1,3,5-டிரைநைட்ரோபென்சீன்
Skeletal formula | |
Ball-and-stick model | |
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்s
1,3,5-டிரை நைட்ரோ பென்சீன்
(1,3,5-Trinitrobenzene) | |
வேறு பெயர்கள்
sym-டிரைநைட்ரோபென்சீன்
| |
இனங்காட்டிகள் | |
99-35-4 | |
ChemSpider | 7156 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 7434 |
| |
பண்புகள் | |
C6H3N3O6 | |
வாய்ப்பாட்டு எடை | 213.11 g·mol−1 |
அடர்த்தி | 1.76 g/cm3 |
உருகுநிலை | 123.2 °C (253.8 °F; 396.3 K) |
கொதிநிலை | 315 °C (599 °F; 588 K) |
330 mg/L | |
தீங்குகள் | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
1,3,5-டிரைநைட்ரோபென்சீன் (1,3,5-Trinitrobenzene) என்பது ஒரு நைட்ரேற்றம் செய்யப்பட்ட பென்சீன் வழிபொருள். இது அதிக வெடிதிறன் கொண்ட வெடிபொருள் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. இது நீர்ம நிலையில் குறைவான வெடிப்புத் திறனையும் உலர் தூள் (dry powder) நிலையில் மிக அதிக வெடிதிறனையும் கொண்டுள்ளது. இது தெளிவானது முதல் மங்கிய மஞ்சள் நிறம் வரை நிறம் கொண்டது. இது வலிமையான அதிர்ச்சியின்கீழ் வெடிக்கும். அதிக வெப்பநிலை, திடீரென அதிக வெப்பப்படுத்தும்போது எந்த அளவாக இருந்தாலும் வெடிக்கும். அல்லது அதிக அளவு பொருள் எரிந்துகொண்டிருக்கும்போது வெப்பத்தைச் சேர்க்கும்போதும் இது வெடிக்கும். இது ஒடுக்கிகளுடன் (reducing materials) தீவிரமாக வினைபுரிகிறது. ஆனால், சோடியம் டைகுரோமேட்டுடனோ கந்தக அமிலத்துடனோ இது வினைபுரிவதில்லை.[2] கரிம நைட்ரேட்டுகள் அதிர்ச்சியின் மூலம் வெடிக்கலாம், வெப்பத்துடனோ சுடருடனோ தொடர்பு ஏற்பட்டு வெடிக்கலாம் அல்லது தன்னிச்சையான வேதிவினை மூலமும் கூட வெடிக்கலாம். இது கண்டிப்பாக ஒரு குளிர்ச்சியான, காற்றோட்டமுள்ள இடத்தில் சேமிக்கப்படவேண்டும். இது நெருப்பு மூலம் ஏற்படக்கூடிய இடர்களிலிருந்து தள்ளியிருக்குமாறு வைக்கப்பட வேண்டும். மேலும் ஆக்சிசனேற்றக் காரணிகளிலிருந்தும் தள்ளி வைக்கப்பட வேன்டும். இது அலுமினியம், போரான் ஃபாஸ்பைடு, சயனைடு, எஸ்டர்கள், PN2H, சோடியம் சயனைடு, SnC12, சோடியம் ஹைப்போஃபாஸ்பைட், தையோசயனேட் முதலியவற்றுடன் தீவிரமாக வினைபுரிகிறது. சிதைவுறுவதற்காக வெப்பப்படுத்தப்படும்போது அதிக நச்சுத்தன்மை வாய்ந்த NOx (நைட்ரசன் ஆக்சைடு) ஆவிகளை வெளிவிடுகிறது. இது அதிக திறன்மிகு ஆக்சிசனேற்றக் கரணி ஆகும். இது ஒடுக்கிகளுடன் தீவிர வினைபுரியக்கூடும்.[3]
மேற்கோள்கள்
- ↑ Record of 1,3,5-Trinitrobenzene in the GESTIS Substance Database of the Institute for Occupational Safety and Health
- ↑ (Sax and Lewis, 1987) p.839.
- ↑ (SAX and Lewis, 1987) p.664.