ஹுஸ்னா பா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

ஹுஸ்னா ஜான் அல்லது ஹுஸ்னா பாய் (Husna Jan or Husna Bai ) இவர் 19 ஆம் ஆண்டின் பிற்பகுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் தவாய்ஃப் மற்றும் வாரணாசியின் தும்ரி பாடகர் ஆவார். இவர் உத்தரபிரதேசத்தில் காயல், தும்ரி மற்றும் இந்துஸ்தானி இசை ஆகியவற்றில் நிபுணராக அறியப்பட்டார். 1900களின் முற்பகுதியில் பாடும் பாரம்பரியத்தை மறுவரையறை செய்து புரட்சி செய்தவர். இவர் பல தேசபக்தி பாடல்களைப் பாடியுள்ளார். இதே போன்று பிற பாடகர்களையும் பின்பற்றத் தூண்டினார். இவருக்கு தாகூர் பிரசாத் மிஸ்ரா மற்றும் பிரபல சாரங்கி வீரர் பண்டிட் ஷம்புநாத் மிஸ்ரா ஆகியோர் பயிற்சி அளித்தனர். இவரது இந்துஸ்தானி இசையை வாரணாசியின் புகழ்பெற்ற சோட் ராம்தாஸ் ஜி என்பவரிடம் பயிற்சிப் பெற்றார்.

தொழில்

பாய், நவீன இந்தி இலக்கியம் மற்றும் இந்தி நாடகத்தின் தந்தை என்று அறியப்படும் பார்தேண்டு ஹரிச்சந்திராவின் சமகாலத்தவராவார். அவருடன் கடிதப் பரிமாற்றம் செய்து கொண்டு கவிதை வெளிப்பாடு குறித்த அவரது ஆலோசனையையும் கருத்தையும் தெரிந்து கொண்டார். இவரது தும்ரி மற்றும் மற்ற உபவகைகளுக்கான தும்ரி மது தரங் (சர்மா, 2012) என்ற பெயரில் வெளியிடப்பட்டன. ஜெய்தேவ் எழுதிய கீத கோவிந்தத்தை ஹரிச்சந்திராவுடன் இசையமைக்கும் ஒரு வாய்ப்பைப் பெற்றார். தும்ரி மற்றும் தப்பா கலையின் நிபுணர்களான வித்யாபரி மற்றும் பாடி மோதி பாய் போன்றவர்களுடன் ஒருவராக இவரும் கருதப்பட்டார். பாய் தனது வாழ்க்கையில் பெரும் உயரத்திற்கு உயர்ந்ததால், 'சர்க்கார்' அல்லது 'தலைவி' என்று குறிப்பிடப்பட்டார்.

அரசியல் ஈடுபாடு

ஒத்துழையாமை இயக்கத்தின் [1][2] போது (1920–22) காசி (நவீன வாரணாசியில் ஒரு குறிப்பிட்டப் பகுதி) மற்றும் நைனித்தால் வழியாக மகாத்மா காந்தி பயணம் செய்தபோது, இவர் சர்கா என்ற இயக்கம் ஒன்றை ஆரம்பித்து அதில் பெண் பாடகர்களை பஜனைகள் மற்றும் தேசபக்தி பாடல்களைப் பாடவைப்பதின் மூலம் ஒரு வாழ்க்கையை சம்பாதிக்க தூண்டுவதில் ஒரு செல்வாக்கு இருந்தது. [3] இந்த பாடகர்களின் கௌரவத்தை உயர்த்துவதையும் இது நோக்கமாகக் கொண்டிருந்ததார். இந்த பாடகர்களில் பலர் பின்னர் சர்கா இயக்கத்தில் இணைந்தனர். [4] அமிர்தசரஸில் உள்ள பாலியல் தொழிலாளர்களின் வீடுகளுக்கு வெளியே மறியல் செய்பவர்களைப் பின்பற்றுபவர்களும், பொதுக் கருத்தும் தவாப் மற்றும் அந்தத் தொழில்களுக்கு எதிராகத் திரும்புவதாகத் தோன்றுகிறது. தேசிய இயக்கத்தை ஆதரிப்பது மற்றும் தவாப்சின் வாழ்க்கையை சீர்திருத்துவது ஆகிய இரண்டு நோக்கங்களுடன் பாய் 'தவாப் சபா' (காசி வேசிகளின் கூட்டமைப்பு) என்ற ஒன்றை அமைத்தார். சபையின் தொடக்க விழாவில் பாயின் தலைமை உரை ஒரு தேசியவாத கவிதையை வாசித்தார். [5]

ஜோன் ஆஃப் ஆர்க் மற்றும் சித்தோர்கர் போன்ற பெண்களின் வாழ்க்கையிலிருந்து கற்றுக்கொள்ளவும், தங்க ஆபரணங்களுக்குப் பதிலாக இரும்பு நகைகளை அணியவும், கெளரவமான வாழ்க்கையிலிருந்து விலகி இருக்கவும் பாய் சக தவாப்புகளை அறிவுறுத்தினார். தவாப்புகள் தங்கள் தொழிலை முழுவதுமாக மாற்ற முடியாததால், தேசியவாத அல்லது தேசபக்தி பாடல்களுடன் தங்கள் பாடல்களைத் தொடங்குமாறு பாய் அவர்களுக்கு அறிவுறுத்தினார். வாரணாசியின் மற்றொரு பிரபலமான பாடகர் வித்யாதரி பாயிடமிருந்து இந்த பாடல்களை சேகரிக்க அவர்களுக்கு இவர் அறிவுறுத்தினார். அவர்களுக்கான சமூக அந்தஸ்தையும் கண்ணியத்தையும் அடைவதற்கான ஒரு படியாக இதை பாய் கண்டார். மற்ற தவாப்களுடன் இவர் இந்தியரல்லாத பொருட்களைப் புறக்கணிப்பதில் பங்கேற்று சுதேசி இயக்கத்தைத் தழுவினார்.

குறிப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=ஹுஸ்னா_பா&oldid=7724" இருந்து மீள்விக்கப்பட்டது