வெற்றி முழக்கம் (புதினம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
வெற்றி முழக்கம்
Vetri muzakam.jpg
நூலாசிரியர்நா.பார்த்தசாரதி
நாடுஇந்தியா
மொழிதமிழ் மொழி
வகைபுதினம்
வெளியீட்டாளர்ஸ்ரீசெண்பகா பதிப்பகம், தமிழ்ப் புத்தகாலயம்
பக்கங்கள்320

வெற்றி முழக்கம் எனும் இந்நூல் நா.பார்த்தசாரதியால் எழுதப்பட்டது ஆகும். 320 பக்கங்கள் கொண்ட இந்நூல் ஸ்ரீசெண்பகா பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டுள்ளது. முதற்பதிப்பு 1961-ல் வெளிவந்தது. பாஸ்கர கவியின் சொப்பன வாசவதத்தா, கொங்குவேளின் பெருங்கதை மற்றும் உ.வே.சா. ஐயரவர்கள் எழுதியுள்ள உதயணன் சரிதச் சுருக்கம் ஆகியவற்றை தழுவி இந்நூல் எழுதப்பட்டுள்ளது.[1]

முன்னுரை

நா.பார்த்தசாரதி எழுதிய முன்னுரையில்,

உலக வாழ்க்கையில் பற்றுகள் குறைந்து, மனத்தையும் ஆசைகளையும் வெற்றி கொள்வதுதான் மெய்யான வெற்றி
என்று அவர்கள் இந்தக் காப்பியத்தின் இறுதியில் உணர்வதாக வருகிறது. இந்த இரண்டு வகை நோக்கிலும் இந்த
நூலுக்கு, 'வெற்றி முழக்கம்' என்று பேர் வைத்தது பொருத்தமானதுதான். மூன்றாவதாக இந்தக் கதையில் வரும்
அரசியல் வல்லுனனாகிய யூகி, எல்லாப் பிரச்சனைகளையும் மனத்தினாலேயே வென்று நிற்கிறான் என்பதும் ஒன்று.

என்கிறார்.

மேற்கோள்கள்

  1. நா. பார்த்தசாரதி. வெற்றி முழக்கம். சென்னை: தமிழ் புத்தகாலயம்.

வெளியினைப்புகள்