வ. கீதா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
வ. கீதா
வ. கீதா
இயற்பெயர்/
அறியும் பெயர்
வ. கீதா
அறியப்படுவது எழுத்தாளர்


வ.கீதா இந்தியாவின் தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர்,மொழி பெயர்ப்பாளர், சமூக வரலாற்று ஆசிரியர்.

இவர் உதவித் தொகையுடன் ஐக்கிய அமெரிக்காவின் ஐயோவா பல்கலைக்கழகத்தில் படித்துவிட்டு தாயகம் திரும்பியவர்.[1] 1988 ஆம் ஆண்டிலிருந்து இந்தியப் பெண்கள் இயக்கத்தில் பணியாற்றி வருகிறார். தமிழிலும் ஆங்கிலத்திலுமாக 10 நூல்கள் எழுதியிருக்கிறார். ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும் தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கும் மொழிபெயர்ப்புக்கள் செய்துள்ளார். தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு இவர் மொழிபெயர்த்த நூல்களுள் பெருமாள் முருகனின் நாவல்கள் இரண்டு ஆகும். அவை: சீசன் ஆப் பாம் (Season of the Palm) (தமிழில் -கூளமாதாரி), கரண்ட் சோ (Current Show) (தமிழில் - நிழல்முற்றம்).

எழுத்தாளர் எஸ். வி. ராஜதுரையுடன் இணைந்து பெரியார்: சுயமரியாதை, சமதர்மம் உள்ளிட்ட நூல்களை எழுதியுள்ளார். அவருடன் இணைந்து இவர் தொகுத்த இரிவால்ட் இதழின் தொகுப்பை பெரியார் திராவிடர் கழகம் வெளியிட்டுள்ளது.

குறிப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=வ._கீதா&oldid=5737" இருந்து மீள்விக்கப்பட்டது