ஹா. கி. வாலம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ஹா. கி. வாலம்
ஹா. கி. வாலம்
இயற்பெயர்/
அறியும் பெயர்
ஹா. கி. வாலம்
பிறந்ததிகதி ஆகத்து 24, 1922
இறப்பு ஆகத்து 11, 1976
அறியப்படுவது எழுத்தாளர்


ஆ.கி.வாலம் என்பவர் தமிழ்ப் பெண் எழுத்தாளர்களுள் ஒருவர். இவர் காஞ்சிப் பெரியவர், சுத்தானந்த பாரதியார் ஆகியோரால் பாராட்டப்பெற்றவர்.

பிறப்பும் வாழ்வும்

இவர் திருச்சிராப்பள்ளியில் ஆலாஸ்யமய்யர்- சுயம்பிரகாசம் அம்மையாருக்கு மகளாக ஆகத்து 24, 1922 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் ஆறாம் வகுப்பு வரை மட்டுமே கல்வி பயின்றார். தமிழின்பால் ஈடுபாடு கொண்டு தமிழ்ப் பயின்று நிறைய நூல்களை எழுதியுள்ளார்.

தமிழ்ப் பணிகள்

1953 முதல் 1957 வரை பூனா கலைக் கழகத்தின் தலைவியாகவும், தேவலாலி தென்னிந்திய சங்கத்தின் தலைவியாகவும் இருந்து தமிழுக்காகப் பணிபுரிந்துள்ளார். சென்னைத் தமிழ் எழுத்தாளர் சங்கம், இந்திய பி.இ.என் அமைப்பு ஆகியவற்றில் உறுப்பினராகவும், பூனா பண்டர்கார் ஆராய்ச்சி மையத்தின் உறுப்பினராகவும் இருந்து செயலாற்றினார். 1970லிருந்து தொடர்ந்து நான்கு ஆண்டுகள் மோகனா எனும் ஆன்மிக மாத இதழை நடத்தியுள்ளார்.a

படைப்புகள்

  • நவரத்தினங்கள் பதிக்கப்பட்ட நல்லாரம்
  • அமிழ்தினும் இனிய மோகன அமுதம்
  • மோகன லீலை
  • திரு ஆயிரம்
  • அழகின் அலை
  • வெங்கடேச சுப்ரபாதம்
  • சிவானந்த லஹரி
  • திருவேங்கடவன் திருமலைப் பாடல்கள்
  • பாரத சுப்ரபாதம்

முதலிய நூல்களைத் தமிழிலும்,

  • தி வௌ ஆப் பாஞ்சாலி

எனும் நூலை ஆங்கிலத்திலும்,

  • மோகன லதிகா
  • பஜகோவிந்தம்
  • ஸ்ரீ வேங்கடேச சுப்ரபாதம்

ஆகிய நூல்களை இந்தியிலும்,

  • மோகன மாதுர்யம்

எனும் நூலை சமசுகிருத மொழியிலும் படைத்துள்ளார்.

பெற்ற விருதுகள்

இவர் கவிதா ரத்னம், வித்யா ரத்னம், வித்யா விசாரதா, விக்ஞான சிந்தாமணி, பாஷண கேசரி, மும்மொழி வித்தகி, மங்கையர் திலகம், கவிக்கடல், அருளரசி முதலான பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

மறைவு

இவர் ஆகத்து 11, 1976 ஆம் ஆண்டு மறைந்தார்.

உசாத்துணை

1) தாயம்மாள் அறவாணன், "இலட்சியப் பெண்டிர்" தமிழ்க்கோட்டம், சென்னை-2016. 2) ப. முத்துக்குமாரசாமி, "இருபதாம் நூற்றாண்டின் 100 தமிழ்க் கவிஞர்கள்" பழனியப்பா பிரதர்ஸ்-2004.

"https://tamilar.wiki/index.php?title=ஹா._கி._வாலம்&oldid=5975" இருந்து மீள்விக்கப்பட்டது