ± 0.03 D ஆகவும் பெஞ்சீனில் 2.46 ± 0.01 D ஆகவும் அமைகிறது.[4]
மேற்கோள்கள்
- ↑ Caswell, Lyman R.; Savannunt, Diana S. (January 1988). "Temperature and solvent effects on the experimental dipole moments of three crown ethers". Journal of Heterocyclic Chemistry 25 (1): 73–79. doi:10.1002/jhet.5570250111.
- ↑ Cook, Fred L.; Caruso, Thomas C.; Byrne, Michael P.; Bowers, Chauncey W.; Speck, Don H.; Liotta, Charles L. (1974). "Facile syntheses of 12-crown-4 and 15-crown-5" (in en). Tetrahedron Letters 15 (46): 4029–4032. doi:10.1016/S0040-4039(01)92075-1.
- ↑ 3.0 3.1 Liotta, Charles L.; Berkner, Joachim (2001), "12-Crown-4", Encyclopedia of Reagents for Organic Synthesis (in English), Chichester, UK: John Wiley & Sons, Ltd, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/047084289X.rc262, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-471-93623-7
- ↑ Caswell, Lyman R.; Savannunt, Diana S. (January 1988). "Temperature and solvent effects on the experimental dipole moments of three crown ethers". Journal of Heterocyclic Chemistry 25 (1): 73–79. doi:10.1002/jhet.5570250111.