1,4-டைகுளோரோ-2-நைட்ரோபென்சீன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
வார்ப்புரு:Chembox MeSHNameவார்ப்புரு:Chembox RTECSவார்ப்புரு:Chembox UNNumber
1,4-டைகுளோரோ-2-நைட்ரோபென்சீன்
படிமம்:1,4-Dichloro-2-nitrobenzene.svg.png
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
1,4-டைகுளோரோ-2-நைட்ரோபென்சீன்
வேறு பெயர்கள்
நைட்ரோ-பாரா-டைகுளோரோபென்சீன்
இனங்காட்டிகள்
89-61-2
ChEMBL ChEMBL354761
ChemSpider 21111865
InChI
  • InChI=1S/C6H3Cl2NO2/c7-4-1-2-5(8)6(3-4)9(10)11/h1-3H
    Key: RZKKOBGFCAHLCZ-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 6977
  • c1cc(c(cc1Cl)[N+](=O)[O-])Cl
UNII IY18G50FF4
பண்புகள்
C6H3Cl2NO2
வாய்ப்பாட்டு எடை 192.00
தோற்றம் மஞ்சள் செதில்கள்
அடர்த்தி 1.67
உருகுநிலை 52-54 °செல்சியசு
கொதிநிலை 266-269 °செல்சியசு
95 மி.கி/லி
தீங்குகள்
GHS pictograms The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)வார்ப்புரு:GHS08வார்ப்புரு:GHS09
GHS signal word அபாயம்
H302, H336, H351, H361, H370, H372, H373, H400, H410
P201, P202, P260, P261, P264, P270, P271, P273, P281, P301+312, P304+340, P307+311, P308+313, P312
தீப்பற்றும் வெப்பநிலை 135 °C (275 °F; 408 K)
Autoignition
temperature
465 °C (869 °F; 738 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

1,4-டைகுளோரோ-2-நைட்ரோபென்சீன் (1,4-Dichloro-2-nitrobenzene) என்பது C6H3Cl2NO2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். நிறமற்ற திண்மமான இச்சேர்மம் தண்ணீரில் கரைவதில்லை. டைகுளோரோநைட்ரோபென்சீனின் அறியப்பட்டுள்ள பல மாற்றியன்களில் இதுவும் ஒன்றாகும்.

தயாரிப்பு

1,4-டைகுளோரோபென்சீனை நைட்ரோயேற்றம் செய்து 1,4-டைகுளோரோ-2-நைட்ரோபென்சீன் தயாரிக்கப்படுகிறது. வர்த்தகமுறையிலான பல வழிப்பெறுதிகள் தயாரிப்பதற்கு உதவும் ஒரு முன்னோடிச் சேர்மமாக இச்சேர்மம் கருதப்படுகிறது.

வினைகள்

இச்சேர்மத்தை ஐதரசனேற்றம் செய்வதால் 1,4-டைகுளோரோ அனிலின் உருவாகிறது. நைட்ரோ குழுவுக்கு அடுத்துள்ள குளோரைடுகளை மின்னணு மிகுபொருள்கள் இடப்பெயர்ச்சி செய்கின்றன. அமோனியாவுடன் வினைபுரிவதால் அனிலின் வழிப்பெறுதிகளும், நீரிய காரத்துடன் வினைபுரிவதால் பீனால் வழிப்பெறுதிகளும் உருவாகின்றன. மெத்தாக்சைடுடன் வினைபுரிவதால் அனிசோல் வழிப்பெறுதிகள் கிடைக்கின்றன. 4-குளோரோ-2-நைட்ரோ அனிலின், 4-குளோரோ-2-நைட்ரோபீனால், 4-குளோரோ-2-நைட்ரோ அனிசோல்[1] என்பவை முறையே மேற்கூறப்பட்ட அச்சேர்மங்களாகும்.

மேற்கோள்கள்

  1. Gerald Booth (2007). "Nitro Compounds, Aromatic" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry Wiley-VCH, Weinheim, 2005.