வெஞ்சமாங்கூடலூர் கல்யாண விகிர்தீசுவரர் கோயில்
Jump to navigation
Jump to search
தேவாரம் பாடல் பெற்ற வெஞ்சமாங்கூடலூர் கல்யாண விகிர்தீசுவரர் கோயில் | |
---|---|
பெயர் | |
புராண பெயர்(கள்): | வெஞ்சமாக்கூடல் |
பெயர்: | வெஞ்சமாங்கூடலூர் கல்யாண விகிர்தீசுவரர் கோயில் |
அமைவிடம் | |
ஊர்: | வெஞ்சமாங்கூடலூர் |
மாவட்டம்: | கரூர் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | கல்யாண விகிர்தேஸ்வரர், விகிர்த நாதேஸ்வரர் |
தாயார்: | பண்ணேர் மொழியம்மை, மதுர பாஷிணி,விகிர்த நாயகி |
தல விருட்சம்: | வில்வம் |
தீர்த்தம்: | விகிர்த தீர்த்தம், குடவனாறு |
பாடல் | |
பாடல் வகை: | தேவாரம் |
பாடியவர்கள்: | சுந்தரர் |
வெஞ்சமாங்கூடலூர் விகிர்தீஸ்வரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் கொங்கு நாட்டுத் தலங்களில் ஒன்றாகும்.
அமைவிடம்
சுந்தரரால் பாடல் பெற்ற இத்தலம் கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
தொன்நம்பிக்கை
இத்தலத்தில் சுந்தரரின் பாட்டில் மகிழ்ந்த இறைவன் கிழவி வேடம் பூண்டு சுந்தரரின் பிள்ளைகளை ஈடுகாட்டிப் பொன் கொடுத்தார் என்பது தொன்நம்பிக்கை.
பெயர்க்காரணம்
இந்த கோவில் வெஞ்சமன் எனும் வேட்டுவ மன்னனால் கட்டப்பட்டது.மேலும் இத்தலம், வெஞ்சமன் என்னும் வேட்டுவ மன்னன் ஆண்டதாலும்; அமராவதியின் கிளை நதியான சிற்றாறு, அமராவதியுடன் கூடுமிடத்தில் உள்ளதாலும் வெஞ்சமாக்கூடல் என்று பெயர் பெற்றது.[1]
வழிபட்டோர்
இது தேவேந்திரன் வழிபட்ட தலமாகும். [2]
மேற்கோள்கள்
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2016-02-29.
- ↑ தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம் ; பக்கம்; 357
படத்தொகுப்பு
வெஞ்சமாங்கூடலூர் கல்யாண விகிர்தீசுவரர் கோயில் | |||
---|---|---|---|
முந்தைய திருத்தலம்: திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயில் |
தேவாரப்பாடல் பெற்ற கொங்கு நாட்டுத் திருத்தலங்கள் | அடுத்த திருத்தலம் கொடுமுடி மகுடேசுவரர் கோயில் |
|
தேவாரப்பாடல் பெற்ற கொங்கு நாட்டுத் திருத்தல எண்: 5 | தேவாரப்பாடல் பெற்ற திருத்தல எண்: 5 |