1,3,5-டிரைமெத்தில்-1,3,5-டிரையசாசைக்ளோயெக்சேன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
1,3,5-டிரைமெத்தில்-1,3,5-டிரையசாசைக்ளோயெக்சேன்
படிமம்:(MeNCH2)3.png
பெயர்கள்
வேறு பெயர்கள்
எக்சா ஐதரோ-1,3,5-டிரைமெத்தில்-எசு-டிரையசீன்
எக்சா ஐதரோ-1,3,5-டிரைமெத்தில்-1,3,5-டிரையசீன்
1,3,5-டிரைமெத்தில்-1,3,5- டிரையசாசைக்ளோயெக்சேன்
1,3,5-டிரைமெத்தில்-1,3,5-டிரையசினேன்
1,3,5-டிரைமெத்தில்யெக்சா ஐதரோ-1,3,5-டிரையசீன்
இனங்காட்டிகள்
108-74-7
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 7952
  • CN1CN(C)CN(C)C1
பண்புகள்
C6H15N3
வாய்ப்பாட்டு எடை 129.21 g·mol−1
தோற்றம் நிறமற்ற அல்லது வெண்மை நிறத்திண்மம்
அடர்த்தி 0.925 கி/செ.மீ3
உருகுநிலை −27 °C (−17 °F; 246 K)
கொதிநிலை 155–160 °C (311–320 °F; 428–433 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

1,3,5-டிரைமெத்தில்-1,3,5-டிரையசாசைக்ளோயெக்சேன் (1,3,5-Trimethyl-1,3,5-triazacyclohexane) என்பது C6H15N3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். நிறமற்ற இந்நீர்மம் பல கரிமக் கரைப்பான்களிலும் கரைகிறது. தொடர்புடைய பல எக்சா ஐதரோ-1,3,5-டிரையசீன்களுடன் கட்டமைப்பு ஒற்றுமை கொண்டதாக இச்சேர்மம் காணப்படுகிறது. இவை குறிப்பாக அமீன்கள் மற்றும் பார்மால்டிகைடுகளை ஒடுக்க வினைக்கு உட்படுத்துவதால் உருவாகின்ற சேர்மங்களாக உள்ளன. பியூட்டைல் இலித்தியம் உதவியால் 1,3,5-டிரைமெத்தில்-1,3,5-டிரையசாசைக்ளோயெக்சேனை புரோட்டான் நீக்கம் செய்து ஒரு வினையாக்கியைப் பெறலாம். இவ்வினையாக்கி பார்மைல் எதிர்மின் அயனி மூலமாகச் செயல்படுகிறது[1]

மேற்கோள்கள்

  1. V. Subramanian "1,3,5-Trimethyl-1,3,5-triazacyclohexane " e-EROS Encyclopedia of Reagents for Organic Synthesis 2007. எஆசு:10.1002/047084289X.rn01037