102 நாட் அவுட்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
102 நாட் அவுட்
படிமம்:102 not out.jpg
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்உமேஷ் சுக்லா[1]
தயாரிப்புடிரிடாப் எண்டர்டெயின்மெண்ட்
பெஞ்ச்மார்க் பிக்சர்ஸ்
சோனி பிக்சர்ஸ் எண்டர்டெயின்மெண்ட் பிலிம்ஸ் இந்தியா
கதைசவும்யா ஜோஷி
இசைபாடல்கள் இசையமைப்பு:
சலிம்-சுலைமன்
ரோஹான்-விநாயக்
பின்னணி இசை:
ஜார்ஜ் ஜோசப்
நடிப்புஅமிதாப் பச்சன்
ரிஷி கபூர்
ஜிமித் திரிவேதி
ஒளிப்பதிவுலக்ஷ்மன் உடேகர்
படத்தொகுப்புபோதிதீனா பானர்ஜி
கலையகம்எஸ்பிஇ பிலிம்ஸ் இந்தியா
டிரிடாப் எண்டர்டெயின்மெண்ட்
விநியோகம்கொலம்பியா பிக்சர்ஸ்
வெளியீடுமே 4, 2018 (2018-05-04)
ஓட்டம்102 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிஇந்தி
ஆக்கச்செலவு20.00 கோடி[சான்று தேவை]
மொத்த வருவாய்39.75 கோடி[2]

102 நாட் அவுட் (102 Not Out) என்பது 2018 ஆண்டைய இந்திய இந்தி மொழி நகைச்சுவை நாடகத் திரைப்படமாகும். உமேஷ் சுக்லா இயக்கிய இப்படத்தில் முன்னணி கதாபாத்திரங்களில் அமிதாப் பச்சன் மற்றும் ரிஷி கபூர் நடித்துள்ளனர்.[3][4] இந்தப்படமானது குஜராத்தி கதாசிரியர் சவும்யா ஜோஷி என்பவர் எழுதிய மேடை நாடகத்தை அடிப்படையாகக் கொண்டது .[5]

அமிதாப் பச்சன் மற்றும் ரிசி கபூர் ஆகியோர் மீண்டும் திரையில் இணைந்து நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டபோது, அது பரபரப்பை ஏற்படுத்தியது.

102 நாட் அவுட் 2018 மே 4 அன்று வெளியானது.[6]

கதை

குசராத்திலிருந்து மும்பைக்குக் குடியேறிய பரம்பரையில் பிறந்த 102 வயது தாத்தாரேயா (அமிதாப்) நூறு வயது கடந்த நிலையிலும் மனதளவில் இளமையாக வாழுகிறார். அவருக்கு உலகிலேயே வாழும் வயதானவர் என்ற சாதனை படைக்க ஆசை. ஆனால் இவரது 75 வயது மகனான பாப்பு (ரிசி கப்பூர்) எல்லாம் முடிந்துவிட்ட ஒரு விரக்தி மனப்பான்மையில் வாழுகிறார்.

தாத்ரேயா தன் மகன் பாப்புவை முதியோர் இல்லம் அனுப்பாமல் இருக்க சில கட்டளைகள் விதிக்கிறார். ஒவ்வொரு கட்டளையாகத் தந்தை சொல்வதும் அதை மகன் சிரமப்பட்டு முடிப்பதும் என நகைச்சுவையாக படம் நகர்கிறது. இறுதிக் கட்டளை இருவரது வாழ்வின் சற்றே கசப்பான பக்கங்களைத் திறக்கிறது.

அவ்விருவருக்கும் இடையிலான உறவுச் சிக்கல்கள் தீர்ந்ததா 102 வயது தாத்ரேயாவின் அந்தக் கட்டளைகளால் மாறும் 75 மகன் பாப்பு வாழ்வு என்ன ஆனது என்பதே கதை முடிவு.

மேற்கோள்கள்

  1. "Amitabh Bachchan to play centenarian in 102 Not Out - NDTV Movies". 11 October 2013. Archived from the original on 27 மே 2014. பார்க்கப்பட்ட நாள் 12 மே 2018.
  2. http://www.bollywoodhungama.com/news/box-office-special-features/box-office-worldwide-collections-day-wise-break-102-not/
  3. "Paresh Rawal to play Amitabh Bachchan's son". Times of India.
  4. "Big B, Rishi Kapoor to reunite after 26 years with 102 Not Out" (in en). Deccan Chronicle. 2017-05-19. https://www.deccanchronicle.com/entertainment/bollywood/190517/amitabh-bachchan-and-rishi-kapoor-to-play-father-son-in-102-not-out.html. 
  5. Hungama, Bollywood (24 December 2013). "Amitabh Bachchan in 102 Not Out - Bollywood Hungama".
  6. Frater, Patrick (2018-02-08). "Amitabh Bachchan, Rishi Kapoor to Star in ‘102 Not Out’ for Sony (EXCLUSIVE)" (in en-US). Variety. https://variety.com/2018/film/asia/amitabh-bachchan-rishi-kapoor-sony-102-not-out-1202691818/. 
"https://tamilar.wiki/index.php?title=102_நாட்_அவுட்&oldid=143086" இருந்து மீள்விக்கப்பட்டது