11 அக்டோபர் 2007 அஜ்மீர் குண்டு வெடிப்புகள்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் நகரில் உள்ள கவாஜா மொய்னுதீன் சிஸ்தி தர்காவில் 2007ம் ஆண்டு அக்டோபர் மாதம் 11ந்தேதி ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் 3 பேர் பலி ஆனார்கள். 20 பேர் படுகாயம் அடைந்தனர்.[1]

ராஜஸ்தான் மாநில தீவிரவாதத் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் புலன் விசாரணை செய்து`அபினவ் பாரத் என்ற தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த தேவேந்திர குப்தா, சந்திரசேகர் பரோட் என்ற இருவரை கைது செய்துள்ளனர்.[2] கைதான இருவருக்கும் மராட்டிய மாநிலம் மாலேகான் குண்டு வெடிப்பில் கைதான பெண் சாமியார் பிரஞ்யா சிங் தாக்குருடன் நெருங்கிய தொடர்பு இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

விசாரணை

இந்த குண்டு வெடிப்பு தொடர்பான விசாரணையை தொடங்கிய போலீசார் அம்மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவிடம் விசாரணையை ஒப்படைத்தது. அதன் பின்னர், வழக்கு தேசியப் புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டது.[3]

தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றம் 149 சாட்சிகளிடம் விசாரணை நடத்தியது. மேலும் அரசு தரப்பில் 451 ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. மார்ச் 22, 2017 அன்று சிறப்பு நீதிபதி தினேஷ் குப்தா 500 பக்கங்கள் கொண்ட தீர்ப்பை வழங்கினார்.[4][5][3]

குற்றவாளிகள்

இந்த வழக்கில் ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம் என்ற இந்து அமைப்பில் முன்பிருந்த பவேஷ் பட்டேல் மற்றும் தேவேந்திர குப்தா ஆகிய இருவருக்கும் தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து மார்ச் 22, 2017 அன்று தீர்ப்பளித்தது. [6][4][5][3]

ஆதாரம்

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2010-05-02.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-01-14. பார்க்கப்பட்ட நாள் 2010-05-02.
  3. 3.0 3.1 3.2 அஜ்மீர் குண்டு வெடிப்பு.. 2 ஆர்.எஸ்.எஸ்.காரர்களுக்கு ஆயுள் தண்டனை.. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு தமிழ் ஒன் இந்தியா, மார்ச் 22, 2017
  4. 4.0 4.1 What is the Ajmer Dargah blast case? The Indian Express, March 22, 2017
  5. 5.0 5.1 Ajmer Blast Case: NIA Court Awards Life Imprisonment to Devendra Gupta, Bhavesh Patel News 18, March 22, 2017
  6. Bhavesh Patel and Devendra Gupta owed their allegiance to RSS in the past.The Hindu, March 22, 2017

வார்ப்புரு:இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்கள்