1,2-ஈத்தேன் டைதயோல்
1,2-ஈத்தேன் டைதயோல் | |
Ball-and-stick model of ethane-1,2-dithiol | |
Space-filling model of ethane-1,2-dithiol | |
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
ஈத்தேன்-1,2-டைதயோல் | |
வேறு பெயர்கள்
இருமெர்காப்டோயீத்தேன்
1,2-ஈத்தேன்ட்டைதயோல் | |
இனங்காட்டிகள் | |
540-63-6 | |
ChemSpider | 13865015 |
EC number | 208-752-3 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 10902 |
| |
UNII | 92T634FLARவார்ப்புரு:Fdacite |
பண்புகள் | |
C2H6S2 | |
வாய்ப்பாட்டு எடை | 94.19 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற நீர்மம் |
அடர்த்தி | 1.123 கி/செ.மீ3 |
உருகுநிலை | −41 °C (−42 °F; 232 K) |
கொதிநிலை | 146 °C (295 °F; 419 K) 46 மி.மீ.பாதரசம் |
சிறிதளவு கரையும் | |
மற்ற கரைப்பான்கள்-இல் கரைதிறன் | கரிமக் கரைப்பான்களில் நன்கு கரையும் |
தீங்குகள் | |
GHS pictograms | வார்ப்புரு:GHS06 |
GHS signal word | அபாயம் |
H226, H301, H302, H310, H312, H319, H330 | |
P210, P233, P240, P241, P242, P243, P260, P262, P264, P270, P271, P280, P284, P301+310 | |
தீப்பற்றும் வெப்பநிலை | 50 °C (122 °F; 323 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
1,2-ஈத்தேன் டைதயோல் (1,2-Ethanedithiol) என்பது C2H4(SH)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிமவேதியியல் சேர்மமாகும். [1] இது மிகவும் தனித்துவம் மிக்க வாசனையைக் கொண்டுள்ளது. இவ்வாசனை பலரால் அழுகிய முட்டைக்கோசுடன் ஒப்பிடப்படுகிறது. கரிமத் தொகுப்பு வினைகளில் ஒரு பொதுவான கட்டுமானத் தொகுதியாகவும் உலோக அயனிகளுக்கான ஒரு சிறந்த ஈந்தணைவியாகவும் 1,2-ஈத்தேன் டைதயோல் கருதப்படுகிறது.
1,2- இருகுளோரோயீத்தேனுடன் நீரிய சோடியம் பைசல்பைடைச் சேர்த்து வினைபுரியச் செய்து வர்த்தக முறையில் இச்சேர்மம் தயாரிக்கப்படுகிறது. 1,2- இருபுரோமோயீத்தேனுடன் தயோயூரியாவைச் சேர்த்து வினைபுரியச் செய்து தொடர்ந்து நீராற்பகுத்தல் வினைக்கு உட்படுத்தி ஆய்வகங்களில் 1,2-ஈத்தேன் டைதயோல் தயாரித்துக் கொள்ளப்படுகிறது. [2]
பயன்பாடுகள்
1,2-ஈத்தேன் டைதயோல் ஒரு 1,2-டைதயோலாக ஆல்டிகைடுகள் மற்றும் கீட்டோன்களுடன் வினபுரிந்து, வேதியியல் இடைநிலையாகப் பயன்படும் 1,3-டைதயோலேனைக் கொடுக்கும் என்பதால் கரிம வேதியியலில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. [3]
- C2H4(SH)2 + RR'CO → C2H4S2CRR' + H2O
பிற 1,2- மற்றும் 1,3-டைதயோல்கள் இவ்வினையில் பங்கேற்று 1,3-டைதயோலேன்களையும் ஆறு உறுப்பு வளையம் கொண்ட 1,3 டைதயேன்களையும் கொடுக்கின்றன.
எத்திலீன் கிளைக்கால் போன்ற டையால்கள் இவ்வினையை ஒத்த வினைகளில் பங்கேற்று 1,3-டையாக்சோலேன்களையும் 1,3-டையாக்சேன்களையும் கொடுக்கின்றன. ஆல்டிகைடுகளிலிருந்து பெறப்பட்ட டைதயோலேன்கள் மற்றும் டைதயேன்களின் சிறப்பம்சம் என்னவென்றால், இவற்றிலுள்ள மீத்தேன் குழுவை புரோட்டான் நீக்கம் செய்து அதன் விளைவாக கார்பன் எதிர்மின் அயனியை ஆல்கைலேற்றம் செய்ய முடியும்.
1,2-ஈத்தேன் டைதயோல் பொதுவாக பெப்டைடு பிளவு தொகுப்பு வினைகளில் துப்புரவாக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது
மேற்கோள்கள்
- ↑ Choi, H.; Aldrich, J.v. (1993-07-01). "Comparison of methods for the Fmoc solid-phase synthesis and cleavage of a peptide containing both tryptophan and arginine" (in en). International Journal of Peptide and Protein Research 42 (1): 58–63. doi:10.1111/j.1399-3011.1993.tb00350.x. பன்னாட்டுத் தர தொடர் எண்:1399-3011. பப்மெட்:8103765.
- ↑ வார்ப்புரு:OrgSynth
- ↑ R. E. Conrow "Ethanedithiol" in Encyclopedia of Reagents for Organic Synthesis (Ed: L. Paquette) 2004, J. Wiley & Sons, New York. எஆசு:10.1002/047084289X