வேங்கைவயல்
வேங்கைவயல் | |
|---|---|
வேங்கைவயல், புதுக்கோட்டை மாவட்டம், தமிழ்நாடு | |
| ஆள்கூறுகள்: 10°28′16″N 78°49′01″E / 10.4710°N 78.8170°E | |
| நாடு | |
| மாநிலம் | |
| மாவட்டம் | புதுக்கோட்டை |
| ஏற்றம் | 109.21 m (358.30 ft) |
| மக்கள்தொகை (2011) | |
| • மொத்தம் | 854 |
| மொழிகள் | |
| • அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
| • பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இ. சீ. நே.) |
| அஞ்சல் குறியீட்டு எண் | 622501 |
| புறநகர்ப் பகுதிகள் | முட்டுக்காடு, வெள்ளனூர் |
| மக்களவைத் தொகுதி | திருச்சிராப்பள்ளி |
| சட்டமன்றத் தொகுதி | கந்தர்வக்கோட்டை |
வேங்கைவயல் என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அன்னவாசல் ஊராட்சி ஒன்றியத்தின் முட்டுக்காடு ஊராட்சிக்குட்பட்ட ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1][2] 2024-ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் இந்தியாவில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், தமிழ்நாட்டிலுள்ள மக்கள் தேர்தலைப் புறக்கணித்த கிராமங்களில், வேங்கைவயல் ஊரும் ஒன்றாகும்.[3]
அமைவிடம்
கடல் மட்டத்திலிருந்து சுமார் 109.21 மீ. உயரத்தில், (10°28′16″N 78°49′01″E / 10.4710°N 78.8170°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு வேங்கைவயல் அமையப் பெற்றுள்ளது.
மக்கள்தொகை பரம்பல்
2011 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில், வேங்கைவயல் ஊரின் மொத்த மக்கள்தொகை 854 பேர் ஆகும். இதில் 434 பேர் ஆண்கள் மற்றும் 420 பேர் பெண்கள் ஆவர்.[4]
அரசியல்
வேங்கைவயல் பகுதியானது, கந்தர்வக்கோட்டை (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். மேலும் இப்பகுதி, திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதி சார்ந்தது.[5]
மேற்கோள்கள்
- ↑ "Vengavayal village". www.onefivenine.com. Retrieved 2025-01-25.
- ↑ "Vengaivayal inspection & Meeting News" (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2025-01-25.
- ↑ "தமிழ்நாடு: எந்தெந்த கிராமங்கள் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணித்தன? என்ன காரணம்?" (in ta). 2024-04-19. https://www.bbc.com/tamil/articles/crgynlngvx2o.
- ↑ "Vengavayal Village Population - Kulathur - Pudukkottai, Tamil Nadu". www.census2011.co.in. Retrieved 2025-01-25.
- ↑ "Village (गाव): Vengavayal". localbodydata.com. Retrieved 2025-01-25.