வெல்லிங்டன் கண்டோன்மென்ட்
வெல்லிங்டன் (Wellington) என்பது தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் குன்னூர் நகரத்திற்கு அருகே அமைந்துள்ள படைவீரர்கள் குடியிருப்பு நகரமாகும். இது இந்திய இராணுவத்திற்கு சொந்தமான சென்னை இராணுவப் படைப்பிரிவு மையம் ஆகும். பீல்டு மார்சல் எனப்படும் மிகப்புகழ்பெற்ற உயர் படைத்துறை தளபதி சாம் மானேக்சா இப்பாசறையில் குடியிருந்தார் என்பது வெல்லிங்டன் பாசறையின் சிறப்பாகும். 2008-ஆம் ஆண்டு சூன் 27 அன்றுதான் சாம் மானேக்சா இப்பாசறை நகரில் காலமானார். குன்னூர் நகருக்கு அருகாமையில் வெல்லிங்டன் பாசறை நகரம் அமைந்துள்ளது [1]. இப்பகுதியின் அஞ்சல் குறியீட்டு எண் 643 231 ஆகும்.
இந்திய இராணுவத்தின் முப்படைப் பிரிவுகளைச் சேர்ந்த பீல்டு கிரேடு அலுவலர்கள் எனப்படும் உயர் இராணுவ அலுவலர்கள், நட்பு நாடுகளைச் சேர்ந்த அலுவலர்கள், பல்வேறு இந்தியக் குடிமைப்பணி அலுவலர்களுக்கான பயிற்சிகள் இங்கு அளிக்கப்படுகின்றன. பீல்டு மார்சல் சாம் மானேக்சா, பிச்சி நாட்டைச் சேர்ந்த சிட்டிவேனி ரபுக்கா, நைசீரிய நாட்டு ஒலுசெகன் ஒபாசாஞ்சோ, செருமன் நாட்டு ஆன்சு-கிரிசுட்டோப் அம்மோன், தனஞ்சய் சோசி, ரிசர்வ் வங்கி ஆளுநர் ஆர்.என். மல்கோத்ரா போன்ற ஆளுமைகள் இப்பாறையில் பயின்ற முன்னாள் மாணவர்களாவர்.
கல்லூரியின் கடந்தகாலம் ஒரு புகழ்பெற்ற காலமாக உள்ளது. தேவ்லாலியில் 1905-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட போதிலிருந்து இதன் பரம்பரை வரலாறு உள்ளது. 1907-ஆம் ஆண்டில் இது பாகித்தானிலுள்ள குவெட்டாவிற்கு மாற்றப்பட்டது. 1947-ஆம் ஆண்டு மீண்டும் இக்கல்லூரி இந்தியாவுக்குத் திரும்பியது. தற்போது இந்திய இராணுவத்தின் மூன்று படைப்பிரிவுக்கும் ஒரே கூரையின் கீழ் இணைக்கப்பட்ட பயிற்சி மையமாகத் திகழ்கிறது.
மேற்கோள்கள்
- ↑ "Wellington Cantonment Board". Archived from the original on 2019-01-29. பார்க்கப்பட்ட நாள் 2019-02-04.