ஹன்சு ராம்
இந்த article எந்தப் பகுப்பிலும் சேர்க்கப்படவில்லை. சரியான பகுப்புகள் தெரிந்தால், சேர்த்து உதவுங்கள் |
ஹன்சு ராம் | |
|---|---|
| உத்தரப் பிரதேச சட்டப் பேரவை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் March 2022 | |
| முன்னையவர் | தனஞ்சய் கன்னோஜியா |
| தொகுதி | பெல்தாரா சாலை |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 1 சூன் 1955 ஆசம்கர், உத்தரப் பிரதேசம் |
| தேசியம் | இந்தியன் |
| அரசியல் கட்சி | சுகல்தேவ் பாரதிய சமாச் கட்சி |
| துணைவர் | சவிதா தேவி |
| பிள்ளைகள் | 6 |
| பெற்றோர் |
|
| கல்வி | முதுகலை |
| முன்னாள் மாணவர் | தீன் தயாள் உபாத்யாய் கோரக்பூர் பல்கலைக்கழகம் |
| பணி | அரசியல்வாதி, உழவர் |
ஹன்சு ராம் (Hansu Ram) ஓர் இந்திய அரசியல்வாதியும், விவசாயியும் ஆவர். இவர் உத்தரப் பிரதேசத்தில் 18வது சட்டமன்றத்தின் உறுப்பினர் ஆவார். இவர் உத்தரப் பிரதேசத்தின் பாலியா மாவட்டத்தில் உள்ள பெல்தாரா ரோடு (Belthara Road) தொகுதியில் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.[1][2][3] இவர் சுஹெல்தேவ் பாரதிய சமாஜ் (Suheldev Bharatiya Samaj Party) கட்சியின் உறுப்பினராக உள்ளார்.[1][2][3]
ஆரம்ப வாழ்க்கை
ஹன்சு ராம் 1 சனவரி 1955 அன்று உத்தரப் பிரதேசம், ஆசாம்கர் (Azamgarh) பகுதியில் ஓர் இந்து குடும்பத்தில் பிறந்தார்.[1] இவருடைய தந்தையின் பெயர் லக்ராஜ். இவர் 1 மே 1963 அன்று சவிதா தேவி (Savita Devi) அவர்களைத் திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியருக்கு ஆறு குழந்தைகள் உள்ளனர்.[1]
கல்வி
ஹன்சு ராம் 1977 ஆம் ஆண்டு கோரக்பூரில் உள்ள மகாத்மா காந்தி போஸ்ட் கிராஜுவேட் கல்லூரியில் (Mahatma Gandhi Post Graduate College) கல்வியியல் பட்டம் (B.Ed.) பெற்றார்.[4]
பின்னர் இவர் கோரக்பூரில் உள்ள தீன் தயால் உபாத்யாய கோரக்பூர் பல்கலைக்கழகத்தில் (Deen Dayal Upadhyay Gorakhpur University) சேர்ந்து 1988 ஆம் ஆண்டு அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டம் (M.A. Political Science) பெற்றார்.[4]
பதவிகள்
| எண் | முதல் | வரை | பதவி | குறிப்புகள் |
|---|---|---|---|---|
| 01 | 2022 | தற்போதும் | உத்தரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினர் |
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 1.2 1.3 "Members of Uttar Pradesh Legislative Assembly". uplegisassembly.gov.in. Uttar Pradesh Legislative Assembly. Retrieved 4 June 2024.
- ↑ 2.0 2.1 "Hansu Ram". prsindia.org. PRS Legislative Research. Retrieved 4 June 2024.
- ↑ 3.0 3.1 "Hansu Ram, SBSP MLA from Belthara Road". ourneta.com. Retrieved 4 June 2024.
- ↑ 4.0 4.1 "Hansu Ram(Suheldev Bharatiya Samaj Party):Constituency- BELTHARA ROAD (SC)(BALIA)". myneta.info. Retrieved 4 June 2024.