வை. சு. சண்முகனார்
வை. சு. சண்முகனார் என்பவர் தமிழக சுயமரியாதை இயக்க தலைவர்களுள் ஒருவராக அறியப்படுகிறார். இவர் கானாடுகாத்தான் வயி. சு. சண்முகம் செட்டியார் என்றும் அழைக்கப்படுகிறார். இவரை சீர்திருத்தச் செம்மல், வள்ளல் என்ற அடைமொழியோடு அழைத்துள்ளனர்.
இயற்பெயர்/ அறியும் பெயர் |
வை. சு. சண்முகனார் |
---|---|
பிறந்ததிகதி | 19 செப்டம்பர் 1894 |
இறப்பு | சூன் 19, 1962 | (அகவை 67)
அறியப்படுவது | தமிழறிஞர், சுயமரியாதை இயக்க தலைவர் |
துணைவர் | லட்சுமி ஆச்சி |
பிள்ளைகள் | சோலை, பார்வதி நடராஜன் |
வாழ்க்கை வரலாறு
தமிழ்நாடு மாநிலத்தில் காரைக்குடி அருகே கானாடுகாத்தான் ஊரில் அழகம்மையாச்சி, சுப்பிரமணியம் ஆகியோருக்கு மகனாக 1962 இல் சண்முகனார் பிறந்தார். சண்முகனார் தன்னுடைய பத்தாம் வயதில் இலட்சுமி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இத்தம்பதிகளுக்கு சோலை, பார்வதி என்ற இரு குழந்தைகள் பிறந்தனர்.
சீர்திருத்த பணிகள்
1935 இல் சுயமரியாதை திருமணத்தின் பகுதியாக புரோகித மறுப்புத் திருமணத்தை முதன் முதலாக சண்முகனார் நடத்தியுள்ளார். பெரியார் ஈ. வே. ராமசாமி அவர்களின் முன்னிலையில் நடராஜன் என்பவருக்கும் சண்முகனாரின் மகள் பார்வதிக்கும் இத்திருமணம் நடைபெற்றுள்ளது.
கொடைகள்
சேரன்மாதேவி குருகுலத்திற்கு முப்பத்தியொரு ஏக்கர் நிலத்தை தானமாக தந்துள்ளார். [1] காரைக்குடி சொ. முருகப்பா அவர்கள் காரைக்குடியில் நடத்திய இராமாநாதபுர மாவட்டச் சுயமரியாதை மாநாட்டிற்குப் பொருளுதவி செய்துள்ளார்.
அரசியல் பணிகள்
இவர் தனவைசிய ஊழியர் சங்கம் என்பதை காரைக்குடியில் தொடங்கினார்.[2] இதில் தமிழ்க் கடல் ராய சொக்கலிங்கம், சொ. முருகப்பா, பிச்சப்பா சுப்பிர மணியம், காசிச் செட்டியார், காந்திமெய்யப்பன் ஆகியோர் இணைந்திருந்தனர்.
ஆதாரங்கள்
- ↑ மணி, கொளத்தூர் (30 அக்., 2020). "வ.உ.சி.யின் சுதேசி கப்பல் கம்பெனிக்கு - பெரியார் பங்குத் தொகை வழங்கி, நிதியும் திரட்டித் தந்தார்". https://www.keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzakkam-oct-2020/41052-2020-10-29-13-29-15.
- ↑ ":: TVU ::". https://www.tamilvu.org/slet/ln00101/ln00101pag.jsp?bookid=292&pno=79.