வெள்ளைமாளர்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
வேம்பு

வெள்ளைமாளர் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். அவரது பாடல் ஒன்றே ஒன்று சங்கநூல் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. அது புறநானூறு 296.

பாடல் சொல்லும் செய்தி
துறை - ஏறாண்முல்லை

போருக்குச் செல்லும் நெடுந்தகையின் தேர் வந்துள்ளது. பகைநாட்டு மக்கள் இப்போதே வேப்பந்தழையை ஒடித்து வைத்துக்கொள்கின்றனர். (காயம் பட்டவர்களுக்கு விசிற வேப்பந்தழை) காஞ்சிப்பண் பாடுகின்றனர். (ஒப்பாரி வைக்கின்றனர்). காயத்தில் தடவ எண்ணெய்க் கிண்ணத்தைக் கையில் வைத்திருக்கின்றனர். வெண்சிறு கடுகுப் புகை உண்டாக்குகின்றனர். எங்கும் 'கல்' என்ற அமைதி. பகைவேந்தனையே கொன்றுவிடுவானோ?

இப்படி ஊர் நினைப்பதாகப் புலவர் பாடுகிறார்.

புலவர் பெயர்

புலவர் தம் பாடலில் இறக்கவிருப்பவர்களை எண்ணி மக்கள் முன்கூட்டியே செய்யும் செயல்களைப் பாடியுள்ளார். இது வெள்ளைச் சாவு. அதாவது வெள்ளை மாளல். மாண்டுபோதல் வெள்ளையாகத் தெரிவது. இதன் அடிப்படையில் பாடற்பொருளின் அடிப்படையில் இவருக்கு வெள்ளைமாளர் எனப் பெயர் சூட்டியுள்ளனர்.

இவரைப் பாடற்பொருளால் பெயர் பெற்ற புலவர் பட்டியலில் கொள்ளலாம்.

"https://tamilar.wiki/index.php?title=வெள்ளைமாளர்&oldid=12003" இருந்து மீள்விக்கப்பட்டது