1,1-டை புளோரோயீத்தேன்
| |||
டைபுளோரோயீத்தேன் | |||
பெயர்கள் | |||
---|---|---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
1,1-டைபுளோரோயீத்தேன் | |||
வேறு பெயர்கள்
டைபுளோரோயீத்தேன்
பிரியான் 152ஏ எத்திலிடீன் டைபுளோரைடு எத்திலிடீன் புளோரைடு ஐதரோபுளோரோகார்பன்-152ஏ ஆர்-152ஏ டி.எப்.ஈ | |||
இனங்காட்டிகள் | |||
75-37-6 | |||
ChEMBL | ChEMBL325493 | ||
ChemSpider | 6128 | ||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
பப்கெம் | 6368 | ||
| |||
UNII | 0B1U8K2ME0வார்ப்புரு:Fdacite | ||
பண்புகள் | |||
C2H4F2 | |||
வாய்ப்பாட்டு எடை | 66.05 கி/மோல் | ||
அடர்த்தி | 900 கி/லி @ 25 ° செல்சியசில் | ||
உருகுநிலை | −117 °C (−179 °F; 156 K) | ||
கொதிநிலை | −25 °C (−13 °F; 248 K) | ||
0.54% @ 0 °செல்சியசு | |||
ஆவியமுக்கம் | 4020 மி.மீ.பாதரசம்/536 கிலோபாசுகல் @ 21.1 °செல்சியசில்
5.1 பார்/510 கிலோபாசுகல் @ 20 ° செல்சியசில் | ||
தீங்குகள் | |||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
1,1-டைபுளோரோயீத்தேன் (1,1-Difluoroethane) என்பது C2H4F2. என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். கரிம புளோரின் சேர்மமான இதை சுருக்கமாக டி.எப்.ஈ என்று அழைப்பர். நிறமற்ற இவ்வாயு குளிரூட்டிகளில் குளிர்பதனூட்டியாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆர்-152ஏ அல்லது ஐதரோபுளோரோகார்பந்152ஏ என்ற வகைப்பாட்டில் 1,1-டைபுளோரோயீத்தேன் பட்டியலிடப்பட்டுள்ளது. தூசுப்படல தெளிப்புகளின் உந்து சக்தியாகவும் மின்னணு கருவிகளை தூய்மைப்படுத்தவும் இச்சேர்மம் பயன்படுகிறது. குளோரோபுளோரோ கார்பன்களுக்கு மாற்றாக தற்காலத்தில் பயன்படுத்தப்படும் இதன் ஓசோன் பாதிப்பு சதவிகிதம் பூச்சியம் என கணக்கிடப்பட்டுள்ளது. மேலும் இச்சேர்மத்தின் பயன்பாட்டால் புவி வெப்பமடைதல் சாத்தியம் (124) மிக்க் குறைவு என்றும், குறுகிய வளிமண்டல வாழ்நாள் (1.4 ஆண்டுகள்) கொண்டது என்றும் அறியப்படுகிறது.
தயாரிப்பு
பாதரச வினையூக்கியின் முன்னிலையில் அசிட்டிலீனுடன் ஐதரசன் புளோரைடைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் 1,1-டைபுளோரோயீத்தேன் உருவாகிறது:[2]
- HCCH + 2 HF → CH3CHF2
பாலி வினைல் புளோரைடு என்ற பலபடிக்கான ஒருபடியான வினைல் புளோரைடு (C2H3F) இவ்வினையில் இடைநிலை விளைபொருளாக உருவாகிறது.
மேற்கோள்கள்
- ↑ 1,1-Difluoroethane at Sigma-Aldrich
- ↑ Siegemund, Günter; Schwertfeger, Werner; Feiring, Andrew; Smart, Bruce; Behr, Fred; Vogel, Herward; McKusick, Blaine (2010). "Fluorine Compounds, Organic". In Bohnet, Matthias; Bellussi, Giuseppe; Bus, James; Cornils, Boy (eds.). Ullmann's Encyclopedia of Industrial Chemistry. John Wiley & Sons. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/14356007.a11_349.