1-ஆக்டனால்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
வார்ப்புரு:Chembox Beilsteinவார்ப்புரு:Chembox Gmelinவார்ப்புரு:Chembox IUPHAR ligandவார்ப்புரு:Chembox Odourவார்ப்புரு:Chembox Viscosityவார்ப்புரு:Chembox NFPA
ஆக்டனால்
Skeletal formula
Space-filling model
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
ஆக்டேன்-1-ஆல்
வேறு பெயர்கள்
1-ஆக்டனால்; n-ஆக்டனால்; கேப்ரைல் ஆல்ககால்; ஆக்டைல் ஆல்ககால்
இனங்காட்டிகள்
111-87-5 Yes check.svg.pngY
ChEBI CHEBI:16188
ChEMBL ChEMBL26215 Yes check.svg.pngY
ChemSpider 932 Yes check.svg.pngY
EC number 203-917-6
InChI
  • InChI=1S/C8H18O/c1-2-3-4-5-6-7-8-9/h9H,2-8H2,1H3 N
    Key: KBPLFHHGFOOTCA-UHFFFAOYSA-N N
  • InChI=1/C8H18O/c1-2-3-4-5-6-7-8-9/h9H,2-8H2,1H3
    Key: KBPLFHHGFOOTCA-UHFFFAOYAH
யேமல் -3D படிமங்கள் Image
KEGG ChEMBL{{{ChEMBL}}}
பப்கெம் 957
  • CCCCCCCCO
UNII NV1779205Dவார்ப்புரு:Fdacite
பண்புகள்
C8H18O
வாய்ப்பாட்டு எடை 130.23 g·mol−1
தோற்றம் நிறமற்ற திரவம்
அடர்த்தி 0.83 கி/செமீ3 (20 °செ)[1]
உருகுநிலை −16 °C (3 °F; 257 K)
கொதிநிலை 195 °C (383 °F; 468 K)
0.3 கி/லி (20 °செ)
தீங்குகள்
GHS pictograms The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word Warning
H319
P264, P280, P305+351+338, P337+313
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுYes check.svg.pngY/N?)

1-ஆக்டனால் (1-Octanol) ஆக்டேன்-1-ஆல் (Octan-1-ol) என்றும் அழைக்கப்படும் CH3(CH2)7OH என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிமச் சேர்மமாகும். இது ஒரு கொழுப்பு நிறைந்த ஆல்ககால் ஆகும். பல மாற்றியங்கள் பொதுவாக ஆக்டானால்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. 1-ஆக்டனால் வாசனை திரவியங்கள் மற்றும் சுவையூட்டிகளில் பயன்படுத்தப்படும் எசுத்தர்களின் தொகுப்பு முறைத் தயாரிப்பிற்காக தயாரிக்கப்படுகிறது. இது ஒரு கசப்பான வாசனையை கொண்டுள்ளது. ஆக்டேன் அசிட்டேட் போன்ற ஆக்டானாலின் எசுத்தர்கள் அத்தியாவசிய எண்ணெய்களின் கூறுகளாகத் திகழ்கின்றன.[3] மருந்துப் பொருட்களின் கொழுப்புவிரும்பு தன்மையை மதிப்பீடு செய்ய இது பயன்படுத்தப்படுகிறது.

தயாரிப்பு

ஆக்டனால் முக்கியமாக தொழில்துறை ரீதியாக மூஎத்தில்அலுமினியத்தைப் பயன்படுத்தி எத்திலீனின் சில்படிமமாக்கல் மற்றும் அதைத் தொடர்ந்த அல்கைலலுமினிய விளைபொருள்களின் ஆக்சிஜனேற்றம் ஆகியவற்றால் உற்பத்தி செய்யப்படுகிறது, செய்யப்படுகிறது. இந்த வழிமுறையானது ஜீக்லர் ஆல்ககால் தொகுப்புமுறை என்று அழைக்கப்படுகிறது. ஒரு இலட்சியப்படுத்தப்பட்ட தொகுப்புமுறையானது கீழே காட்டப்பட்டுள்ளது.

Al(C2H5)3 + 9 C2H4 → Al(C8H17)3
Al(C8H17)3 + 3 O + 3 H2O → 3 HOC8H17 + Al(OH)3

இந்தச் செயல்முறை பலவிதமான ஆல்ககால்களை உருவாக்குகிறது, அவை வாலைவடிப்பதன் மூலம் பிரிக்கப்படலாம்.

குராரே செயல்முறை 1-ஆக்டனாலைத் தயாரிப்பதற்கு C4 + C4 கட்டுமான உத்தியைப் பயன்படுத்தும் மாற்று வழியை வரையறுக்கிறது, 1, 3-பியூட்டாடைன் ஒரு மூலக்கூறு தண்ணீரைச் சேர்ப்பதன் மூலம் இருபடியாக்கம் செய்யப்படுகிறது. இந்த மாற்றம் பலேடியம் அணைவுச் சேர்மங்களால் ஊக்குவிக்கப்படுகிறது. இதன் விளைவாகக் கிடைக்கும் இரட்டிப்பு நிறைவுறா ஆல்ககால் பின்னர் ஹைட்ரஜனேற்றப்படுகிறது .

நீர்/ஆக்டானால் பகிர்வு

ஆக்டனால் மற்றும் நீர் இவை இரண்டும் ஒன்றுடன் ஒன்று கலக்க முடியாதவை. நீர் மற்றும் ஆக்டானால் இடையே ஒரு சேர்மத்தின் பகிர்மானமானது, அந்த மூலக்கூறின் பகிர்வு குணகம், P ஐக் கணக்கிட பயன்படுத்தப்படுகிறது (பெரும்பாலும் அதன் பத்தடிமான மடக்கை அடிப்படையில், log P′ என வெளிப்படுத்தப்படுகிறது. நீர்/ஆக்டனால் பகிர்வு என்பது உயிரியல் அமைப்புகளின் சைட்டோசோல் மற்றும் கொழுப்பு சவ்வுகளுக்கு இடையிலான பகிர்வின் ஒப்பீட்டளவில் நல்ல தோராயமாகும்.

பல தோல் உறிஞ்சுதல் மாதிரிகள் அடுக்கு கார்னியம்/நீர் பகிர்வு குணகமானது நீர்/ஆக்டனால் வகை பகிர்வு குணகத்தின் செயல்பாட்டால் நன்கு தோராயமாக கருதப்படுகின்றன. [4]

[math]\displaystyle{ \log(K_{sc/w}) = a + b\log(K_{w/o}) }[/math]

பண்புகள் மற்றும் பயன்பாடுகள்

81 டிகிரி செல்சியஸ் எரிநிலையுடன், 1-ஆக்டனால் தீவிரமாக எரியக்கூடியது அல்ல. இருப்பினும், அதன் தன்னியக்க எரிதல் வெப்பநிலை 245 டிகிரி செல்ஸியஸ் வரை குறைவாக உள்ளது. 1-ஆக்டனால் முக்கியமாக வாசனை திரவியங்களுக்கு முன்னோடியாக பயன்படுத்தப்படுகிறது.[3] அத்தியாவசிய நடுக்கம் மற்றும் பிற வகையான தன்னிச்சையான நரம்பியல் நடுக்கங்களைக் கட்டுப்படுத்துவதற்காக இது பரிசோதிக்கப்பட்டுள்ளது, ஏனெனில் எத்தனால் உட்கொள்வதிலிருந்து இதேபோன்ற அறிகுறி நிவாரணத்தைப் பெறுவதற்குத் தேவையானதை விட குறைந்த அளவுகளில் நடுக்க அறிகுறிகளைப் போக்க முடியும் என்பதற்கான சான்றுகள் சுட்டிக்காட்டுகின்றன, இதனால் சிகிச்சை அளவுகளில் ஆல்ககாலின் போதை ஆபத்தைக் குறைக்கிறது.[5]

1-ஆக்டனால் லூயி காரங்களுடன் ஐதரசன் பிணைப்புகளை உருவாக்குகின்றன . இது ECW மாதிரி ஒரு லூயிசு அமிலம் மற்றும் அதன் அமில அளவுருக்கள்EA = 0.85 மற்றும் C A = 0.87 ஆகும்.[6]

மேற்கோள்கள்

  1. Record in the GESTIS Substance Database of the Institute for Occupational Safety and Health
  2. Bhattacharjee, A.; Roy, M. N. (2010-11-17). "Density, Viscosity, and Speed of Sound of (1-Octanol + 2-Methoxyethanol),(1-Octanol + N,N-Dimethylacetamide), and (1-Octanol + Acetophenone) at Temperatures of (298.15, 308.15, and 318.15) K". Journal of Chemical & Engineering Data 55 (12): 5914–5920. doi:10.1021/je100170v. 
  3. 3.0 3.1 Falbe, Jürgen; Bahrmann, Helmut; Lipps, Wolfgang; Mayer, Dieter; Frey, Guido D. (2013). "Alcohols, Aliphatic" (in en). Ullmann's Encyclopedia of Industrial Chemistry (American Cancer Society). doi:10.1002/14356007.a01_279.pub2. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-3527306732. 
  4. McCarley KD, Bunge AL (2001). "Pharmacokinetic Models of Dermal Absorption". Journal of Pharmaceutical Sciences 90 (11): 1699–1719. doi:10.1002/jps.1120. பப்மெட்:11745728. 
  5. Bushara K. (2004). "Pilot trial of 1-octanol in essential tremor". Neurology 62 (1): 122–124. doi:10.1212/01.wnl.0000101722.95137.19. பப்மெட்:14718713. 
  6. Vogel, Glenn C.; Drago, Russell S. (1996). "The ECW Model" (in en). Journal of Chemical Education 73 (8): 701. doi:10.1021/ed073p701. பன்னாட்டுத் தர தொடர் எண்:0021-9584. Bibcode: 1996JChEd..73..701V. https://pubs.acs.org/doi/abs/10.1021/ed073p701. 
"https://tamilar.wiki/index.php?title=1-ஆக்டனால்&oldid=144656" இருந்து மீள்விக்கப்பட்டது