வேக்மன் ஜெயராசா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
வேக்மன் ஜெயராசா
வேக்மன் ஜெயராசா
இயற்பெயர்/
அறியும் பெயர்
வேக்மன் ஜெயராசா
பிறந்ததிகதி அக்டோபர் 21, 1945
இறப்பு 28 மே 2021


வேக்மன் ஜெயராசா(அக்டோபர் 21, 1945- 28 மே 2021) ) பேக்மன் ஜெயராசா, பேக்மன் செயராசா அருளப்பு. ஈழத்து நாட்டுக்கூத்துக் கலைஞர். நாட்டுக்கூத்து நாடகங்கள், இசை நாடகங்கள் நடித்துள்ளார். பல நாட்டுக்கூத்துக்கள் பழக்கியுள்ளார். தன் குரல் வளத்திற்காக பெரிதும் ரசிக்கப்பட்டார்.

வாழ்க்கைக் குறிப்பு

இலங்கை யாழ்ப்பாணம் பறங்கித்தெருவில் அக்டோபர் 21, 1945-ல் ஜெயராசா அருளப்புவின் மகனாகப் பிறந்தார். 1975-லிருந்து கொழும்புத்துறையில் வசித்தார். கொழும்புத்துறை புனித ஜோசப் பாடசாலையில் கல்வி கற்றார். தொலைத்தொடர்பு திணைக்களத்தில் (Telecommunication Department) பணி புரிந்தார். பெரிய தகப்பனார் நாவாத்துறையைச் சேர்ந்த மரிசலினும் சிறியதந்தை சூசை மரியானும் அண்ணாவியார்கள். இவர்களுடன் சேர்ந்து சிறுவயதில் ஒப்பாரிப் பாடல்களை வேக்மன் ஜெயராசா பாடினார்.

கலை வாழ்க்கை

வேக்மன் ஜெயராசா அண்ணாவியார் பரம்பரையைச் சேர்ந்தவர். எட்டாம் வகுப்பில் யுவானியார் நாடகத்தில் 'ஏரோலியான்' பாத்திரத்தில் நடித்தார். இவரின் குரல்வளத்திற்காக நாட்டுக்கூத்து மன்னன் 'பூத்தான் யோசேப்' தனது நாடகங்களில் சேர்த்துக் கொண்டார். 'சகுந்தலை', 'ஏரோதன்' போன்ற பல நாட்டுக்கூத்து இசை நாடகங்களை நடித்தார். நாவாந்துறை, பாசையூர், கொய்யாத்தோட்டம், குருநகர், ஊர்காவற்றுறை, கரம்பன், சில்வாலை, இளவாலை, மயிலிட்டி, ஊரணி, அச்சுவேலி, தாளையடி, கொழும்பு, கிளிநொச்சி, வவுனியா ஆகிய இவர் நடித்த நாடகங்கள் பல இடங்களில் மேடையேற்றப்பட்டன. ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்றும் வேக்மன் ஜெயராசா நடித்தார்.

மறைவு

வேக்மன் ஜெயராசா (பேக்மன் ஜெயராசா) 28 மே 2021) ல் மறைந்தார்

விருதுகள்

  • 1972-ல் கனக்கர் சந்தியில் பேராயர் தியாகுப்பிள்ளை "மெல்லிசை மன்னன்" பட்டத்தை அளித்துப் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தார்.
  • 1975-ல் அண்ணாவியார் தியாகு இராசேந்திரம் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தார்.
  • 1978-ல் அருட்திரு P.M. இம்மானுவல் அடிகளார் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தார்.
  • 1993-ல் திருமறைக் கலாமன்றத்தில் பேராசிரியர் சவிரிமுத்து அடிகளார் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தார்.

நடித்த நாடகங்களும் பாத்திரங்களும்

  • சங்கிலியன் - பரதிருபன்
  • தேவசகாயம்பிள்ளை - 2-ஆவது தேவசகாயன்
  • ஜெனோவா - மந்திரி (வானொலியிலும் இடம்பெற்றது)
  • எஸ்தாக்கி - எஸ்தாக்கியார்
  • அலங்காரரூபன் - அலங்காரரூபன்
  • மனம்போல் மாங்கல்யம் - ஒலாண்டோ
  • மரியதாசன் - மரியதாஸ்
  • யுவானியார் - யுவானியார்
  • மெய்காப்போன் கடமை - தமயன்
  • நீ ஒரு பாறை - ராசப்பன்
  • யோகு - யோகு
  • சோழன் - முனிவர்

இசை நாடகங்கள்

  • சகுந்தலை - முனிவர்
  • ஏரோதன் - முனிவர்

பழக்கிய நாடகங்கள்

  • மனம்போல் மாங்கல்யம்
  • எஸ்தாக்கியார்
  • தேவசகாயம்பிள்னள
  • சங்கிலியன் (சில்லாலையில் பறக்கிறது)
  • யூலியசீசர் (ஓட்டகப்புலத்தில் பழக்கியது)
  • கருங்குயில் குன்றத்துக் கொலை (மயிலிட்டியில் பழக்கியது)
  • மனுநீதிகண்ட சோழன் (ஆங்கிவ திருக்குடும்ப பாடசாளை)
  • சோழன் மதின் (ஜோன் பொஸ்கேர் பாடசாலை)

உசாத்துணை

"https://tamilar.wiki/index.php?title=வேக்மன்_ஜெயராசா&oldid=9714" இருந்து மீள்விக்கப்பட்டது