வெ. ஜீவானந்தம்
வெ. ஜீவானந்தம் (1945 - 2021) என்பவர் இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், ஈரோட்டைச் சேர்ந்த அ மருத்துவர் மற்றும் சூழலியலாளர், மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர் தமிழக பசுமை இயக்கத்தை உருவாக்கியவர் ஆவார்.
வாழ்க்கையும் கல்வியும்
இவரது பெற்றோர் பெரியார் தலைமையில் திருமணம் செய்து கொண்டவர்கள். தந்தை எஸ். பி. வெங்கடாசலம் தாய் லூர்துமேரி. அவரது தந்தை விடுதலைப் போராட்டவீரர். இளம் வயதிலேயே இந்திய பொதுவுடமைக் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டவர். தாய்வழி பாட்டனார் பெரியாருடன் இணைந்து செயல்பட்டவர். ஜீவானந்தம் பள்ளிப் படிப்பை ஈரோட்டில் முடித்து, திருச்சி தேசியக் கல்லூரியில் பி.எஸ்.சி. படித்தபின்னர், தஞ்சை மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் . சென்னை மருத்துவக் கல்லூரியில் மயக்கவியல் படிப்பை முடித்தார். கோவை அக்குபங்சர் கழகத்தில் பட்டயம் பெற்றுள்ளார்.
தொழில்
அடிப்படையில் மயக்கவியல் மருத்துவரான இவர் குடிப் பழக்கத்துக்கு அடிமையானோரை மீட்கும் மருத்துவமனையை 1987 இல் இருந்து நடத்திவந்தார். ஏழை எளியவர்கள் குறைந்த கட்டணத்தில் தரமான மருத்துவம் பார்க்கும் வகையில் 50க்கும் மேற்பட்ட மருத்துவர்களை இணைத்து கூட்டுறவு முறையில் ஈரோடு டிரஸ்ட் மருத்துவ மனையைத் தொடங்கினார். சித்தார்த்தன் என்ற பெயரில் பள்ளி ஒன்றை தொடங்கினார். ஈரோடு, பெங்களூரு, தஞ்சாவூர், புதுச்சேரி ஆகிய ஊர்களில் பலருடன் இணைந்து கூட்டுறவு முறையில் புற்றுநோய் மருத்துவ மனைகளை தொடங்கினார். நியாயமான முறையில் மருத்துவ பரிசோதனை மையங்ஙளில் நியாயமான கட்டணங்கள இருக்கவேண்டமென்று ஈரோட்டில் 50 பேரைச் சேர்த்து ஒரு ஸ்கேன் மையத்தைத் தொடங்கினார். சந்தையில் எவ்வளவு கட்டணமோ அதில் பாதிதான் அங்கே வசூலிக்கபட்டது. 100 பேரைச் சேர்த்து டயாலிசிஸ் மருத்துவமனை ஒன்றையும் அவ்வாறே தொடங்கினார்.[1] அத்துடன் சுற்றுச்சூழல், கல்வி, மற்றும் சமூகவளர்ச்சி பணிகளில் ஈடுபட்டார். ஈரோட்டில் உள்ள மெட்ரிகுலேசன் மேனிலைப்பள்ளியின் தலைவராகவும், கலை அறிவியல் கல்லூரியின் நிறுவன உறுப்பினராகவும் இருந்தார்.
எழுத்துப் பணிகள்
இவர் 12 புத்தகங்களைப் பதிப்பித்துள்ளார். சுற்றுச்சூழல், மருத்துவம் தொடர்பான கட்டுரைகளை இதழ்களில் எழுதியுள்ளார். பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் எழுதப்பட்ட உதகையின் வரலாற்றை தமிழாக்கம் செய்தார். காந்தியின் இந்திய சுயராஞ்சியம் நூலை மொழியாக்கம் செய்தார். திப்பு சுல்தானின் வாழ்க்கை வரலாற்று நூலை எழுதியுள்ளார். ஜே. சி. குமரப்பாவின் கட்டுரைகளை தாய்மைப் பொருளாதாரம் என்ற பெயரில் மொழிபெயர்த்தார். யூ. ஆர். அனந்தமூர்த்தி, ரெமிலா தப்பார் ஆகியோரின் எழுத்துக்களையும் இவர் மொழிபெயர்த்துள்ளார்.[2]
எழுத்துதிய நூல்கள்
- மருத்துவம் நலமா
- இந்துத்துவாவா இந்திய சுயராஜ்சியமா
- கையா:பூமிதாயின் மரண சாசணம்
- இளையோர்க்கான இந்திய தொன்மக் கதைகள்
- இலம் நமது ஒரே வீடு: அதை காப்பது நம் கடமை
- திப்புவின் வாள்
- நிலமென்னும் நல்லலாள் நகும்
- பூமிக்கான பிராத்தனை
- அவரை வாசு என்றே அழைக்கலாம்
- தாய்மைப் பொருளாதாரம் ( ஜே. சி. குமரப்பாவின் கட்டுரைகளின் தமிழாக்கம் )
- இயற்கைக்குத் திரும்பும் பாதை
- மறக்கப்பட்ட தீர்க்கதரிசி: ஜே. சி. குமரப்பா
- இந்திய சுயராஜ்சியம் (காந்தி எழுதிய நூலின் தமிழாக்கம்)
- பறவைக்கு கூடுண்டு அனைவருக்கும் வீடு
- கண்ணையா குமார் பீகாரிலிருந்து திகார் வரை
- அற்றைக் கனவின் இற்றை ஓசை
- ஊட்டி ஒதகமந்துவாக இருந்த காலங்கள்
வகித்த பதவிகள்
- பவானி ஆறு மாசுபடுவதைத் தடுக்கும் கூட்டமைப்பின் துணைத்தலைவர்.
- நீதிபதி பகவதி சுற்றுச்சூழல் மேம்பாட்டுக் கழகத்தின் உறுப்பினர்.
- மேற்கு தொடர்ச்சி மலையைக் காப்பதற்காக, 40 கல்லூரிகளில் துவக்கப்பட்ட இயக்கத்தின் அமைப்பாளர்.
- தமிழ்நாடு பழங்குடியினர் அமைப்பின் ஆலோசகர்.[3]
குறிப்புகள்
- ↑ "மருத்துவம் மக்களுக்கானது... அது வியாபாரமல்ல!"- `மக்கள் மருத்துவர்' ஜீவானந்தம் நினைவலைகள்! கட்டுரை, வெ. நீலகண்டன், 2021 மார்ச் 2021 6 ஆனந்த விகடன்
- ↑ சமூக மருத்துவர் ஜீவானந்தம், கட்டுரை, வி. பி. குணசேகரன், 2021 மார்ச் 4, இந்து தமிழ்
- ↑ தினமணி தீபாவளி மலர்,1999,தலைசிறந்த தமிழர்கள். பக்கம்53