வேலய்யர்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
வேலய்ய சுவாமிகள்
பிறப்பு(1768-05-10)10 மே 1768
காஞ்சிபுரம்
இறப்பு17 நவம்பர் 1840(1840-11-17) (அகவை 72)
பெரம்பலூர் அருகேயுள்ள பெருமாத்தூர்
இயற்பெயர்வேலய்யர்
தத்துவம்சைவம்

வேலய்யர் (Velaiyar), "வேலய்ய சுவாமிகள்" எனவும் அழைக்கப்படுகிறார். இவர் 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆன்மீக எழுத்தாளர். இவர் தமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரத்தில், தமிழ் பேசும் தேசிகர் குடும்பத்தில் பிறந்தார். இவர் ஏழு நூல்களுக்கு மேல் தொகுத்துள்ளார்.

குடும்ப பின்னணி

வேலய்யர் தென்னிந்தியாவில் தமிழ்நாட்டில் உள்ள காஞ்சிபுரம் என்கிற தொண்டை மண்டலத்தில் 17 ஆம் நூற்றாண்டின் மத்தியில் ஒரு மரபுவழி சைவ தமிழ் தேசிகர் குடும்பத்தில் பிறந்துள்ளார் , வேலய்யரின் தந்தை குமாரசாமி தேசிகர், ஒரு அர்ச்சகர் மற்றும் தீக்‌ஷிதர் ஆவார். அவரது குடும்பம், இலக்கிய, இறையியல் மற்றும் இசை பங்களிப்புகளுக்காக அறியப்பட்டது. இளம் வயதில், அவரது தந்தை தனது குடும்பத்தை விட்டுவிட்டு திருவண்ணாமலைக்கு தனது சீடர்களுடன் சென்றார், அங்கு அவர் ஒரு துறவியாக எண்ணினார். எனினும், அவர் திருமணம் செய்துகொண்டு, மூன்று மகன்கள் மற்றும் ஒரு மகளைப் பெற்றார். வேலய்யர் தன் பெற்றோருக்கு மூன்றாவதாகப் பிறந்தார். அவருடன் பிறந்தவர்கள் முறையே சிவப்பிரகாசர், கருணை பிரகாசர் மற்றும் ஞானாம்பிகை அம்மாள் ஆவர்.

சிவப்பிரகாசர் அனைவராலும் நன்கு அறியப்பட்ட கவிஞர் ஆவார். அவருக்கு "சிவானுபூதிச்செல்வர்" என்கிற பெயரும் உண்டு. அவர் தமிழறிஞர்களால் "கற்பனைக் களஞ்சியம்" என அழைக்கப்பட்டார். அவர் "நீரோட்ட யமக அந்தாதி" என்னும் நூலை தொகுத்தார். அதிலுள்ள வரிகளை படிக்கும்போது படிப்பவரின் உதடுகள் ஒட்டாது. மேலும், அவர் "இயேசு மத நிராகரணம்" என்னும் நூலை எழுதினார். தனது 32வது வயதில் பாண்டிச்சேரி அருகிலுள்ள நல்லாத்தூரில் இறந்தார்.[1][2]

இவருடைய சகோதரி ஞானாம்பிகை சாந்தலிங்க சுவாமிகளை மணந்தார்.[3] அவர்களுக்கு குழந்தைகள் இல்லை. அவரது கணவர் துறவியானதால் ஞானாம்பிகை அம்மாள் தனது சகோதரர் வேலய்யருடன் தங்கினார். அவருடைய வாழ்க்கை பொம்மாபுரம் மடத்தில் கடவுளுக்குத் தொண்டு செய்வதில் கழிந்தது. கருணா பிரகாசர் திருமணம் செய்து கொண்டு, தமிழ் மொழியில் சீகலாதி சருக்கம், இஷ்டலிங்க அகவல் போன்ற ஐந்து புத்தகங்களை எழுதினார். அவருக்கும் குழந்தைகளும் இல்லை. அவர் திருவெங்கையில் இறந்தார்.

வேலய்யர் மீனாட்சி அம்மாளை திருமணம் செய்துகொண்டு, பொம்மாபுர ஆதீன மடத்திற்கு அருகிலுள்ள மயிலம் முருகன் கோயிலில் தங்கினார். அவருக்கு சுந்தரேசனார் என்கிற மகன் இருந்தார். வேலய்யர் தனது 72வது வயதில் பெருமாத்தூரில் இறந்தார். வேலய்யரின் மகன் சுந்தரேசனார் கற்பகம்மாளை மணந்தார். அவர்கள் மயிலம் அருகே உள்ள வளவனூரில் வசித்தனர். அவர்களுடைய மகன் சுவாமிநாத தேசிகர் கிறிஸ்துவ மதத்திற்கு மாறி, தன்னுடைய பெயரை சூசை என்கிற சுவாமிநாத தேசிகர் என்று மாற்றிக்கொண்டார். மற்றும் ஞானசௌந்தரியை திருமணம் செய்தார்.

இளமைப்பருவம்

வேலைய்யர் தனது சகோதரர் சிவப்பிரகாச சுவாமிகளுடன் தமிழ்நாடு முழுவதும் பயணித்து, திருவண்ணாமலை, திருச்செந்தூர், மயிலம் முருகன் கோயில். போன்ற திருத்தலங்களுக்குச் சென்று வழிபட்டார். அவ்வாறு பயணம் செய்து, வேலய்யர், சிவப்பிரகாச சுவாமிகள் மற்றும் கருணைப்பிரகாசர் ஆகிய மூவரும் திருநெல்வேலியை அடைந்தனர். அங்குள்ள பண்டிதர் "வள்ளியூர் தம்பிரானிடம்" பாடம் கற்றுக்கொள்ள விரும்பினர். வள்ளியூர் தம்பிரான் தமிழ் இலக்கணத்தில் வல்லவர். அவர் இம்மூவரையும் மாணாக்கர்களாகச் சேர்த்துக் கொண்டார். வேலய்யரும் அவரது சகோதரர்களும் வள்ளியூர் தம்பிரானிடம் தமிழ் இலக்கணம் பயின்றனர்.

எழுதிய நூல்கள்

  • மயிலத்துள
  • நல்லூர் புராணம்
  • மயிலை திரட்டை மணி மாலை
  • இஷ்ட லிங்க கைத்தல மாலை
  • கும்பகோண சாரங்கத்தேவர் வரலாறு - வீர சிங்காதன புராணம்"
  • குகை நமச்சிவாய தேசிகர் வரலாறு - நமச்சிவாய லீலை
  • கிருஷ்ணன் வரலாறு - பாரிஜாத லீலை

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=வேலய்யர்&oldid=19791" இருந்து மீள்விக்கப்பட்டது