ஷீலா பாட்டியா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ஷீலா பாட்டியா
பிறப்பு1916 மார்ச் 1
சியால்கோட், பிரித்தானிய இந்தியா
இறப்பு2008 பிப்ரவரி 17
இந்தியா
பணிகவிஞர், நாடக ஆசிரியர், நாடக ஆளுமை
அறியப்படுவதுபஞ்சாபி ஓபரா
விருதுகள்பத்மசிறீ
சங்கீத நாடக அகாதமி விருது
பஞ்சாபி அகாடமி பரம் சாஹித் சர்க்கார் சன்மன்
டெல்லி நிர்வாக விருது
கலிப் விருது
பஞ்சாபி கலை அமைப்பு விருது
டிஏ சிறந்த இயக்குனர் விருது
உருது அகாடமி விருது
காளிதாஸ் சம்மன் விருது
பரம் சாஹித் சர்க்கார் சம்மன்

ஷீலா பாட்டியா (Sheila Bhatia) இவர் ஓர் இந்திய கவிஞரும், நாடக ஆசிரியரும், நாடக ஆளுமையும் [1] மற்றும் இந்திய கலை வடிவங்களை மேம்படுத்துவதற்காக தில்லியை தளமாகக் கொண்ட தில்லி கலையரங்கம் என்ற மன்றத்தின் நிறுவனரும் ஆவார். [2] நாடக இயக்கங்களை உள்ளடக்கிய நடன நாடகத்தின் இந்திய வடிவமான பஞ்சாபி ஓபரா, ஷீலா பாட்டியாவால் தோன்றியதாக கூறப்படுகிறது. [3] இந்திய அரசு 1971 இல் நான்காவது உயர்ந்த இந்திய குடிமை விருதான பத்ம சிறீ விருதினை வழங்கி கௌரவித்தது. [4] பத்தாண்டுகளுக்குப் பிறகு, 1982 ஆம் ஆண்டில் நாடக இயக்கத்திற்கான சங்கீத நாடக அகாதமி விருதையும் பெற்றார் [5] பின்னர் 1997 இல் காளிதாஸ் சம்மன் விருதும் இவருக்கு வழங்கப்பட்டது .

சுயசரிதை

ஷீலா பாட்டியா 1916ஆம் ஆண்டு மார்ச் 1 ஆம் தேதி [3] பிரித்தானிய இந்தியாவில் சியால்கோட்டில், இன்றைய பாக்கித்தானில் பிறந்தார். இளங்கலைப் பட்டம் பெற்ற பிறகு, இவர் கல்வியியல் பட்டம் பெற்றார் . பின்னர், லாகூரில் கணித ஆசிரியராக பணியாற்றத் தொடங்கினார். மேலும் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். [2] பின்னர் இவர் தில்லிக்குச் சென்று அங்கு தில்லி கலையரங்கத்தை நிறுவினார். [6] இவர் தேசிய நாடகப் பள்ளியுடன் நடிப்புத் துறையின் தலைவராகவும் பணியாற்றினார்.

பாட்டியாவின் முதல் தயாரிப்பு கால் ஆஃப் தி வேலி, ஒரு இசைப் பணியாகும். [2] [3] அதைத் தொடர்ந்து 60 க்கும் மேற்பட்ட தயாரிப்புகள், ஹீர் ரஞ்சா (1957), டார்ட் ஆயேகா டேபே பாவ்ன் (1979), சுல்கடா தர்யா (1982), உமர் கயாம் (1990), நசீப் (1997), சான் பத்லா டா, லோஹா குட், காலிப் கோன் தா மற்றும் புனாபியில் நாதிர் ஷா மற்றும் குய்ஸா யே அவுரத் கா (1972), ஹவா சே ஹிப்பி டக் (1972), மற்றும் யே இஸ்க் நஹின் அசன் (1980) என்னும் உருது படைப்புகள். [6] பைஸ் அகமது பைஸின் பின்பற்றுபவரான, [7] பாட்டியா தனது தொகுப்பான பார்லோ டா ஜக்கார் (1950) உட்பட 10 வெளியீடுகளையும் கொண்டுள்ளார்.

விருதுகள்

1971ஆம் ஆண்டில் இந்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருதினை வழங்கி கௌரவித்தது . [4] 1982 ஆம் ஆண்டில் சிறந்த இயக்கத்திற்கான சங்கீத நாடக அகாடமி விருதைப் பெற்றார். [5] அடுத்த ஆண்டு, இவருக்கு காலிப் விருது (1983) வழங்கப்பட்டது. பின்னர் பஞ்சாபி கலை மன்ற விருதும் வழங்கப்பட்டது. 1986 ஆம் ஆண்டில் தில்லி நிர்வாகத்திடமிருந்தும் 1997 இல் காளிதாஸ் சம்மனிடமிருந்தும் சிறந்த இயக்குநர் விருதைப் பெற்றார். இவர் உருது அகாடமி விருது மற்றும் பஞ்சாபி அகாடமியின் (2000) பரம் சாஹித் சர்க்கார் சன்மன் ஆகியவற்றைப் பெற்றவர். [8]

இறப்பு

ஷீலா பாட்டியா 2008 பிப்ரவரி 17 அன்று தனது 91 வயதில் இறந்தார். [3]

குறிப்புகள்

  1. "Aesthetics of Indian Feminist Theatre". Rup Katha. 2015. பார்க்கப்பட்ட நாள் 30 May 2015.
  2. 2.0 2.1 2.2 "Rich tributes paid to Sheila Bhatia". The Hindu. 23 February 2008. பார்க்கப்பட்ட நாள் 30 May 2015.
  3. 3.0 3.1 3.2 3.3 "Shiela Bhatia – A legend of Indian Operas passes away". Stage Buzz. 2008. Archived from the original on 4 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 30 May 2015.
  4. 4.0 4.1 "Padma Shri" (PDF). Padma Shri. 2015. Archived from the original (PDF) on 15 நவம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 11 November 2014. {{cite web}}: Unknown parameter |https://www.webcitation.org/6U68ulwpb?url= ignored (help)
  5. 5.0 5.1 "Sangeet Natak Akademi Award". Sangeet Natak Akademi. 2015. Archived from the original on 30 May 2015. பார்க்கப்பட்ட நாள் 30 May 2015.
  6. 6.0 6.1 Manoj Sharma (16 November 2011). "Capital's cultural affair began in 50s". Hindustan Times. Archived from the original on 30 மே 2015. பார்க்கப்பட்ட நாள் 30 May 2015.
  7. "India, whose love could have killed him". Dawn. 13 February 2011. பார்க்கப்பட்ட நாள் 30 May 2015.
  8. "Academy award for Harkishan Singh". The Tribune. 18 May 2000. பார்க்கப்பட்ட நாள் 30 May 2015.

மேலும் படிக்க

"https://tamilar.wiki/index.php?title=ஷீலா_பாட்டியா&oldid=18943" இருந்து மீள்விக்கப்பட்டது