1,1-ஈரைதராக்சியெத்தீன்
| பெயர்கள் | |
|---|---|
| ஐயூபிஏசி பெயர்
எத்தீன்-1,1-டையால்
| |
வேறு பெயர்கள்
| |
| இனங்காட்டிகள் | |
| 10375-04-9 | |
| ChemSpider | 91938 |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 101752 |
| |
| பண்புகள் | |
| C2H4O2 | |
| வாய்ப்பாட்டு எடை | 60.05 g·mol−1 |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
1,1-ஈரைதராக்சியெத்தீன் (1,1-Dihydroxyethene) என்பது C2H4O2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மத்தின் எத்தீன் சங்கிலியில் ஒரே கார்பன் அணுவில் இரண்டு ஐதராக்சி தொகுதிகள் பதிலிகளாக பதிலீடு செய்யப்பட்டுள்ளன. இதை 1,1-டை ஐதராக்சியெத்தீன் என்றும் கீட்டினுடைய கார்பனைல் நீரேற்று என்பதால் இதை கீட்டீன்நீரேற்று என்றும் வேறு பெயர்களால் அழைப்பர். இச்சேர்மத்தின் கட்டமைப்பை நோக்குகையில் இதை அசிட்டிக் அமிலத்தினுடைய ஈனால் வடிவம் என்றும் கருதுகிறார்கள். கீட்டினை அசிட்டிக் அமிலமாக மாற்றும் நீரேற்ற வினையில் இச்சேர்மம் ஒரு முக்கியமான இடைநிலை வேதிப்பொருளாகச் செயல்படுகிறது [1]. இந்த வினை நிகழ்வதற்கான சாத்தியமான பாதைகள் பற்றிய பகுப்பாய்வானது, வேதி வினைவழிமுறையின் ஒவ்வொரு படிநிலைக்குமான செயலூக்கும் ஆற்றலை முக்கியமாக கருதுவதற்கான ஓர் எடுத்துக்காட்டாகும் [2]. கீட்டினுடைய கார்பனைலின் நீரேற்றம் என்பது பொதுவாக கார்பனைல் தொகுதியுடன் ஓர் தண்ணீர் மூலக்கூறு சேரும் ஒரு கூட்டுவினையென கருதப்பட்டது. இரண்டாவது தண்ணீர் மூலக்கூறு இவ்வினைக்கு வினையூக்கியாக செயற்படுவதாக கருதப்பட்டது [3].
மேற்கோள்கள்
- ↑ Nguyen, Minh Tho; Raspoet, Greet (1999). "The hydration mechanism of ketene: 15 years later". Can. J. Chem. 77: 817–829. doi:10.1139/v99-090.
- ↑ Guthrie, J. Peter (2011). "No barrier theory and the origins of the intrinsic barrier". In Richard, John P. (ed.). Advances in Physical Organic Chemistry. Vol. 45. Academic Press. pp. 205–208. ISBN 9780123860477.
- ↑ Nguyen, Thanh Lam; Xue, Bert C.; Ellison, G. Barney; Stanton, John F. (2013). "Theoretical Study of Reaction of Ketene with Water in the Gas Phase: Formation of Acetic Acid?". J. Phys. Chem. A 117 (43): 10997–11005. doi:10.1021/jp408337y.