1,1,1-முப்புளோரோ அசிட்டைலசிட்டோன்
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
1,1,1-முப்புளோரோபெண்டேன்-2,4-டையோன் | |
வேறு பெயர்கள்
1,1,1-முப்புளோரோ-2,4-பெண்டாடையோன், (முப்புளோரோ அசிட்டைல்)அசிட்டோன், 1,1,1-(முப்புளோரோ அசிட்டைல்)அசிட்டோன், 1,1,1-முப்புளோரோ அசிட்டைலசிட்டோன்
| |
இனங்காட்டிகள் | |
367-57-7 | |
ChemSpider | 66573 |
EC number | 206-698-5 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 73943 |
| |
UNII | 9N20A8G8SW |
பண்புகள் | |
C5H4F3O2 | |
வாய்ப்பாட்டு எடை | 153.08 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற நீர்மம் |
அடர்த்தி | 1.27 கி/செ.மீ3 |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | எச்சரிக்கை |
H226, H302, H312, H315, H319, H332 | |
P210, P233, P240, P241, P242, P243, P261, P264, P270, P271, P280, P301+312, P302+352, P303+361+353 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
1,1,1-முப்புளோரோ அசிட்டைலசிட்டோன் (1,1,1-Trifluoroacetylacetone) என்பது CF3C(O)CH2C(O)CH3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். கரிம புளோரின் சேர்மமான இது ஒரு நிறமற்ற நீர்மமாகும். மற்ற 1,3- இருகீட்டோன்களைப் போல இதுவும் பல்லின சேர்மங்களை தயாரிக்க முன்னோடிச் சேர்மமாகப் பயன்படுத்தப்படுகிறது. எ.கா:உலோக அசிட்டைலசிட்டோனேட்டு, பைரசோல்கள்.[1] முப்புளோரோஅசிட்டிக் அமிலத்தின் எசுத்தர்களை அசிட்டோனுடன் சேர்த்து ஒடுக்க வினைக்கு உட்படுத்துவதன் மூலம் 1,1,1-முப்புளோரோ அசிட்டைலசிட்டோனை தயாரிக்கலாம்.[2]
புரோட்டான் அணுக்கருக் காந்தஒத்திசைவு அலைமாலையியல் பகுப்பாய்வின்படி, இச்சேர்மம் முக்கியமாக (97% 33 பாகை செல்சியசு வெப்பநிலையில்) ஈனோலாக உள்ளது. இதே நிலைமைகளின் கீழ் ஒப்பிடுகையில், அசிட்டைலசிட்டோன் மற்றும் அறுபுளோரோஅசிட்டைலசிட்டோனின் ஈனோல் சதவீதம் முறையே 85 மற்றும் 100% ஆகும்.[3]
மேற்கோள்கள்
- ↑ Morris, M. L.; Moshier, Ross W.; Sievers, Robert E. (1967). "Tetrakis(1,1,1-trifluoro-2,4-pentanedionato)zirconium(and Hafnium)". Inorganic Syntheses. Vol. 9. pp. 50–52. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/9780470132401.ch15. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780470132401.
- ↑ Henne, Albert L.; Newman, Melvin S.; Quill, Laurence L.; Staniforth, Robert A. (1947). "Alkaline condensation of fluorinated esters with esters and ketones". Journal of the American Chemical Society 69 (7): 1819–20. doi:10.1021/ja01199a075.
- ↑ Jane L. Burdett; Max T. Rogers (1964). "Keto-Enol Tautomerism in β-Dicarbonyls Studied by Nuclear Magnetic Resonance Spectroscopy. I. Proton Chemical Shifts and Equilibrium Constants of Pure Compounds". J. Am. Chem. Soc. 86: 2105–2109. doi:10.1021/ja01065a003.