ஷாநவாஸ்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ஷாநவாஸ்
ஷாநவாஸ்
இயற்பெயர்/
அறியும் பெயர்
ஷாநவாஸ்
பிறந்தஇடம் அபிராமம், தமிழ்நாடு, இந்தியா
தேசியம் இந்தியன்
அறியப்படுவது கதையாசிரியர்
பத்தி எழுத்தாளர்
கட்டுரையாளர்
கவிஞர்
இணையதளம் ஷாநவாஸ்

ஷாநவாஸ் என்றழைக்கப்படும் முகம்மது காசிம் ஷாநவாஸ் இராமநாதபுரம் மாவட்டம், நத்தம் (அபிராமம்) என்ற ஊரில் 1959 ல் பிறந்தவர். தற்போது சிங்கப்பூரில் வசித்து வருகிறார். உணவகத்தின் உரிமையாளர், கதையாசிரியர், பத்தி எழுத்தாளர், கட்டுரையாளர்,கவிஞர் என்ற பன்முகத்தன்மையுடன் சிங்கப்பூர் இலக்கிய வெளியில் செயல்படும் இவர் இந்திய, சீன, மலாய் உணவுக் கலாச்சாரம் சார்ந்த கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதி வருவதோடு சிங்கப்பூர் வாசகர் வட்டத்தின் ஒருங்கிணைப்பாளராகவும்,சிங்கப்பூர் மாத இதழ் சிராங்கூன் டைம்ஸின் முதன்மை ஆசிரியராகவும் உள்ளார்.

கல்வி

திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் வேதியியல் பிரிவில் இளங்கலைப் பட்டமும், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் அரசியல் மற்றும் பொது நிர்வாகத்துறையில் முதுகலைப்பட்டமும் பெற்றவர்.

எழுத்துப்பணி

மத்திய அரசுத்துறையில் பணியாற்றிய போது கலை இலக்கியப் பணிமன்றம் மூலம் ஆரம்பித்த எழுத்துப் பணியைத் தொடர்ந்து வருகிறார். உயிரோசை, சிங்கப்பூர் கிளிஷே ஆகியவைகளில் பத்திக் கட்டுரைகள் எழுதி இருக்கிறார். வாதினி மாத இதழ், தங்கமீன் இணைய இதழ், சிங்கப்பூரிலிருந்து வெளிவரும் தமிழ்முரசு நாளிதழ், ஆஸ்திரேலியாவிலிருந்து வெளிவரும் தமிழ்முரசு வார இதழ் ஆகியவைகளில் இவரின் படைப்புகள் வெளிவந்துள்ளன.

சிங்கப்பூரைக் களமாகக் கொண்டு வெளிவரும் தி சிராங்கூன் டைம்ஸ் மாத இதழின் முதன்மை ஆசிரியர்.

இவர் உயிரோசை இணைய இதழில் தொடராக எழுதிய “அயல்பசி” பத்தி எழுத்துகளை 2012 ம் ஆண்டுக்கான சிறந்த பண்பாட்டுக் கட்டுரையாக எஸ். ராமகிருஷ்ணன் தேர்வு செய்தார்.[1]

சிங்கப்பூர் வாசகர் வட்டம் 2017 ம் ஆண்டு வெளியிட்ட “இடமும் இருப்பும்” என்ற சிறுகதைத் தொகுப்பின் தொகுப்பாசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.[2]

வெளிவந்துள்ள நூல்கள்

கட்டுரைத் தொகுப்புகள்

  • ஒரு முட்டை புரோட்டாவும், சாதா புரோட்டாவும்[3]
  • துண்டு மீனும், வன்முறைக் கலாச்சாரமும்
  • அயல்பசி[4]
  • நனவு தேசம்[5]
  • காலச்சிறகு

சிறுகதைத் தொகுப்பு

  • மூன்றாவது கை
  • ஒலி மூங்கில்

கவிதைத் தொகுப்பு

  • சுவை பொருட்டன்று[6]

பெற்றுள்ள விருதுகள்

  • சிங்கப்பூர் இலக்கிய விருது 2014
  • கரிகாலன் விருது 2015[7]
  • மு.கு.இராமச்சந்திரா நினைவுப்பரிசு
  • சிங்கப்பூர் இலக்கிய விருது 2016 [8]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=ஷாநவாஸ்&oldid=6071" இருந்து மீள்விக்கப்பட்டது