வைகைச் செல்வன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
வைகைச் செல்வன்
வைகைச் செல்வன்
இயற்பெயர்/
அறியும் பெயர்
வைகைச் செல்வன்
அறியப்படுவது எழுத்தாளர்
அரசியல்வாதி

வைகைச் செல்வன் என்பவர் தமிழக அரசியல்வாதி, எழுத்தாளர் மற்றும் கவிஞர். மதுரை மாவட்டம், பேரையூர் வட்டம், சிலைமலைப்பட்டி எனும் கிராமத்தைச் சேர்ந்த இவர், “இணைய இதழ்கள் - ஓர் ஆய்வு” எனும் தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார். இவர் அ.இ.அ.தி.மு.கவில் இளைஞர் - இளம்பெண்கள் பாசறையின் மாநிலச் செயலாளராக 2013 செப்டம்பர் 5 ஆம் நாள் வரை பதவி வகித்தார். இதற்கு முன்பாக 17 ஆண்டுகள் அ.இ.அ.தி.மு.க.வின் இலக்கிய அணிச்செயலாளராக இருந்து வந்தார்.

அமைச்சர்

2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். 2012, அக்டோபர் 6 முதல் 2013, பிப்ரவரி 27 வரை தமிழ்நாடு அரசின் தலைமைக் கொறடாவாக செயல்பட்டு வந்தார். 2013, பிப்ரவரி 28 அன்று தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டார்.[1], [2] 2013 செப்டம்பர் 5 ஆம் நாள் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். [3]

குடும்பம்

இவருக்கு முத்துச்செல்வி என்கிற மனைவியும், நற்றிணை, நற்றமிழ் என்கிற ஜெயஸ்ரீ எனும் இரு மகள்களும் இருக்கின்றனர்.

பதிப்பகம்

இவர் நற்றிணை பதிப்பகம் என்னும் நூல் வெளியீட்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

எழுதியுள்ள நூல்கள்

  1. வடக்கை வெல்லும் தெற்கு
  2. வைகைச்செல்வன் கவிதைகள்
  3. சில்லுக்கருப்பட்டி (சிறுகதைகள்)
  4. திருக்குறள் நவீன உரை
  5. உயர்திரு
  6. அனுமதி இலவசம்
  7. கனவோடு வெகுதூரம் (நாவல்)

விருதுகள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=வைகைச்_செல்வன்&oldid=5907" இருந்து மீள்விக்கப்பட்டது