வெ. இன்சுவை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
வெ. இன்சுவை
வெ. இன்சுவை
இயற்பெயர்/
அறியும் பெயர்
வெ. இன்சுவை
அறியப்படுவது எழுத்தாளர்

வெ. இன்சுவை என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். சேலம் மாவட்டத்தில் பிறந்த இவர் ஆங்கிலம், சமூகவியல், இதழியல் துறைகளில் முதுகலைப் பட்டமும், கல்வியியலில் முதுகலைப்பட்டமும், ஆய்வியல் நிறைஞர் பட்டமும் பெற்றுள்ளார். சென்னையிலுள்ள தொழில்நுட்பப் பயிலகம் ஒன்றில் ஆங்கிலப் பேராசிரியையாகப் பணியாற்றி வருகிறார். இவர் தினமணி நாளிதழ் மற்றும் வேறு சில தமிழ் பத்திரிகைகளிலும் கட்டுரைகளை எழுதி வருகிறார்.

குடும்பம்

இவரது கணவர் அ.ஜோதிலிங்கம் சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவருடைய சகோதரி வெ.பைங்கிளி சேலம் , ஸ்ரீ சாரதா மகளிர் கல்லூரியில் பேராசிரியையாகப் பணியாற்றி வருகிறார். இவரது சகோதரர்கள் வெ.திருப்புகழ், இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக குஜராத் மாநிலத்திலும், வெ. இறையன்பு , இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக தமிழ்நாட்டிலும் பணியாற்றி வருகின்றனர். மற்றொரு சகோதரர் வெ.அருட்புனல் பொறியாளராகப் பணியாற்றி வருகிறார்.

நூல்கள்

  1. எண்ணப்பறவை சிறகடித்து... (செப்டம்பர் ’2004)
"https://tamilar.wiki/index.php?title=வெ._இன்சுவை&oldid=5862" இருந்து மீள்விக்கப்பட்டது