(தெர்பிரிடின்)ருத்தேனியம் முக்குளோரைடு

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
(தெர்பிரிடின்)ருத்தேனியம் முக்குளோரைடு
படிமம்:TerpyRuCl3.svg.png
இனங்காட்டிகள்
72905-30-7 Yes check.svg.pngY
ChemSpider 9179899
InChI
  • InChI=1S/C15H11N3.3ClH.Ru/c1-3-10-16-12(6-1)14-8-5-9-15(18-14)13-7-2-4-11-17-13;;;;/h1-11H;3*1H;/q;;;;+3/p-3
    Key: YDKDTFLOHRMCRP-UHFFFAOYSA-K
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 11004708
  • c1ccnc(c1)c2cccc(n2)c3ccccn3.[Ru+3].[Cl-].[Cl-].[Cl-]
பண்புகள்
C15H11Cl3N3Ru
வாய்ப்பாட்டு எடை 440.69 g·mol−1
தோற்றம் பழுப்பு நிறத் திண்மம்
அடர்த்தி 1.451 கி/செ.மீ3
கரையாது
தீங்குகள்
GHS signal word எச்சரிக்கை
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

(தெர்பிரிடின்)ருத்தேனியம் முக்குளோரைடு ((Terpyridine)ruthenium trichloride) என்பது C15H11Cl3N3Ru என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஓர் ஒருங்கிணைவுச் சேர்மமாகும். RuCl3(தெர்பி) என்று சுருக்கமாகவும் இவ்வாய்ப்பாட்டை எழுதலாம். வாய்ப்பாட்டிலுள்ள தெர்பி என்பது தெர்பிரிடினைக் குறிக்கிறது. பழுப்பு நிறத்துடன் பாரா காந்தப்பண்பு கொண்டதாக இச்சேர்மம் காணப்படுகிறது. ருத்தேனியத்தின் மற்ற அணைவுச் சேர்மங்கள் தயாரிப்பதற்கு இச்சேர்மம் முன்னோடிச் சேர்மமாகப் பயன்படுகிறது. முக்கியமாக குளோரைடு ஈந்தணைவிகளை மாற்றுவதன் மூலம் பிற அணைவுகளைத் தயாரிக்கமுடியும். (தெர்பிரிடின்)ருத்தேனியம் முக்குளோரைடு எண்முக வடிவவியலைக் கொண்டுள்ளது.[1] இந்த ஒருங்கிணைவுச் சேர்மம் முதன்முதலில் 1980 ஆம் ஆண்டில் முதன்முறையாக அறிவிக்கப்பட்டது. எத்தனாலில் கரைக்கப்பட்ட ருத்தேனியம் முக்குளோரைடுடன் தெர்பிரிடைனைக் கலந்து, மீள் நிலைமைகளுக்கு சூடாக்குவதன் மூலம் இது தயாரிக்கப்பட்டது.[2] பிற்கால செயற்கை தயாரிப்பு முறையில் தெர்பிரிடினின் இருமெத்தில்பார்மமைடு கரைசலுடன் ருத்தேனியம் முக்குளோரைடைச் சேர்த்து சூடாக்குவதன் மூலம் இதேபோன்ற அணுகுமுறையைப் பயன்படுத்துகிறது.[3]

மேற்கோள்கள்

  1. Ziegler, Marco; Monney, Véronique; Stoeckli-Evans, Helen; von Zelewsky, Alex; Sasaki, Isabelle; Dupic, Gilles; Daran, Jean-Claude; Balavoine, Gilbert G. A. (1999). "Complexes of New Chiral Terpyridyl Ligands. Synthesis and Characterization of Their Ruthenium(II) and Rhodium(III) Complexes". Journal of the Chemical Society, Dalton Transactions (5): 667–676. doi:10.1039/a900194h. 
  2. Sullivan, B. Patrick; Calvert, Jeffrey M.; Meyer, Thomas J. (May 1980). "Cis-trans isomerism in (trpy)(PPh3)RuC12. Comparisons between the chemical and physical properties of a cis-trans isomeric pair" (in en). Inorganic Chemistry 19 (5): 1404–1407. doi:10.1021/ic50207a066. பன்னாட்டுத் தர தொடர் எண்:0020-1669. https://pubs.acs.org/doi/abs/10.1021/ic50207a066. 
  3. Bessel, Carol A.; Leising, Randolph A.; Szczepura, Lisa F.; Perez, Willie J.; Vo Huyhn, My Hang; Takeuchi, Kenneth J. (1998). "Trichloro[2,2′:6′,2″-Terpyridine]Ruthenium(III) and Phosphine Ligand Derivatives". Inorganic Syntheses. Vol. 32. p. 186-198. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/9780470132630.ch32. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780471249214.