1,3-புரோப்பேன் சல்டோன்
1,3-புரோப்பேன் சல்டோன் | |
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
ஆக்சாதயோலேன் 2,2-டையாக்சைடு
| |
வேறு பெயர்கள்
γ-புரோப்பேன் சல்டோன்; 1,2- ஆக்சோதயோலேன் 2,2-டையாக்சைடு; 3-ஐதராக்சில்-1-புரோப்பேன் சல்போனிக் அமில சல்போன்; 1-புரோப்பேன் சல்போனிக் அமில-3-ஐதராக்சில்-γ-சல்டோன்
| |
இனங்காட்டிகள் | |
1120-71-4 | |
ChemSpider | 13626 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 14264 |
| |
பண்புகள் | |
C3H6O3S | |
வாய்ப்பாட்டு எடை | 122.14 g·mol−1 |
தோற்றம் | வெண் படிகத் திண்மம்; நிறமற்ற நீர்மம் 31 °செ மேல் |
அடர்த்தி | 1.392 கி/செ.மீ3 40 °செ இல் |
உருகுநிலை | 31 °C (88 °F; 304 K) |
கொதிநிலை | 112 °C (234 °F; 385 K) 1.4 மிமீ பாதரசத்தில் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
1,3-புரோப்பேன் சல்டோன் (1,3-Propane sultone) என்பது (CH2)3SO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். கந்தகக் கரிமச் சேர்மமான இது ஒரு சைக்ளிக் சல்போனேட்டு எசுத்தர் ஆகும். வளைய சல்போனேட்டு எசுத்தர்கள் பொதுவாக சல்டோன்கள் எனப்படுகின்றன[1][2]. நிறமற்ற திண்மமான இச்சல்டோன் விரைவாக உருகுகிறது.
தயாரிப்பு
அல்லைல் ஆல்ககாலையும் சோடியம் பைசல்பைட்டையும் சேர்த்து அமில வினையூக்க வினைக்கு உட்படுத்தினால் 1,3-புரோப்பேன் சல்டோன் தயாரிக்கலாம்.
வினைகள்
1,3-புரோப்பேன் சல்டோன் அணுக்கரு தாக்கத்தை ஏற்கின்ற ஒரு கிளர்வூட்டப்பட்ட எசுத்தர் ஆகும். நீராற்பகுப்பு அடைந்து ஐதராக்சிசல்போனிக் அமிலமாக மாறுகிறது.
சிறப்புவகை புறப்பரப்பு செயலிகள் தயாரிப்பில் 1,3-புரோப்பேன் சல்டோன் பயன்படுத்தப்படுகிறது[3].
முன்பாதுகாப்பு
கிளர்வூட்டப்பட்ட எசுத்தர்களில் குறிப்பாக 1,3-புரோப்பேன் சல்டோன் ஒரு ஆல்க்கைலேற்றும் முகவராகச் செயல்படுகிறது. நச்சுத்தன்மை, புற்றுநோயூக்கி, சடுதிமாற்றி, கருக்குலைப்புத் தன்மை முதலிய அபாயங்களைக் கொண்டுள்ளது[4][5].
மேற்கோள்கள்
- ↑ R. J. Cremlyn (1996). An Introduction to Organosulfur Chemistry. Chichester: John Wiley and Sons. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0 471 95512 4.
- ↑ "Chem. Commun. article".
- ↑ Hjelmeland, LM (November 1980). "A nondenaturing zwitterionic detergent for membrane biochemistry: design and synthesis.". Proceedings of the National Academy of Sciences of the United States of America 77 (11): 6368–70. doi:10.1073/pnas.77.11.6368. பப்மெட்:6935651.
- ↑ "Scorecard Chemical Profile for Propane Sultone". Archived from the original on 2008-09-23. பார்க்கப்பட்ட நாள் 2008-11-17.
- ↑ "NIOSH Pocket Guide to Chemical Hazards". பார்க்கப்பட்ட நாள் 2013-11-13.