1054
Jump to navigation
Jump to search
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1054 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1054 MLIV |
திருவள்ளுவர் ஆண்டு | 1085 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 1807 |
அர்மீனிய நாட்காட்டி | 503 ԹՎ ՇԳ |
சீன நாட்காட்டி | 3750-3751 |
எபிரேய நாட்காட்டி | 4813-4814 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1109-1110 976-977 4155-4156 |
இரானிய நாட்காட்டி | 432-433 |
இசுலாமிய நாட்காட்டி | 445 – 446 |
சப்பானிய நாட்காட்டி | |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1304 |
யூலியன் நாட்காட்டி | 1054 MLIV |
கொரிய நாட்காட்டி | 3387 |
1054 (MLIV) பழைய யூலியன் நாட்காட்டியில் ஒரு சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.
நிகழ்வுகள்
- பெப்ரவரி – மோர்ட்டிமர் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில், நோர்மன்கள் பிரெஞ்சு இராணுவத்தைத் தோற்கடித்தனர். இதன் பலனாக பிரெஞ்சு மன்னர் முதலாம் என்றி நோர்மண்டியில் இருந்து தனது படைகளை திரும்ப அழைத்தார்.
- ஏப்ரல் 30 – அயர்லாந்தை சூறாவளி தாக்கியது.
- சூலை 4 – சீட்டா டோரி விண்மீன் அருகே இடம்பெற்ற எஸ்என் 1054 மீயொளிர் விண்மீன் வெடிப்பு பற்றிய செய்தி சீனர், அராபியர்களினால் பதியப்பட்டது.[1] 23 நாட்கள் பகலொளியிலும் அவதானிக்க முடிந்தது. இதன் எச்சங்கள் நண்டு வடிவ நெபுலாவாக (என்ஜிசி1952) உருமாறியது.[2]
- சூலை 16 – அண்மையில் இறந்த திருத்தந்தை ஒன்பதாம் லியோவின் மூன்று உரோமைத் தூதர்கள் ஹேகியா சோபியா கோவிலின் பலிபீடம் மீது திருச்சபைத் தொடர்பில் இருந்து நீக்கும் சட்டவிரோதமான திருத்தந்தையின் ஆணை ஓலையை வைத்ததன் மூலம் மேற்கத்திய, கிழக்கத்தியக் கிறித்தவ தேவாலயங்களிடையே தொடர்புகளைத் துண்டித்தனர். இந்நிகழ்வு பின்னர் பெரும் சமயப்பிளவுக்கு வழிவகுத்தது.
- லீ வம்சத்தின் மூன்றாம் அரசர் லீ நாத் தோன் வியட்நாமை ஆட்சி செய்யத் தொடங்கினார். நாட்டின் பெயரை அவர் தாய் வியெத் என மாற்றினார்.
- இலங்கையில் இரண்டாம் இலம்பகர்ண வம்சத்தின் ஏழாம் கசபனின் ஆட்சி ஆரம்பமானது.
- தென்னிந்தியாவில் கொப்பம் போர் சோழ அரசர்களுக்கும், சாளுக்கியருக்கும் இடையில் ]] இடம்பெற்றது. இராஜாதிராஜ சோழன் சமரில் இறந்தார். இரண்டாம் இராஜேந்திர சோழன் அரசரானார்.
பிறப்புகள்
இறப்புகள்
- இராஜாதிராஜ சோழன்
- அதிசர், இந்திய வங்காள பௌத்த துறவி (பி. 982)
மேற்கோள்கள்
- ↑ Journal of Astronomy, part 9, chapter 56 of Sung History (Sung Shih) first printing, 1340. facsimile on the frontispiece of Misner, Thorne, Wheeler Gravitation, 1973.
- ↑ "Crab Nebula". NASA.