1-நாப்தைலமீன்
Skeletal formula | |
Ball-and-stick model | |
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
நாப்தலீன்-1-அமீன் | |
வேறு பெயர்கள்
(நாப்தலீன்-1-யில்)அமீன்
1-நாப்தைலமீன் α-நாப்தைலமீன் 1-அமினோநாப்தலீன் | |
இனங்காட்டிகள் | |
134-32-7 | |
ChEBI | CHEBI:50450 |
ChEMBL | ChEMBL57394 |
ChemSpider | 8319 |
யேமல் -3D படிமங்கள் | Image |
KEGG | ChEMBL{{{ChEMBL}}} |
பப்கெம் | 8640 |
| |
UNII | 9753I242R5வார்ப்புரு:Fdacite |
பண்புகள் | |
C10H9N | |
வாய்ப்பாட்டு எடை | 143.19 கி/மோல் |
தோற்றம் | நிறமற்ற படிகங்கள் (காற்றில் செம்பழுப்பு)[1] |
அடர்த்தி | 1.114 கி/செ.மீ3 |
உருகுநிலை | 47 முதல் 50 °C (117 முதல் 122 °F; 320 முதல் 323 K) |
கொதிநிலை | 301 °C (574 °F; 574 K) |
0.002% (20°செல்சியசு)[1] | |
ஆவியமுக்கம் | 1 மிமீபாதரசம் (104°செல்சியசு)[1] |
தீங்குகள் | |
தீப்பற்றும் வெப்பநிலை | 157 °C; 315 °F; 430 K[1] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
1-நாப்தைலமீன் (1-Naphthylamine) என்பது நாப்தலீனில் இருந்து பெறப்பட்ட ஓர் அரோமாட்டிக்கு அமீன் ஆகும். இது சிறுநீர்ப்பை புற்றுநோயை ஏற்படுத்தும். நிறமற்ற ஊசிகளாகப் படிகமாகும் இச்சேர்மம் 50 பாகை செல்சியசு வெப்பநிலையில் உருகக்கூடியதாகும். விரும்பத்தகாத வாசனையைக் கொண்டிருக்கும். எளிதில் பதங்கமாகும். காற்றில் வெளிப்பட்டால் பழுப்பு நிறத்திற்கு மாறும். பல்வேறு சாயங்கள் தயாரிக்க உதவும் ஒரு முன்னோடிச் சேர்மமும் ஆகும்.[2]
தயாரிப்பும் வினைகளும்
இரும்பு மற்றும் ஐதரோகுளோரிக் அமிலத்தை 1-நைட்ரோ நாப்தலீனுடன் சேர்த்து குறைத்தல் வினைக்கு உட்படுத்தி தொடர்ந்து வாலை வடித்தலுக்கு உட்படுத்துவதன் மூலம் 1-நாப்தைலமீன் தயாரிக்கப்படுகிறது.[2]
பெரிக் குளோரைடு போன்ற ஆக்சிசனேற்ற முகவர்கள், இதன் உப்புக் கரைசல்களுடன் நீல நிற வீழ்படிவை அளிக்கின்றன. குரோமிக் அமிலம் இதை 1-நாப்தோகுயினோனாக மாற்றுகிறது. கொதிக்கும் அமைல் ஆல்ககாலில் உள்ள சோடியம் பதிலீடு செய்யப்படாத வளையத்தைக் குறைத்து டெட்ரா ஐதரோ-1-நாப்தைலமீனைக் கொடுக்கிறது. . இந்த டெட்ராஐதரோ சேர்மம் பொட்டாசியம் பெர்மாங்கனேட்டால் ஆக்சிசனேற்றப்படும்போது அடிப்பிக் அமிலத்தை அளிக்கிறது.
கந்தக அமிலத்துடன் இதைச் சேர்த்து 200 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு சூடுபடுத்தினால் இச்சேர்மம் 1-நாப்தாலாக மாறுகிறது.
பயன்கள்
1-நாப்தைலமீனின் சல்போனிக் அமில வழிப்பெறுதிகள் அசோ சாயத்தைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. இந்த சாயங்கள் மாற்றப்படாத பருத்திக்கு சாயமிடுவதற்கான முக்கியமான பண்புகளைக் கொண்டுள்ளன.
1-அமினோநாப்தலீன்-4-சல்போனிக் அமிலம் எனப்படும் நாப்தியோனிக் அமிலம் ஒரு முக்கியமான வழிப்பெறுதியாகும். 1-படிக வடிவ ஆக்சாலிக் அமிலத்தின் முன்னிலையில் நாப்தைலமீனுடன் கந்தக அமிலத்தைச் சேர்த்து 170–180 °செல்சியசு வெப்பநிலைக்கு சூடுபடுத்தினால் இவ்வழிப்பெறுதியை தயாரிக்க இயலும். இது சிறிய ஊசிகளாக உருவாகும். தண்ணீரில் மிகவும் குறைவாக கரையும். பென்சிடினின் பிசு(ஈரசோனியம்) வழிப்பெறுதியுடன் சேர்த்து சூடுபடுத்தினால் 1-அமினோநாப்தலீன்-4-சல்போனிக் அமிலம் காங்கோ சிவப்பு நிறத்தை அளிக்கிறது.
பாதுகாப்பு
தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிர்வாகம் நிர்ணயித்துள்ள தர அளவுகளின்படியான 13 புற்றுநோய் ஊக்கிகளில் 1-நாப்தைலமீனும் ஒன்றாகும். [3]
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 "NIOSH Pocket Guide to Chemical Hazards #0441". National Institute for Occupational Safety and Health (NIOSH).
- ↑ 2.0 2.1 Gerald Booth (2005). "Naphthalene Derivatives". Ullmann's Encyclopedia of Industrial Chemistry. Weinheim: Wiley-VCH. DOI:10.1002/14356007.a17_009. ISBN 9783527303854. .
- ↑ OSHA Standard 1910.1003