வெள்ளை தேயிலை
வெள்ளை தேயிலை | |||||||||||||||||||||
வெள்ளை தேயிலை இலைகள் (பாய் கோ யின்சென் தேயிலை) | |||||||||||||||||||||
சீன மொழி | 白茶 | ||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
Literal meaning | வெள்ளை தேயிலை | ||||||||||||||||||||
|
வெள்ளை தேயிலை (White tea) என்பது சீனாவில் பயன்படுத்தப்படும் பல வகை தேயிலைகளில் ஒன்றாகும். இது பொதுவாக கேமல்லியா சினென்சிசு தேயிலைத் தாவரத்தின் இளம் அல்லது குறைந்த அளவில் பதப்படுத்தப்பட்ட இலைகளைக் கொண்டுள்ளது.
தற்போது வெள்ளை தேயிலை குறித்த பொதுவான சர்வதேச ஏற்றுக்கொள்ளப்பட்ட வரையறை ஏதும் இல்லை. சில ஆதாரங்களின் பதப்படுத்துதல் எதுவுமின்றி வெறுமனே உலர்ந்த தேயிலைக் குறிக்க இந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறது.[1] மொட்டுகள் மலர்வதற்கு முன்பாகவும் முதிர்ச்சியடையாத தேயிலை இலைகளையும் பறித்து இயற்கையாகச் சூரிய ஒளியில் உலர வைத்துத் தயாரிக்கப்படுகிறது. மற்றொரு முறையில் தேயிலை மொட்டுகள் மற்றும் இலைகள் உலர்த்துவதற்கு முன் வேகவைக்கவோ அல்லது வறுக்கவோ படுகிறது.[2] எவ்வாறாயினும், வெள்ளை தேநீர் உருட்டவோ அல்லது ஆக்ஸிஜனேற்றப்படவோ இல்லை என்பதை பெரும்பாலான வரையறைகள் ஒப்புக்கொள்கின்றன. இதன் விளைவாக பெரும்பாலான பச்சை அல்லது பாரம்பரிய கருப்பு தேயிலை விட "மென்மையானது" என்று வகைப்படுத்தப்படுகிறது.
இருந்தபோதிலும், இனிப்பான, காய்ச்சிய வெள்ளை தேநீர் வெளிர் மஞ்சள் நிறமுடையது. தேயிலை செடியின் திறக்கப்படாத மொட்டுகளில் உள்ள வெள்ளி-வெள்ளை முடிகளிலிருந்து இதன் பெயர் உருவானது. இது இந்த தேயிலைக்கு வெண்மை நிற தோற்றத்தை அளிக்கிறது. திறக்கப்படாத மொட்டுகள் சில வகையான வெள்ளை தேநீருக்குப் பயன்படுத்தப்படுகின்றன.
இது முதன்மையாகச் சீனாவில் புஜியான் மாகாணத்தில் அறுவடை செய்யப்படுகிறது.[3] ஆனால் சமீபத்தில் கிழக்கு நேபாளம், தைவான், தாய்லாந்து, காலி (தெற்கு இலங்கை ) மற்றும் வடகிழக்கு இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகிறது.
வரலாறு
இன்று வெள்ளை தேநீர் என்று அழைக்கப்படுவது கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் தோற்றுவிக்கப்பட்டதே. வெள்ளை தேயிலை முதல் உற்பத்தி (இன்று சீனாவில் புரிந்து கொள்ளப்படுவது போல்) எப்போது தொடங்கியது என்பது குறித்து அறிஞர்கள் மற்றும் தேயிலை வணிகர்கள் பொதுவான கருத்தினை கொண்டிருக்கவில்லை. 1876ஆம் ஆண்டில் வெள்ளை தேயிலை முதன்முதலில் ஆங்கில வெளியீட்டின் மூலம் அறியப்படுகிறது. அதில் இது ஒரு கருப்பு தேயிலை என வகைப்படுத்தப்பட்டது. ஏனெனில் பசும் தேயிலை உற்பத்தியின் போது உள்ளார்ந்த ஆக்ஸிஜனேற்ற நொதிகளைக் குறைப்பதற்காக இலைகளை முதலில் வேகவைப்பது இங்குச் செயல்படுத்தப்படுவதில்லை.[4]
வெள்ளை தேநீர் பெரும்பாலும் சில்வர் டிப் பெக்கோ எனத் தேயிலை இலை தர நிர்ணய முறையின்படி சந்தைப் படுத்தப்படுகிறது. அதே போல் சீனா ஒயிட் மற்றும் புஜியன் ஒயிட் என்ற எளிய பெயர்களிலும் விற்கப்படுகிறது.[3]
கேமில்லியா டேலிய்ன்சிசின் காட்டுத் தேயிலை யுனான் மாகாணத்திலிருந்து பெறப்பட்ட தேயிலை தயார் செய்யப்படும் நுட்பத்தினைப் பயன்படுத்தி தயார் செய்யப்படுகிறது.
கலவை
கருப்பு மற்றும் பசும் தேநீர் போன்றே வெள்ளை தேநீர், கேமல்லியா சினென்சிசு தாவரத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது. இத்தாவரத்தில் காணப்படும் தாவரப் பொருட்கள் தேநீரின் ஆரோக்கிய விளைவுகளுக்குக் காரணமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இந்த தாவர ஊட்டச்சத்து தொகுப்பானது பாலிபினால்களைக் கொண்டுள்ளது.[5][6] வெவ்வேறு வெள்ளை தேயிலைகளில் வெவ்வேறு அளவில் கேட்டிசின்கள் உள்ளன. இவை ஒரு வகை பாலிபினால்கள் ஆகும். மேலும் ஒட்டுமொத்த அளவிலான செறிவு பச்சைத் தேயிலையுடன் ஒன்றிணைகின்றன. அதாவது வெள்ளை தேயிலைகளில் சில பச்சைத் தேயிலைகளில் உள்ளதைப் போலவே பாலிபினால்களின் செறிவு உள்ளது. தேயிலை தாவரத்தின் வகை, சாகுபடி நுட்பம் மற்றும் தேயிலை பதப்படுத்தப்படும் விதம் இதற்குக் காரணமாக அமைகின்றன.[7]
உற்பத்தி
வெள்ளை தேநீர் உற்பத்தி செய்வதற்கான அடிப்படை செயல்முறை பின்வருமாறு:
- புதிய தேயிலை இலை → உலர்த்துதல் (காற்று உலர்த்துதல், சூரிய உலர்த்தல் அல்லது இயந்திர உலர்த்தல்) → வெள்ளை தேநீர்[8]
வெள்ளை தேநீர், தேநீர் குழுவினைச் சார்ந்தது. இவற்றை வாணலியில் இடத்தேவையில்லை, உருட்டல் அல்லது குலுக்கல் தேவையில்லை. இருப்பினும், வெள்ளை தேயிலை உற்பத்தியில் மூலப்பொருட்களின் தேர்வு மிகவும் முக்கியமானது. மிகச் சிறந்த முடிகளுடன் கூடிய இளம் தேயிலை இலைகளைப் பறிப்பதன் மூலம் மட்டுமே உயர் தர வெள்ளை தேயிலை உருவாக்க முடியும்.[8]
மேற்கோள்கள்
- ↑ Y. Hilal and U. Engelhardt (2007). "Characterisation of white tea – Comparison to green and black tea" (PDF). www.tu-braunschweig.de. Archived from the original (PDF) on 12 ஆகஸ்ட் 2018. பார்க்கப்பட்ட நாள் 14 April 2019.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Tea". oregonstate.edu. 28 April 2014. பார்க்கப்பட்ட நாள் 23 March 2018.
- ↑ 3.0 3.1 Chow 1990
- ↑ Hanson 1878
- ↑ Dulloo, AG; Seydoux, J; Girardier, L; Chantre, P; Vandermander, J (February 2000). "Green tea and thermogenesis: Interactions between catechin-polyphenols, caffeine and sympathetic activity". International Journal of Obesity and Related Metabolic Disorders 24 (2): 252–258. doi:10.1038/sj.ijo.0801101. பப்மெட்:10702779.
- ↑ Hursel, R; Westerterp-Plantenga, MS (December 2013). "Catechin- and caffeine-rich teas for control of body weight in humans". American Journal of Clinical Nutrition 98 (6 Suppl 1): 1682S–1693S. doi:10.3945/ajcn.113.058396. பப்மெட்:24172301.
- ↑ Unachukwu, UJ; Ahmed, S; Kavalier, A; Lyles, JT (August 2010). "White and green teas (Camellia sinensis var. sinensis): variation in phenolic, methylxanthine, and antioxidant profiles". Journal of Food Science 75 (6): C541–C548. doi:10.1111/j.1750-3841.2010.01705.x. பப்மெட்:20722909. https://scholarworks.montana.edu/xmlui/bitstream/1/15184/1/Ahmed_JFS_2010_final.pdf.
- ↑ 8.0 8.1 Hui 2004
மேலும் படிக்க
- Hui, Y. H.; Meunier-Goddik, Lisbeth; Slovejg Hansen, Ase (2004). Handbook of Food and Beverage Fermentation Technology. CRC Press. p. 1000. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-203-91355-8.
- Pettigrew, Jane (2004). The Tea Companion: A Connoisseur's Guide. Running Press Book Publishers. p. 129. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7624-2150-9.
- Ho, Chi-Tang (2008). Tea and Tea Products: Chemistry and Health-Promoting Properties. CRC Press. p. 305. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8493-8082-2.
- Hanson, Reginald (1878). A Short Account of Tea and the Tea Trade. Whitehead, Morris and Lowe. p. 127. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-4021-5748-7.