வீ. சிவசுப்பிரமணியம்¨
நீதியரசர் வீ. சிவசுப்பிரமணியம் | |
---|---|
நீதியரசர், இலங்கை மீயுயர் நீதிமன்றம் | |
பதவியில் 1966–1970 | |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 14 மார்ச்சு 1908 |
இறப்பு | 5 திசம்பர் 1985 | (அகவை 77)
படித்த கல்வி நிறுவனங்கள் | யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஆனந்தா கல்லூரி |
தொழில் | வழக்கறிஞர் |
இனக்குழு | இலங்கைத் தமிழர் |
நீதியரசர் வீரவாகு சிவசுப்பிரமணியம் அல்லது சிவசுப்பிரமணியம் (Veeravagu Sivasubramaniam) (also spelt Sivasupramaniam) (14 மார்ச் 1908 – 5 திசம்பர் 1985) இலங்கைத் தமிழரான இவர் புகழ்பெற்ற வழக்கறிஞரும், நீதிபதியுமாவார். இவர் நீதித்துறையின் கீழமை நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றங்களில் பணியாற்றி, பின்னர் இலங்கை உச்ச நீதிமன்ற அமைச்சகத்தின் செயலாளர் பதவிக்கு உயர்ந்து, பின் இலங்கை மீயுயர் நீதிமன்றத்தின் நீதியரசராக 1966 முதல் 1970 வரை பணியாற்றினார்.[4]
குடும்பம் & கல்வி
இவரது தந்தை கே. எஸ். வீரவாகு யாழ்ப்பாணம் நகரத்தில் உள்ள வண்ணார்பண்ணையில் அரசு அனுமதி பெற்ற பத்திரத்துறை பதிவாளர் ஆவார். நீதியரசர் சுப்பிரமணியனுக்கு நான்கு சகோதரர்களும், இரண்டு சகோதரிகளும் இருந்தனர்.
இவர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மற்றும் கொழும்பு ஆனந்தா கல்லூரிகளில் பயின்று பின்னர் சட்டம் பயின்றார்.[1][2][3] சிவசுப்பிரமணியம், கொழும்பு தியாகராசரின் மகளான மனோன்மணியை மணந்து மூன்று ஆண் குழந்தைகளுக்கு தந்தையானர்.
தொழில்
சட்டம் பயின்ற சிவசுப்பிரமணியம், நீதிமன்றத்தில் வாதாட, 8 மார்ச் 1933 அன்று தம்மை ஒரு வழக்கறிஞராக பதிவு செய்து கொண்டார். [1][2][3]சிவசுப்பிரமணியம் முதன்முதலில் யாழ்பாண நீதிமன்றஙகளில் வழக்கறிர் பணி செய்தார்.[1][2][3] 27 பிப்ரவரி 1941இல் இலங்கை நீதித்துறையில் பணி சேர்ந்து, மாத்தறையில் நீதித் துறை நடுவர் பணி செய்தார். [1][2][3] 1962-இல் மாவட்ட நீதிபதி ஆனார். 1966-இல் சிவசுப்பிரமணியம், இலங்கை உச்ச நீதிமன்றத்தின் நீதியரசராக நியமிக்கப்பட்டார்.[2][3]
1970-இல் ஓய்வு பெற்ற சிவசுப்பிரமணியம், இலங்கை சட்ட ஆணையத்தின் உறுப்பினராகவும், பண்டாரநாயக்கே பன்னாட்டு கல்வி மையத்தின் புரவவலர்களில் ஒருவராக பணியாற்றினார்.
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 Arumugam, S. (1997). Dictionary of Biography of the Tamils of Ceylon. பக். 205–206. http://www.noolaham.org/wiki/index.php?title=Dictionary_of_Biography_of_the_Tamils_of_Ceylon.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 Maniccavasagar, Chelvatamby (12 March 2003). "Justice V. Sivasubramaniam remembered : he was an ornament to the Judiciary". Daily News (Sri Lanka) இம் மூலத்தில் இருந்து 12 அக்டோபர் 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20111012043007/http://www.dailynews.lk/2003/03/12/fea06.html.
- ↑ 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 Maniccavasagar, Chelvatamby (23 March 2003). "Justice Sivasubramaniam maintained a high degree of judicial statesmanship". The Island, Sri Lanka இம் மூலத்தில் இருந்து 4 மார்ச் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304053259/http://www.island.lk/2003/03/23/opinio01.html.
- ↑ Justice V. Sivasubramaniam remembered : he was an ornament to the Judiciary