ஹெர்பர்ட் அபிங்டன் டிராப்பர் காம்ப்டன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

ஹெர்பர்ட் அபிங்டன் டிராப்பர் காம்ப்டன் (Herbert Abingdon Draper Compton) (1770 - 14 சனவரி 1846) என்பவர் பம்பாய் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் , மதராஸ் மற்றும் கல்கத்தாவின் அரசுத் தலைமை வழக்குரைஞராவும் இருந்தார்.

ஆரம்பகால வாழ்க்கை

இவர் வால்டர் அபிங்டன் என்பவருக்கு ஒரே மகனாக பிறந்தார். பிரித்தானிய இராணுவத்தில் பணிக்கு சேர்ந்த இவர், பிரித்தானிய இந்தியாவில் உள்ள படைப்பிரிவுடன் பணியாற்றினார். இங்கிலாந்து திரும்பிய பின்னர் இவர் செய்தித்தாள்களில், குறிப்பாக 'பைலட்' இதழில் சிலகாலம் எழுதினார். பின்னர் சட்டம் பயின்றார். இதன் பிறகு நவம்பர் 22, 1808 இல் இலண்டன் நீதிமன்றங்களில் ஒன்றான லிங்கனிஸ் இன் வழக்கறிஞராக பதிவு செய்துகொண்டார்

தொழில்

டிராப்பர் காம்ப்டன் 1719 இல் இந்தியாவில் வந்து புனித ஜார்ஜ் கோட்டையில் வழக்கறிஞராக பதிவுசெய்துகொண்டார். அதன்பிறகு 1822 ஆம் ஆண்டில் மதராஸ் மற்றும் கல்கத்தா அரசு தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். 1831 ஆம் ஆண்டில் அவர் மும்பாயின் தலைமை நீதிபதியாக ஆனார் [1] ஓய்வுக்குப் பிறகு அவர் இங்கிலாந்து திரும்பி 1846 இல் ஹைட் பார்க் கார்டனில் உள்ள அவரது வீட்டில் இறந்தார். [2]

குறிப்புகள்