1-எக்சேனால்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
வார்ப்புரு:Chembox Beilsteinவார்ப்புரு:Chembox MeSHNameவார்ப்புரு:Chembox RTECSவார்ப்புரு:Chembox UNNumberவார்ப்புரு:Chembox LogPவார்ப்புரு:Chembox RefractIndexவார்ப்புரு:Chembox entryவார்ப்புரு:Chembox entryவார்ப்புரு:Chembox entryவார்ப்புரு:Chembox entryவார்ப்புரு:Chembox SDSவார்ப்புரு:Chembox NFPA
1-எக்சேனால்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
எக்சேன்-1-ஆல்[1]
இனங்காட்டிகள்
111-27-3 Yes check.svg.pngY
ChEMBL ChEMBL14085 Yes check.svg.pngY
ChemSpider 7812 Yes check.svg.pngY
EC number 203-852-3
InChI
  • InChI=1S/C6H14O/c1-2-3-4-5-6-7/h7H,2-6H2,1H3 Yes check.svg.pngY
    Key: ZSIAUFGUXNUGDI-UHFFFAOYSA-N Yes check.svg.pngY
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 8103
  • CCCCCCO
UNII 6CP2QER8GSவார்ப்புரு:Fdacite
பண்புகள்
C6H14O
வாய்ப்பாட்டு எடை 102.18 g·mol−1
அடர்த்தி .8136 g cm−3
உருகுநிலை −53 °C; −64 °F; 220 K
கொதிநிலை 155 °C; 311 °F; 428 K
5.9 g/L (at 20 ºC)
ஆவியமுக்கம் 100 Pa (at 25.6 ºC)
வார்ப்புரு:Chembox header | வெப்பவேதியியல்
தீங்குகள்
GHS pictograms The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word WARNING
H302
ஈயூ வகைப்பாடு வார்ப்புரு:Hazchem Xn
R-சொற்றொடர்கள் வார்ப்புரு:R22
S-சொற்றொடர்கள் வார்ப்புரு:S2, வார்ப்புரு:S24/25
தீப்பற்றும் வெப்பநிலை 59 °C (138 °F; 332 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Yes check.svg.pngY verify (இதுYes check.svg.pngY/N?)

1-எக்சேனால் (1-hexanol) என்பது ஆறு கார்பன்களைக் கொண்ட சங்கிலியால் ஆன ஓர் ஆல்ககால் ஆகும். இதனுடைய சுருங்கிய மூலக்கூறு வாய்பாடு CH3(CH2)5OH. நிறமற்ற இத்திரவம் நீரில் சிறிதளவே கரைகிறது. ஆனால் எத்தனால், ஈதர் போன்ற கரைப்பான்களுடன் கலக்கும் இயல்பு கொண்டுள்ளது. 1-எக்சேனாலுக்கு 2-எக்சேனால், 3-எக்சேனால் என்ற இரண்டு கூடுதலான நேர்சங்கிலி மாற்றியன்கள் உள்ளன. இவை இரண்டும் ஐதராக்சில் குழு இருக்குமிடத்தின் அடிப்படையில் வேறுபடுகின்றன. C6H13OH என்ற மூலக்கூறு வாய்பாடுடன் பல சமபகுதிய ஆல்ககால்கள் காணப்படுகின்றன. இவை வாசனைப் பொருட்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகின்றன.

தயாரிப்பு

எத்திலீனை மூவெத்தில் அலுமினியத்துடன் சேர்த்து சில்படிமமாக்கல் வினைக்கு உட்படுத்தி ஆல்கைல்அலுமினிய சேர்மம் பெறப்படுகிறது. பின்னர் இந்த ஆல்கைல் அலுமினியம் ஆக்சிசனேற்றம் செய்யப்பட்டு தொழில்முறையாக எக்சேனால் தயாரிக்கப்படுகிறது[2]. இந்த நல்லியல் தொகுப்பு வினையின் சமன்பாடு கீழே தரப்பட்டுள்ளது.

Al(C2H5)3 + 6C2H4 → Al(C6H13)3
Al(C6H13)3 + 1½O2 + 3H2O → 3HOC6H13 + Al(OH)3

இவ்வினையின் வாயிலாக பல சில்படிமங்கள் உற்பத்தியாகி, பின்னர் அவை காய்ச்சி வடித்தல் மூலம் பிரித்து எடுக்கப்படுகின்றன.

மாற்று தயாரிப்பு முறைகள்

1-பென்டீனை ஐதரோபார்மைலேற்றம் வினைக்கு உட்படுத்தி அதைத் தொடர்ந்து வினையில் உண்டாகும் ஆல்டிகைடை ஐதரசனேற்றம் செய்வதன் வழியாக மற்றொரு முறையில் எக்சேனால் தயாரிக்கப்படுகிறது. ஆறு கார்பன் கொண்ட சமபகுதி ஆல்ககால்களின் கலவைகள் உற்பத்தி செய்ய இம்முறை உற்பத்தித் துறையில் உபயோகமாகிறது. நெகிழியாக்கிகளுக்கு இவையே முன்னோடிகளாகும்[2].

ஆல்கீனை ஆல்டிகைடாக்குதல் மற்றும் அதைத் தொடர்ந்து ஐதரசனேற்றம் செய்தல் என்ற ஐதரோபார்மைலேற்ற கொள்கையின் படி 1-எக்சீன் ஐதரோ போரேனாதல் மூலம் 1 எக்சேனாலாக மாற்றப்படுகிறது. இருபோரேனுடன் நான்மஐதரோபியூரான் சேர்த்து பின்னர் தொடர்ந்து ஐதரசன் பெராக்சைடு மற்றும் சோடியம் ஐதராக்சைடுடன் வினைப்படுத்துவது ஐதரோ போரேனாதல் வினையாகும்.

இந்த முறையில் எக்சேனால் தயாரிப்பது ஆய்வகத் தொகுப்பு முறைக்கு ஏற்றதாக இருந்தாலும் நடைமுறையில் எத்திலீனில் இருந்து எக்சேனால் தயாரிப்பதே வணிகரீதியாக பயன்படுகிறது.

இயற்கையில் எக்சனால்

புதிதாக செதுக்கப்பட்ட புல்லின் நறுமனத்தில் எக்சேனால் இருப்பதாக நம்பப்படுகிறது. எச்சரிக்கும் புற இசைக்காக தேனிக்களின் சுரப்பிகளால் உமிழப்படும் சுரப்புகளில் எக்சேனால் இருப்பதாகவும் நம்பப்படுகிறது.

மேற்கோள்கள்

  1. "1-hexanol - Compound Summary". PubChem Compound. USA: National Center for Biotechnology Information. 26 March 2005. Identification and Related Records. பார்க்கப்பட்ட நாள் 8 October 2011.
  2. 2.0 2.1 வார்ப்புரு:Ullmann.

இவற்றையும் காண்க

ஒருபக்க 3-எக்சேனால்,

வெளிப்புற இணைப்புகள்

வார்ப்புரு:ஆல்ககால்கள்

"https://tamilar.wiki/index.php?title=1-எக்சேனால்&oldid=144665" இருந்து மீள்விக்கப்பட்டது