வெண்முகிலன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
வெண்முகிலன்
இயற்பெயர்/
அறியும் பெயர்
வெண்முகிலன்
பிறந்ததிகதி சூலை 15, 1936 (1936-07-15) (அகவை 88)
பிறந்தஇடம் நரசிங்கபுரம் மின்னல், வேலூர் மாவட்டம், தமிழ்நாடு,  இந்தியா
பணி எழுத்தாளர்
ஆசிரியர்
குறிப்பிடத்தக்க விருதுகள் புதுவை தமிழ் இலக்கிய மன்றம் விருது (2002),பாவேந்தர் விருது, தமிழ்தோன்றல் விருது
பெற்றோர் அய்யாதுரை , பச்சையம்மாள்

வெண்முகிலன் தமிழக எழுத்தாளர் ஆவார்.

கல்வி

வேலூர் மாவட்டம், அரக்கோணம் வட்டம் நரசிங்கபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையும், மின்னல் ஊராட்சி ஒன்றிய உயர் தொடக்கப் பள்ளியில் ஆறு மற்றும் ஏழாம் வகுப்பு கற்று தேர்ந்தார்.

குடும்பத்தின் வறுமை சூழ்நிலையால் கற்கும் கல்விக்கு தடை ஏற்பட்டது.

திருப்பனந்தாள் கல்லூரியில் 4 ஆண்டுகள் படித்து வித்வான் பட்டம் பெற்றார்.

பணி

தமிழாசிரியர் கண்ணபிரான் அவர்களின் வழிகாட்டுதல்படி அம்பத்தூர் இராமசாமி முதலியார் பள்ளியில் 4 ஆண்டுகள் பணியாற்றுகின்ற வாய்ப்புக் கிடைத்தது, அதன்பின் மாநகராட்சி பணி செய்யும் ஆணை பெற்றார். 1964 ல் புரசைவாக்கம் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியிலும், 1968 ல் சிந்தாதிரிப்பேட்டை மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியிலும், 1975 முதல் 1995 வரை பெரம்பூர் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றினார்.

இலக்கியப் பணி

28 அளவுக்கும் மேலான நூல்களை எழுதியுள்ளார்.

அணிந்துரை வழங்கியுள்ள தமிழறிர்கள்

பரிசும் பாராட்டும்

  • 2002 புதுவை தமிழ் இலக்கிய மன்றம் அறிவெனும் கருவி எனும் நூலுக்கு கல்வி அமைச்சர் முதல் பரிசு அளித்துள்ளார்
  • பண்ணைத் தமிழ்ச் சங்கத்தின் பாவேந்தர் விருது பெற்றுள்ளார்.
  • மங்கலங்கிழார் தமிழ் இலக்கிய மன்ற விருது.
  • திருவள்ளூர் தவச்சாலை நிறுவனத்தின் விளங்கிய அறிவர் விருது.
  • திருவள்ளூர் பச்சையப்பனாரின் கல்விக்காவலர் காமராசர் விருது.
  • தாய் மண் தமிழ் இலக்கிய மன்றத்தின் புலமைச் சிகரம் விருது.
  • இலக்கியச் சோலை திங்களிதழின் தமிழ்தோன்றல் விருது
  • காந்தி காமராசர் இலக்கிய அமைப்பின் மனித நேய முரசு விருது.
  • தமிழ் இலக்கிய ஆர்வலர் பேரவையின் தேசியகவி பாரதி விருது.

வெண்முகிலன் காவிங்களில் மானுடம்

பேராசிரியர் கவிஞர் கவியன்பன், வெண்முகிலநின் மனவிலங்கு, அகப்பையை வெல்ல ஓர் அறிவாலயம் என்ற இரண்டு நூல்களையும் வெண்முகிலன் காவிங்களில் மானுடம் எனும் தலைப்பில் ஆய்வு செய்து மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் எம்.ஃபில் பட்டம் பெற்றுள்ளுள்ளார்.

படைப்புகள்

கவிதை நூல்கள்

  1. மனவிலங்கு
  2. அகப்பையை வெல்ல ஓர் அறிவாயுதம்
  3. நிமிர்ந்து நில் துணிந்து முன்னேறு

புதினங்கள்

  1. அணையா நெருப்பு
  2. வேர்ச்செல்
  3. கனிமொழி
  4. மனக்கோணல்
  5. பாசச்சூழல்

இளைஞர்க்குரியவை

  1. துடைக்கற்களா படிக்கற்களா
  2. பத்துப்படிகள்
  3. ஏற்றம் தரும் எண்ணங்கள்
  4. வளம்தரும் வற்றாத செல்வங்கள்
  5. உயர்ந்தவை ஒன்பது
  6. உள்ளத்தனையது உயர்வு
  7. அன்பெனும் அணிகலன்
  8. தலைக்குப் பெருமை
  9. ஏன் இன்னும் சோம்பல்
  10. அறிவெனும் கருவி
  11. மனமெனும் கருவூலம்
  12. ஊக்கமெனும் உடைமை
  13. மனிதப் பதர்கள்
  14. மங்கலங்கிழார் அறிவுத்திருக்கோயில்
  15. நானொரு மாணாக்கன்
  16. வாழும் மனிதர்
  17. மாண்புறு மனிதநேயர் மங்கலங்கிலார்
  18. எண்ணங்களால் விண்ணைத்தொடு.

மேற்கோள்கள்

1.வெண்முகிலன் முத்துவிழா மலர் நாள் 05/02/2017 ஆசிரியரின் படைப்புகள்

2.https://books.google.co.in/books/about/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%89.html?id=sySTnQAACAAJ&redir_esc=y

"https://tamilar.wiki/index.php?title=வெண்முகிலன்&oldid=5878" இருந்து மீள்விக்கப்பட்டது