1,3-இருமெத்தில்பியூட்டைலமீன்
படிமம்:Dimethylbutylamine.svg.png | |||
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
4-மெத்தில்பெண்டேன்-2-அமீன் | |||
வேறு பெயர்கள்
(4-மெத்தில்பெண்டேன்-2-ஐல்)அமீன்
| |||
இனங்காட்டிகள் | |||
108-09-8 | |||
ChemSpider | 7620 | ||
InChI
| |||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
பப்கெம் | 7908 CID 7908 | ||
| |||
UNII | KXP599H5R6வார்ப்புரு:Fdacite | ||
பண்புகள் | |||
C6H15N | |||
வாய்ப்பாட்டு எடை | 101.19 g·mol−1 | ||
அடர்த்தி | 0.717 கி/மிலி[1] | ||
கொதிநிலை | 108–110 °C (226–230 °F; 381–383 K)[1] | ||
தீங்குகள் | |||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
1,3-இருமெத்தில்பியூட்டைலமீன் (1,3-Dimethylbutylamine) என்பது C6H15N என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மம் ஆகும். ஓர் அலிபாட்டிக் அமீனாகக் கருதப்படும் இச்சேர்மம் இருமெத்தில் பியூட்டைலமீன், 4-அமினோ-2-மெத்தில்பெண்டேன் என்ற பெயர்களாலும் இது அடையாளப்படுத்தப்படுகிறது. மெத்திலெக்சேனமீனுடன் கட்டமைப்பு ரீதியாக தொடர்புடைய ஒரு தூண்டுதல் மருந்தாக 1,3-இருமெத்தில்பியூட்டைலமீன் அறியப்படுகிறது. அங்கு ஒரு பியூட்டைல் குழு பெண்டைல் குழுவை மாற்றுகிறது.
இருமெத்தில் பியூட்டைலமீனின் ஐதரோகுளோரைடு மற்றும் சிட்ரேட்டு உப்புகள் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் விற்கப்படும் சில உணவு கூட்டுப்பொருட்களில் அங்கீகரிக்கப்படாத மருந்துப் பொருட்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.[2][3][4] மெத்திலெக்சேனமீனின் மீதான தடைகளைத் தவிர்க்கும் ஒரு வெளிப்படையான முயற்சியில் இது பயன்படுத்தப்படுகிறது.[5] ஐக்கிய அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) இருமெத்தில் பியூட்டைலமீன் கொண்டிருக்கும் எந்த ஓர் உணவுப் பொருளும் "கலப்படம்" செய்யப்பட்டவை என்று கருதுகிறது. உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் எதிர்ப்பையும் மீறி இருமெத்தில் பியூட்டைலமீன் அமெரிக்காவில் தொடர்ந்து விற்கப்படுகிறது.[6]
பாதுகாப்பு
இருமெத்தில் பியூட்டைலமீன் பற்றிய அறியப்பட்ட மனித பாதுகாப்பு ஆய்வுகள் எதுவும் இல்லை மற்றும் அதன் ஆரோக்கிய விளைவுகள் முற்றிலும் தெரியவில்லை.[2][3][7]
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 "1,3-Dimethylbutylamine". Sigma-Aldrich.
- ↑ 2.0 2.1 Cohen, Pieter A.; Travis, John C.; Venhuis, Bastiaan J. (2015). "A synthetic stimulant never tested in humans, 1,3-dimethylbutylamine (DMBA), is identified in multiple dietary supplements". Drug Testing and Analysis 7 (1): 83–7. doi:10.1002/dta.1735. பப்மெட்:25293509.
- ↑ 3.0 3.1 "Unapproved Synthetic Stimulant "DMBA" Found in Multiple Dietary Supplements". NSF International. Archived from the original on 2016-11-22. பார்க்கப்பட்ட நாள் 2015-03-21.
- ↑
- ↑ "Stimulant Potentially Dangerous to Health, FDA Warns". U.S. Food and Drug Administration. April 11, 2013. பார்க்கப்பட்ட நாள் March 10, 2015.
- ↑ Cohen, Pieter A.; Wen, Anita; Gerona, Roy (1 December 2018). "Prohibited Stimulants in Dietary Supplements After Enforcement Action by the US Food and Drug Administration". JAMA Internal Medicine 178 (12): 1721–1723. doi:10.1001/jamainternmed.2018.4846. பப்மெட்:30422217.
- ↑ "Revealing the hidden dangers of dietary supplements". Science. 20 August 2015. doi:10.1126/science.aad1651. http://news.sciencemag.org/health/2015/08/feature-revealing-hidden-dangers-dietary-supplements.