வெப்பம் குளிர் மழை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
வெப்பம் குளிர் மழை
திரைப்படச் சுவரொட்டி
இயக்கம்பாசுகல் வேதமுத்து
தயாரிப்புதிரௌ
கதைபாசுகல் வேதமுத்து
இசைசங்கர் ரங்கராஜன்
நடிப்பு
ஒளிப்பதிவுபிரித்வி இராஜேந்திரன்
படத்தொகுப்புதிரௌ
கலையகம்ஆசுடேக் எஃப். டி. எஃப். எசு புரொடக்சன்சு
விநியோகம்சிறீ சுப்புலட்சுமி மூவிசு
வெளியீடு29 மார்ச்சு 2024 (2024-03-29)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வெப்பம் குளிர் மழை (Veppam Kulir Mazhai) என்பது 2024 ஆம் ஆண்டு இந்தியத் தமிழில் வெளிவந்த சமூக- பரபரப்பூட்டும் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை பாசுகல் வேதமுத்து எழுதி இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் திரௌ இசுமத் பானு, எம். எசு. பாசுகர் ஆகியோர் நடித்திருந்தனர்.[1] இத்திரைப்படத்தை ஆசுடேக் எஃப். டி. எஃப். எசு புரொடக்சன்சு என்ற பதாகையின் கீழ் திரௌ தயாரித்தார்.[2]

கதைச்சுருக்கம்

சிவகங்கை மாவட்டத்திலிருக்கும் கிராமம் ஒன்றில் வசிக்கும் பெத்தபெருமாள் (திரௌ), பாண்டி (இஸ்மத் பானு) இணையருக்குத் திருமணமாகி ஐந்து ஆண்டுகளாகியும் குழந்தை இல்லை. இப்பிரச்சினையை மையமாகக் கொண்டு பெத்தபெருமாளின் எதிரிகள் அதைக் கிண்டலடிக்கும் கருவியாகப் பயன்படுத்துகின்றனர். அதே நேரத்தில் பெத்தபெருமாளின் அக்கா, அவரை விட 15 வயது குறைவான தனது மகளை அவருக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க முயற்சிக்கிறார். பேரக் குழந்தை வேண்டும் என்பதற்காக, அவரது தாயாரது விருப்பமும் அதுவாகவே இருக்கிறது. இப்படி வெறும் சமுதாயம் மட்டுமல்ல, நெருங்கிய உறவினர்களாலும் குழந்தை இல்லாத இணையர்கள் எதிர்கொள்ளும் புற, அகப் பிரச்னைகளைக் மையமாக வைத்து நகர்வதே `வெப்பம் குளிர் மழை'யின் கதையாகும்.

நடிகர்கள்

  • பெத்தபெருமாள் கதாபாத்திரத்தில் திரௌ [3]
  • பாண்டியாக இஸ்மத் பானு
  • திரி அய்யாவாக எம். எசு. பாசுகர்
  • பொட்டு வேடத்தில் இராமர்
  • தேவ் அபீபுல்லா- காந்தி
  • அற்புதம்மாள் வேடத்தில் விஜயலட்சுமி

தயாரிப்பு

இத்திரைப்படம் பாசுகல் வேதமுத்து இயக்கிய முதற் திரைப்படமாகும்.[4][5]

வரவேற்பு

கல்கிஆன்லைனின் இராகவ் குமார் 5 இற்கு 3.5 நட்சத்திரங்கள் என மதிப்பிட்டு" இதுபோன்ற ஒரு உணர்வுப்பூர்வமான கருத்தை எடுத்து சரியான நடிகர்களைத் தேர்ந்தெடுத்ததற்காக படத்தைப் பாராட்டுங்கள்" என்று குறிப்பிட்டார். டைம்ஸ் நவ் விமர்சகர் 5 இற்கு 3.5 என்று மதிப்பிட்டதுடன் "முன்னணி நடிகர்கள் திரௌ, இஸ்மத் பானு ஆகியோர் குறிப்பாக உணர்ச்சிப்பூர்வமான காட்சிகளில் சிறந்த நடிப்பை வழங்கியுள்ளனர்", என்று கூறினார்.[6][7]

மேற்கோள்கள்

  1. B, Jayabhuvaneshwari (2024-02-05). "Veppam Kulir Mazhai: The parenthood predicament". The New Indian Express (in English). பார்க்கப்பட்ட நாள் 2024-03-24.
  2. (in ta)தினகரன். 4 பெப்பிரவரி 2024 இம் மூலத்தில் இருந்து 14 மார்ச்சு 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240314183512/https://cinema.dinakaran.com/wheneverchildtalks-problem-coldrain/. 
  3. "இளம் தம்பதிகளின் குழந்தையின்மை பிரச்சனையை பேசும் 'வெப்பம் குளிர் மழை'". Virakesari.lk (in English). பார்க்கப்பட்ட நாள் 2024-03-24.
  4. "Pascal's Tamil film talks about the pressure that childless couples face". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 5 பெப்பிரவரி 2024 இம் மூலத்தில் இருந்து 14 மார்ச்சு 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240314183511/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/pascals-tamil-film-talks-about-the-pressure-that-childless-couples-face/articleshow/107418462.cms?from=mdr. 
  5. Nakkheeran. 5 பெப்பிரவரி 2024 இம் மூலத்தில் இருந்து 14 March 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240314183512/https://www.nakkheeran.in/cinema/cinema-news/veppam-kulir-mazhai-movie-update. 
  6. ராகவ்குமார் (2024-03-28). "விமர்சனம்: குழந்தையின்மை பிரச்னையை சொல்லும் 'வெப்பம் குளிர் மழை'!". Kalki Online. பார்க்கப்பட்ட நாள் 2024-03-28.
  7. "Veppam Kulir Mazhai Review: A Thought-provoking Film That Speaks Through Its Subtleties!". டைம்ஸ் நவ் (in English). 2024-03-29. பார்க்கப்பட்ட நாள் 2024-03-29.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=வெப்பம்_குளிர்_மழை&oldid=32822" இருந்து மீள்விக்கப்பட்டது